Tuesday, April 27, 2010

நடந்ததெல்லாம் நன்மைக்கே...

இன்றைய நாள் எனக்கு சரியாக போகவில்லை. காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்த்து விட்டேனோ என்று ஞாபகப் படுத்த முயல்கிறேன். முடியவில்லை.

காட்சி 1:


காலையிலிருந்து முகம் தெரியாத நபரிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணமாகவே இருகின்றது. அவள் என்னை காதல் செய்கிறாளாம். இதில் என்ன வேடிக்கை என்றால் என்னை அவளுக்கு மிக நன்றாக தெரியும் என சொல்கிறாள். அதே சமயம், எனக்கும் அவளை நன்றாகத் தெரியும் என்கிறாள். சொன்னா நம்புங்க, எனக்கு பெண் நண்பர்கள் மிகக் குறைவு. சிறு வயதிலிருந்தே என் வகுப்பறையில் சேர்ந்து படித்த மாணவிகளுடன் கூட பேச மாட்டேன். மின்னலே 'மேடி' சொல்வது போல 'எனக்கு இந்த பொண்ணுகனாளே ஒரே அலர்ஜி. அவங்களுக்காக டைம் வேஸ்ட் பண்றது மணி வேஸ்ட் பண்றது எல்லாம் பிடிக்காது', நான் இந்த ரகம். அது மட்டும் இல்லாமல் my kind of girl-ஐ நான் இன்னும் பார்க்கவில்லை.

இந்த சதிகாரி என் பெயர், நான் வசிக்குமிடம் அத்தனையும் சரியாக சொல்கிறாள். நான் பல முறை கேட்டுப் பார்த்தும் அவளது அடையாளத்தை வெளிபடுத்த மறுத்தாள். உண்மையிலேயே, இதனால் எனக்கு இன்று வேலையே ஓடவில்லை (மனசாட்சி: இல்லைனாலும்). என்னையும் ஒரு பெண் விரும்புகிறாள் என்று நினைக்கையில் 'காலரைத்' தூக்கி பெருமிதம் கொள்கின்றேன். அதே வேளையில், இது உண்மை எனும் பட்சத்தில் இப்படியும் ஒரு பேண்ணா என கவலையாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அருவருப்பாக உள்ளது. காரணம், நீங்கள் அவளது குறுஞ்செய்திகளை வாசித்திருக்க வேண்டும். கௌதம் மேனன் படம் அதிகம் பார்ப்பாள் போலும். இதோ உங்களுக்காக சில:

  • Hello darling, Miss you so much dear. i wish u are with me now so that I can kis you deep.

  • Ok la. I want to be frank with you. I want you to be my boyfriend. Can or not?

  • I want to have a romantic dinner with you and make love to you.

  • Yes, Yoga darling. I know you and love you very much.

  • You light up my life, you give me hope.


  • நான் எவ்வளவோ கெஞ்சி கடைசியில் ஒரு வழியாய் அவள் பெயரை மட்டும் சொன்னாள், ராஜ் என. இது ஆண் பெயரல்லவா.

    ஒரு வேளை இது ஒரு ஆணாக இருந்து, நான் ஒரு பெண் என எண்ணி இந்த கவலைக்கிடிமான சூழ்நிலைக்கு தள்ளப்படேனோ...
    ஒரு வேளை நிஜமாலுமே எனக்கு இப்படி ஒரு 'secret admirer' இருப்பாளோ...
    ஒரு வேளை எனது நண்பர்களில் யாரோ ஒருவர் இப்படி என்னிடம் விளையாடுகிறார்களோ...
    ஒரு வேளை நான் 'gay' என்று இவன் நினைத்திருப்பானோ...

    இப்படி பல 'ஒரு வேளைகள்'...

    காட்சி 2:


    அடுத்து, முகப்புத்தகத்தில் (Facebook) ஒருவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. சின்ன விசயம் தான். அவர் ஒரு சூர்யா ரசிகன். வழக்கம் போல சூர்யாவின் வீடியோ ஒன்றைப் பற்றிய விவாதம் ஏற்பட, அதற்கு நான் அண்ணன் காவுண்டமணியின் பாணியில் ஒரு கருத்து சொன்னேன். அதற்கு அந்த நபர் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறினார். ஆதலால், அவருக்கு பதில் கூறாமல் நான் புறக்கணித்தேன். என்ன நினைத்தார் என தெரியவில்லை. தனி மடலில் (chat) நான் ஏன் அவருக்கு பதில் சொல்லவில்லை என கேள்வி எழுப்பினார். அவருக்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என வற்புருத்தினார்; எச்சரிக்கைக் கூட செய்தார். நேரம் ஆக ஆக அவரது பேச்சு அனாவசியமாகத் தெரிந்தது. அந்த விசயத்திலிருந்து வெளிவந்து தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கினார் (personal attack). நம் பொருமைக்கும் ஒரு எல்லை இருக்கும் அல்லவா. கடும் சினம் எனக்கு. அவருடன் மேற்கொண்டு பேசாமல் அவரது ஃப்ரோபைளை துண்டித்தேன் (disconected his profile).

    மீண்டும் அவர் எனக்கு நண்பராக அழைப்பிதழ் விடுத்தார். சற்று கோவம் தெளிந்த நான் அதனை எற்றுக் கொண்டேன். தன் செயலை எண்ணி பல முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தொலைப்பேசி எண்களைக் கூட பரிமாறிக் கொண்டோம். மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுசன், மன்னிகிறவன் அதை விட பெரிய மனுசன் என விருமாண்டி கமல் சொன்னது போல நான் பெரிய மனுசனாகி அவரை மன்னித்து விட்டேன்.

    காட்சி 3:


    நளை அதிகாலை எனக்கு பிடித்த Barcelona அணி Inter Milan அணியை அரை இறுதி இரண்டாம் சுற்றில் சந்திக்கவிருக்கிறது. முதல் சுற்றில் Inter Milan மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்றது. எனவே, நாளை விடியற்காலை நடக்கவிருக்கும் போட்டுயில் இரண்டுக்கு சூழியம் என்ற கோல் கணக்கில் Inter Milan-ஐ தோற்கடித்தால் இறுதிச் சுற்றுக்கு எனது அணி தகுதி பெறும். அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. எது எப்படியோ, இந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என நம்புகின்றேன். காலையிலிருந்து இதை நினைத்துக் கொள்ளுகையில் ஒரு அச்சம் மனதில் இருந்து தொலைக்கிறது. இதில் Barcelona அணி கண்டிப்பாக ஜெயித்து இறுதி சுற்றிலும் வெற்றி வாகை சூடி, தனது கடந்த ஆண்டின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள இறைவணை வேண்டுகிறேன். எனக்காக நீங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.


    ஒரே நாளில் எத்தனை எண்ணங்கள், சங்கடங்கள் மற்றும் புது புது அனுபவங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விசயங்களும் நன்மைகே என எண்ணி, அதில் நல்லதைப் பிழிந்து கெட்டதை அகற்றுவோமானால் சீருடன் வாழலாம். சில மாதங்கள் கழித்து, இதனை மீண்டும் படிக்கையில் கண்டிப்பாக சிரித்துக் கொள்வேன் என்பது உறுதி.

    பி.கு நான் எழுதி சில நட்கள் ஆகிற்று. அதான் இந்த மொக்கை பதிவின் காரணம்.

    11 comments :

    1. yaar antha surya rasigan?

      ReplyDelete
    2. @Anon

      அதற்கு முன்பு, நீங்கள் யார் என்று சொல்லுங்கள். ஹிஹி

      ReplyDelete
    3. ////ஒரே நாளில் எத்தனை எண்ணங்கள், சங்கடங்கள் மற்றும் புது புது அனுபவங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விசயங்களும் நன்மைகே என எண்ணி, அதில் நல்லதைப் பிழிந்து கெட்டதை அகற்றுவோமானால் சீருடன் வாழலாம். சில மாதங்கள் கழித்து, இதனை மீண்டும் படிக்கையில் கண்டிப்பாக சிரித்துக் கொள்வேன் என்பது உறுதி./////

      .......ஒரே நாளில் உண்டான எண்ணங்கள், சம்பவங்கள், அனுபவங்கள் வைத்து நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்!


      ......

      ReplyDelete
    4. எனக்கும் கல்லூரி நாட்களில் இப்படி ஒரு பெண்ணிடம் இருந்து நிறைய மெயில்கள் வரும். அப்போது என் நண்பர்களின் குறும்புக்கு அளவே கிடையாது. அதனால் யாரோ ஒருவன்தான் விளையாடுகிறான் என்று விட்டுவிட்டேன். பின் இரண்டாண்டுகள் கழித்து என் சக தோழி (அவள் வேற டிபார்மென்ட்) ஒருத்தியிடம் இது பற்றி கூறினேன். அவள் நீ இன்னும் மறக்கலயாடா? அது நான்தான், still i love you என்றாள். எனக்கு தூக்கிவாரி போட்டது. உங்கள் பதிவை படித்ததும் எனக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது. நன்றி தல....

      ReplyDelete
    5. தல காட்சி ஒன்னு சூப்பரு... உங்களுக்குள்ளேயும் காதல் வந்துருச்சி போல... வாழ்த்துக்கள்

      ReplyDelete
    6. @Chitra

      உங்கள் பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி. இனிமே அடிக்கடி வாருங்கள். :)

      ReplyDelete
    7. @Bala

      உங்கள் கதை நல்லா இருக்கே... உங்கள் சக தோழியை special தோழியாய் ஏற்றுக்கொண்டீரா இல்லையா???இதைப் பற்றி ஒரு பதிவு போடலாமே...

      ReplyDelete
    8. @ராஜா

      காதலா, எனக்கா??? அதெல்லாம் ஒன்றும் இல்லை. என் மனசு கல்லுங்க... ஹிஹிஹி

      ReplyDelete
    9. அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இன்றும் எனக்கு அந்த நபரிடமிருந்து குறுஞ்செய்திகள் வந்தன. அது ஒரு 'அவன்' தான். பிரச்சனை என்னன்னா, அவனுக்கு என்னைப் பிடித்திருகிறதாம்... நான் இரயிலில், பேருந்தில் அதிகம் பிரயானம் செய்வேன். என்றோ ஒரு நாள் அவனைச் சந்தித்திருக்கிறேன் போலும். எப்படியோ என் தொலைபேசி எண்களை குறித்துக் கொண்டு என்னை இப்படி தொல்லை செய்கிறான். இது எங்கே போய் முடியும் என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

      பி.கு நாட்டுல இப்படியும் திரியுதுங்க பாருங்க... எனக்கு 'இந்த' மாதிரி ஆட்களைப் பிடிகவே பிடிக்காது... :x

      ReplyDelete
    10. @Yoganathan.N
      என்னா சார்.. பக்கத்தில இருந்துட்டு , எங்களை பார்க்க வரமாட்டீங்கிறீங்க?..

      ReplyDelete
    11. @பட்டாபட்டி

      //பக்கத்தில இருந்துட்டு//

      புரியலையே...
      வருகைக்கு நன்றி நண்பரே... அடிக்கடி வந்துட்டு போங்க... :)

      ReplyDelete