Tuesday, April 6, 2010

'ஃபார்முலா' 2-வில் அஜித் - வேறுபட்ட கருத்துக்கள்

இன்னும் சில தினங்களில் (ஏப்ரல் 16) 'ஃபார்முலா' 2 கார் பந்தயம் துவங்கும் பட்சத்தில், சில நாட்களாக மனதில் உருத்திக் கொண்டிருக்கும் விசயத்தை இந்த பதிவில் பகிர்கிறேன்.


அஜித் அவர்கள் இந்த முறை இக்கார் பந்தயத்தில் கலந்து கொள்வது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர். இவரது பங்கேற்பு பற்றி ரசிகர்கள் மத்தியிலும் சரி, பொது மக்களிடமிருந்தும் சரி, கலவையான கருத்துக்கள் உலா வந்த வண்ணமாக உள்ளன. இதுவரை நான் பார்த்த, கேட்ட, அறிந்த அனைத்து கருத்துக்களையும் தொகுத்துள்ளேன். இதனை மூன்று பிரிவினராக வகைப்படுத்தி, அதிலும் ரசிகர் கருத்து, மக்கள் கருத்து என மேலும் பிரித்துள்ளேன்.


முதல் பிரிவினர் - இந்த பிரிவினர் முழு ஆதரவு தருகின்றனர்

 • ரசிகர்கள்

 • "கார் பந்தயம் என்றால் சும்மாவா... எத்தனை 'ரிஸ்க்க்'. இந்த மனுஷன் நம் நாட்டிற்கு பெருமை தேடித் தர முயன்றுக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத் தக்கச் செயலே. அஜித் ரசிகனாக இருப்பதில் பெருமைப் படுவது மட்டுமில்லாமல், இவரது வெற்றிக்குக் கடவுளை பிரார்த்திக்கிறோம். இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வந்தாலும் பரவாயில்லை. யாரைப் பற்றியும் எதனைப் பற்றியும் கவலை வேண்டாம். இப்போதைக்கு கார் பந்தயத்தில் கவனம் செலுத்துங்கள். நீ ஆடு தல... உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்", என்கின்றனர்.

 • பொது மக்கள்

 • "மிகவும் ஆபத்தான விளையாட்டு. இவரது மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் வெற்றி பெருவாரானால், நமக்கெல்லாம் அது பெருமைச் சேர்க்கும் சாதனை அல்லவா... இதில் வெற்றியடைவதும் தோல்வியடைவதும் அப்பாற்பட்ட விசயம். தமிழ் நாட்டு பிரதிநிதியாக இவர் கலந்து கொள்கிறாரே, அதுவே போதும். அஜித்திற்கு ஒரு 'சல்யூட்'. ஜெயிப்பார் என நம்புவோம். வாழ்த்துகள். ஆல் தி பெஸ்ட்...", என்று ஊக்கமும் உருதுணையும் அளிக்கின்றனர்.


  இரண்டாம் பிரிவினர் - இவர்கள் சற்று நடுநிலை பார்வையுடையவர்கள்

 • ரசிகர்கள்

 • "இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இவரது படங்களுக்கு மட்டுமே நாங்கள் ரசிகர்கள். தல, கடைசி படம் சரியா போகல... இந்த நேரத்தில் ஏன் இந்த திடீர் முடிவு? வருடத்திற்கு இரண்டு படங்கள் பண்ணுங்க... பந்தயத்தில் ஏதாவது ஆகிவிட்டால், நாங்கள் எல்லாம் என்ன பண்ணுவோம்... எங்கே போவோம்... கப்பல் இல்லாத துறைமுகமா, தல அஜித் இல்லாத திரையுலகமா... நீங்கள் இல்லாத திரைத் துறையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.", என்று புலம்புகின்றனர்.

 • பொது மக்கள்

 • "பேசாம இவர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தலாம். நமக்கு வேண்டியது இவரிடமிருந்து சுவாரிசியமான, ஜனரஞ்சக படங்கள் மட்டுமே. குடும்பம், குழந்தை என்றாகிவிட்டது. இந்த தருனத்தில், இப்பேற்பட்ட 'சீரியஷான" போட்டிகள் எல்லாம் அவசியம் இல்லை. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் மாதிரி ஆகிவிட்டது இவரது நிலை...", என்கின்றனர்.


  மூன்றாம் பிரிவினர் - வெறும் வாய்ச் செவடால் ஆசாமிகள்

 • ரசிகர்கள்

 • எனக்கு தெரிந்து ரசிகர்கள் இந்த பிரிவில் வரவில்லை. முதலாம் அல்லது இரண்டாம் பிரிவுகளில் மட்டுமே இவர்கள் அடங்குவர்.

 • பொது மக்கள்

 • "ஜெயிச்சிட்டாலும்... எதற்கு இவருக்கு இந்த வீர விளையாட்டு? இப்போ இவரை கலந்துக்கச் சொல்லி யார் அடிச்சா? இவர் ஜெயிப்பது சாத்தியமே இல்லை. கடைசி இரு படங்கள் சரியாக போகவில்லை. அதனால், கார் பந்தயங்களில் கலந்து கொள்கிறார். பணம் நிறைய இருக்கு போலும். அதான் இப்படி செலவு செய்கிறார். சில வருடங்களுக்கு முன்னால் இதையே தான் செய்தார். படங்கள் சரியாக போகவில்லை, கார் பந்தயங்களில் நாட்டம் செலுத்தினார். மீண்டும் நடிக்க வந்தார். இவர் ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன...", என கேலியும் கிண்டலுமாக பேசுகிறார்கள்.


  கடைசி பிரிவினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு மனிதன் ஒரு முயற்சியில் இறங்கும்போது, நீங்கள் ஆக்கமும் ஊக்கமும் தராவிட்டாலும், அவர்களது மனம் நோகும் அளவிற்கு முட்டுக்கட்டையாக பேசுவது சரியல்ல. உங்களது அபசகுணமான பேச்சு அவர்களை மன உளச்சளுக்கும் வீழ்ச்சியிலும் ஆளாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. தட்டிக் கொடுக்காவிட்டாலும் எட்டி மிதிக்காமல் இருப்பதே சிறந்தது.

  குறிப்பாக பிற நடிகர்களின் ரசிகர்கள் இந்த பிரிவில் அடங்குவர். எத்தனை விஜய், விக்ரம் அல்லது சூர்யா ரசிகர்கள் இப்போட்டியில் அஜித்தின் பங்கேற்பிற்கு ஆதரவு தருகின்றனர் என்பது கேள்விக்குறியே. இவர்களது பார்வையில், அஜித் ஒரு நடிகராக பார்க்கப்படுகிறாரே தவிர 'ஃபார்முலா' 2-வில் பங்கேற்க்கும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக அல்ல; இந்திய பிரஜையாக அல்ல. இவர்களது எண்ணம் முழுதாக மாற வேண்டும். அனைவரது ஆசியும் பிரார்த்தனையும் வெற்றி பெற அஜித் அவர்களுக்கு தேவை.


  நான் எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக முதலாம் ரசிகர் பிரிவே. அஜித் ரசிகனாக எனக்கு இது பெருமை படக்கூடிய விசயம். ஒரு தமிழன் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகின்றது. அஜித் கண்டிப்பாக வெற்றி வாகை சூடுவார் என நம்பிக்கை இருக்கிறது. அதே சமயத்தில், அக்டோபர் முதல் நல்லதோர் கூட்டணியுடன் படம் பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு இருக்கிறது. அவரது பாதுகாப்பிற்கும் வெற்றிக்கும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 'குட் லக்' தல...

  இதில் நீங்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்? பின்னூட்டத்தில் போடலாமே...

  பி.கு படங்களுக்கு starajith.com தளத்திற்க்கு நன்றிகள்

  13 comments :

  1. வணக்கம் தல. பதிவில் பல உண்மை உள்ளது. நான் ஒரு விஜய் ரசிகன் இருப்பினும் தலையின் இந்த உண்மை போருக்கு வாழ்த்துக்கள். வென்றால் சந்தோசமே. நமக்கும் தெரிந்த ஒருவர் என்ற ரீதியில்.

   ReplyDelete
  2. கார் பந்தயம் என்றால் சும்மாவா... எத்தனை 'ரிஸ்க்க்'. இந்த மனுஷன் நம் நாட்டிற்கு பெருமை தேடித் தர முயன்றுக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத் தக்கச் செயலே. அஜித் ரசிகனாக இருப்பதில் பெருமைப் படுவது மட்டுமில்லாமல், இவரது வெற்றிக்குக் கடவுளை பிரார்த்திக்கிறோம். இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வந்தாலும் பரவாயில்லை. யாரைப் பற்றியும் எதனைப் பற்றியும் கவலை வேண்டாம். இப்போதைக்கு கார் பந்தயத்தில் கவனம் செலுத்துங்கள். நீ ஆடு தல... உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்"

   நான் நிச்சயமாக முதலாம் ரசிகர் பிரிவே.
   menan

   ReplyDelete
  3. உங்கள் பதிவு மிகவும் நன்றாகவுள்ளது .
   நான் நிச்சயமாக முதலாம் ரசிகர் பிரிவே.
   www.jaffnakm.blogspot.com
   நன்றி .
   இப்படிக்கு அஜித் ரசிகன் மேனன்

   ReplyDelete
  4. தல ... நம்ம தல எப்பவும் கெத்துதான் .. காசு இருக்கு செல்வாக்கு இருக்கு அப்டின்கிரதுக்காக கட்சி ஆரம்பிச்சி முதலமைச்சர் ஆகிடலாம் அப்படின்னு கனவு கண்டுகிட்டு இருக்கிறவங்க மத்தியில நம் நாட்டின் சார்பாக போட்டியில கலந்துகிடுற அவர நெனச்சா கண்டிப்பா பெருமையாதான் இருக்கு ... தல வருசத்துக்கு ஒரு படம் நடிச்சாலே போதும் ... நல்ல கதை இயக்குணர தேர்வு செஞ்சி நடிக்கணும் ... மத்தபடி ரேஸ் தலையோட விருப்பம் , அதுக்கு ஒரு ரசிகனா என்னோட ஆதரவு எப்பவும் உண்டு... அவர பத்தி தப்பா பேசுற ஆளுங்க கண்டிப்பா வயிதெரிச்சல் பார்ட்டியாதான் இருப்பானுக ... "தல வழி எப்பவும் தனி வழி" ... அடுத்தவன் வழி எப்பவும் "தல வலி"

   ReplyDelete
  5. தலய ஒரு நடிகனா ரசிக்கிறதுக்கு முன்னாடியே அவரோட பைக் ஓட்டுற திறமைய பாத்து வியந்தவன் நான். நான் எந்த பிரிவு என்று நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..

   ReplyDelete
  6. இப்படியும் சொல்லலாம் அவருக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை மத்த விஷயத்துக்காக காம்பிரமைஸ் பண்ணிக்காம செய்யுறாரு..
   நம்ம எத்தனை பேரால நம்ம பண்ணுற தொழிலலை தற்காலிகமா விட்டுட்டு நம்மக்கு பிடிச்ச விசயத்தை பண்ண முடியும்..
   பொருளதார சூழ்நீலை ஒத்துழைத்தாலும்..

   ReplyDelete
  7. @SShathiesh

   வணக்கம் தளபதி. நாங்க எப்போதுமே உண்மையை மட்டும் தான் எழுதுவோமாக்கும். ஹிஹிஹி
   வாழ்த்துகளுக்கு, கருத்துக்கு, வருகைக்கு நன்றி. மீண்டும் வருக. :)

   ReplyDelete
  8. @Menan

   முதல் ரசிகர் பிரிவா, கேட்கவே சந்தோஷமாக உள்ளது. உங்கள் பாராட்டுக்களுக்கு கருத்துக்கு, வருகைக்கு நன்றி. மீண்டும் வருக. :)

   ReplyDelete
  9. @"ராஜா"

   நண்பா, வழக்கம் போல அனல் பறக்கும் கருத்து. ஒத்துப் போகிறேன். 'ரேஸ்' முடிந்து வரட்டும். அடுத்த படத்தில் பார்த்துக்கலாம்.
   கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. மீண்டும் வருக. :)

   ReplyDelete
  10. @பாலா
   உங்களுக்கு ரேஸர் அஜித் தான் முதலில் தெரியுமா... தகவலுக்கு நன்றி. ஆனால், எப்படி என்று சற்று விவரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தெரிந்து கொள்ள ஒரு ஆவல் தான்.
   கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. மீண்டும் வருக. :)

   ReplyDelete
  11. @வினோத்கெளதம்

   யோசிக்க வேண்டிய விசயம் நண்பரே... முற்றிலும் உண்மை. என்னால் கண்டிப்பாக முடியுமா என்பது எனக்கே தெரியவில்லை. இதுனால தான் பலருக்கு நம்ம 'தல' அஜித் ஒரு 'ரோல் மோடல்'.
   கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. மீண்டும் வருக. :)

   ReplyDelete
  12. தல போல வருமா ...வாழ்த்துகள் தல ..
   தல அஜித் ரசிகர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக
   உள்ளது நான் பஹ்ரைன் உள்ளேன் எனக்கு தலை அஜித் காணும் சந்தர்பம் கெடைக்குமா அவரிடம் ஒரு புகைப்படம்
   ஒரு கையப்பம் அது போதும் .... i love ajith

   ReplyDelete
  13. @சிலம்பரசன்.S.A

   ஆம். கண்டிப்பாக அஜித்தின் ரசிகர் என்பதில் பெருமை தான். உங்களுக்காக அவர் பஹ்ரைனுக்கு ஷூட்டிங் வர இறைவனை வேண்டுகிறேன். உங்கள் ஆசை நிறைவேர வாழ்த்துகள் நண்பரே. :)
   கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. மீண்டும் வருக. :)

   ReplyDelete