Tuesday, April 13, 2010

மற்றுமொரு ஆண்டு இனிதே துவங்குகிறது...

என் இனிய தமிழர்களே...
நான் சம்பாதித்த அன்பான ஃபோளோவர்களே...

எனது பதிவுகளுக்கு தமிலிஷில் வாக்களிக்கும் துறவிகளே...
தொடர்ந்து ஆதரவை அள்ளித் தெளிக்கும் நல்ல உள்ளங்களே...

எல்லா பதிவுகளையும் படித்து மனம் நொந்து போகும் ஜீவன்களே...
ஒவ்வொரு பதிவிற்கும் மறவாமல் காமேண்ட் போடும் வாசகர்களே...

மொக்கையாக இருந்தாலும் நல்ல பதிவு என வாழ்த்தும் மகான்களே...
பதிவுகளை படித்துவிட்டு காமெண்ட் போடாமல் எஸ்கேப் ஆபவர்களே...

மற்றும் எனது நலம் விரும்பிகளே, நண்பர்களே, எதிரிகளே, துரோகிகளே, குழந்தைகளே, சிறுவர்களே, முதியோர்களே, தாய்மார்களே, இளஞ் சிட்டுகளே, ஆண் சிங்கங்களே, மாணவ மணிகளே...


உங்கள் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு நம் எல்லோருக்கும் சிறப்பான வெற்றிகரமான செழிப்பான வண்ணங்கள் நிறைந்த ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

எதிர்வரும் ஆண்டை இருகரம் நீட்டி வரவேற்போமாக. அடுத்த வருடம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

நன்றி வணக்கம்.

__/\__ இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க __/\__

"தமிழன் என்று சொல்லடா 'தல' நிமிர்ந்து நில்லடா..."

என்றென்றும் உங்கள் நல்லாசியை நாடும்,
நா.யோகநாதன் AKA தலபேன்ஸ் :)

2 comments :

  1. நான்தான் முதல் ஆள். புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @Bala

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். :)

    ReplyDelete