Saturday, April 10, 2010

'அங்காடித்தெரு' எனது பார்வையில்...

அன்றாட வாழ்க்கையில் எத்தனைக் கூலித் தொழிலாளர்களைச் சந்திக்கிறோம்? உணவுத் தளங்களில் சாப்பாடு பரிமாறுபவர்கள், கார்களுக்கு 'பெட்ரோல்' போடும் சிருவர்கள், வாகன பழுதுபார்க்கும் நிலையங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் என நம்மைச் சுற்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு மெழுகுவர்த்தியாய் தம்மை உருக்கிக் கொள்ளும் எத்தனை மனிதர்கள். இவர்களை எப்படி எல்லாம் கேவலமாக பார்த்துள்ளோம், நடத்தியுள்ளோம், என ஒரு முறை யோசித்துப் பாருங்கள். அவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களே, அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது; அது இன்பம், சோகம், கோபம், கண்ணீர் கலந்தது என பார்வையாளர்களைத் தலை உயர்த்தி பார்க்கத் தூண்டும் ஒரு படம் தான் இந்த அங்காடித்தெரு.


துணிகள், சீலைகள் போன்றவை விற்க்கப்படும் அங்காடிகளில் வேலைப் பார்க்கும் பணியாளர்களின் அன்றாட வாழ்க்கையை திறம்படச் சொல்லியிருக்கின்றது இப்படம். வருமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்ட இளைஞர்கள் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து கொண்டு வரப்படுகின்றனர். இவர்கள் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை கொத்தடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள். இவர்களுக்குள் ஏற்படும் காதல், விருப்பு வெறுப்பு, சகிப்புத்தன்மை என எல்லாவற்றையும் காண்பித்திருக்கிறார்கள். அகதிக்குச் சமமான வாழ்க்கையை சகித்துக் கொண்டு எப்படி எல்லாம் இந்த இளைஞர்கள் காலத்தைப் போக்க வேண்டியிருக்கிறது என படம் நகர்கிறது.

காதல், நட்பு, வேலை, பணிபுரியுமிடம், முதலாலிகள் கொடுமை என வழக்கமாக தமிழில் காட்டப்படும் சமாச்சாரம் தான். ஆயினும், அதனைக் கையாண்ட விதமும் அதை கண்முண்ணே கொண்டு வந்த திரைக்கதையும் அருமை. தங்க இடம், உன்ன உணவு என அடிப்படைத் தேவைகளை அளித்து வேலையும் கொடுப்பதாக மார்தட்டிச் சொல்லும் பல முதலாலிகள், மன்னிக்கவும் முதலைகள், வேலை எனும் பெயரில் தொழிலாலர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சும் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இப்படம்.


நடித்த அத்தனை நடிகர்களும் பாத்திரங்களுக்கு கட்சிதமாக பொருந்தியுள்ளனர். கதாநாயகியான அஞ்சலி தன் நடிப்பால் பிரமிக்க வைத்துள்ளார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கதாநாயகன், கதாநாயகனின் உயிர் நண்பன், கதாநாயகியின் தோழிகள் என அத்தனைப் பேரும் தத்தம் பாத்திரங்களை நன்கு செய்துள்ளனர். இத்தனைக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்றால் நம்ப முடிகிறாதா?

இயக்குணர் வசந்தபாலன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இவரது உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சென்று தெரிகிறது. தனக்கே உரிய பாணியில் கதையை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். வெயில் படம் தந்த அதே வடு இதிலும் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற என்னை இவர் ஏமாற்றவில்லை. நித்தமும் தமிழ் படங்களில் காண்பிக்கப்படும் அம்சங்களை அப்புறப்படுத்தி அவர்களது வாழ்க்கையின் மறுப்பக்கத்தை நெஞ்சை வருடும் திரைக்கதையில் காண்பித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குணர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைச் செதுக்கிவிட்டார் வசந்தபாலன். வசனகர்த்தா ஜெகமோகன் படமுழுவதும் ஜொலிக்கிறார். 'அப்பன் ஆத்தா இல்லாதவன், சோத்துக்கு வழி இல்லாதவனா பாத்து எடு, அவன் தான் ஒழுங்கா வேலை பார்ப்பான்', 'தீட்டு எல்லாம் மனுஷங்களுக்கு தான் கடவுளுக்கு இல்ல' போன்ற வசனங்கள் மிக இயல்பாக படத்தில் உளா வருகின்றன. ஒளிப்பதிவு, கலை போன்ற இதற விசயங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளன, குறை ஒன்றும் சொல்வதற்கில்லை.

இப்படத்தில் குறை ஏதும் இல்லையோ என்பவர்களிடம், எனது பதில், ஆம் உள்ளது. கதாநாயகனும் கதாநாயகியும் பறிமாறிக் கொள்ளும் தத்தம் முந்தைய காதல் கதைகள் அவ்வளவாக சுவாரசியமாக இல்லை. இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். முற்பாதியில் பல இடங்களில் விழும் தொய்வுகள் சொல்லும் படியாக மனதில் ஒட்டாத பின்னனி இசையோடு நம் பொருமையைச் சோதிக்கின்றன. பாடல்கள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சரியாக படமாக்கப் படவில்லை, குறிப்பாக 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடல். 'எலே' என படமுழுதும் வரும் துணைச் சொற்கள் எரிச்சல் மூட்டுவது என்னமோ உண்மை தான். முழுக்க முழுக்க வட்டார மொழிப் படங்கள் இனி வருவதை தவர்க்க முடியாது. ஆகவே, பழகிக் கொண்டு தான் ஆகவேண்டும். வட்டார வழக்கிற்கே உள்ள அழகை ரசிக்க பழகிக் கொள்ள இதுபோன்ற படங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.


எது எப்படியோ, 'கிலைமாக்ஸ்' படத்தை தூக்கி நிருத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எல்லாவற்றையும் தாண்டி, படம் முடிந்து வெளிவரும்போது மனதில் ஒரு கனம் இருக்கவே செய்கிறது. இனி பணக்காரர்களோ, முதலாளிகளோ அல்லது பொது மக்களோ கூலி வேலை செய்து கஷ்டப்படும் பணியாளர்கள் மீது வைக்கும் பார்வையில் கடுகளவாவது கருணைக் கலந்திருந்தால் அதுவே இப்படத்தின் மிகப் பெறிய வெற்றி.

பி.கு உண்மையைச் சொல்லப் போனால் இந்த படம் என் மனதில் அவ்வளவாக ஒட்ட வில்லை. இதனைக் காட்டிலும் எனக்கு வெயில் பிடித்துள்ளது. அதற்க்காக அங்காடித்தெரு ஒரு சுமாரான படம் என்று சொன்னால், என்னைக் கடவுள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார். அனைவரும் பார்க்க வேண்டிய படம். இது போன்ற வித்தியாசமான படப்புகளைத் தமிழ் சினிமாவில் வரவேற்கத் தவறினால் நமக்கு மோட்சமே கிடையாது.

7 comments :

 1. //இவர்களை எப்படி எல்லாம் கேவலமாக பார்த்துள்ளோம், நடத்தியுள்ளோம், என ஒரு முறை யோசித்துப் பாருங்கள்.//
  -- idhil kandippaga nAn illai enbadhai perimaiyuda koorikolgiren.

  // அவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களே, அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது; அது இன்பம், சோகம், கோபம், கண்ணீர் கலந்தது என பார்வையாளர்களைத் தலை உயர்த்தி பார்க்கத் தூண்டும் ஒரு படம் தான் இந்த அங்காடித்தெரு. //

  adadE... idhu enakku romba piditha vishayam aache!

  vimarisanam muzhuvadhum padikkavillai... Enenil, nAn innum padam pArkkavillai.... kandippaga pArppEn enbadhal, vimarisanathai padikkavillai... pArththuvittu vandhu ezhudhugiren...

  idhu varayil enakku padathin karu theriyAdhu... thangaL padhivin mudhal paththiyai padithappin thaan therindhadhu... pagirvukku nandri naNbare...

  surukkamAga solla pOnAl - ungaL mudhal paththi thaan en vAzhkai thathuvam...

  ReplyDelete
 2. Why ur writing in tamil nowadays, even in the hub?sigh..i have problems reading it

  Mahen

  ReplyDelete
 3. உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

  பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

  ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

  நன்றி
  தமிழ்10.காம் குழுவினர்

  ReplyDelete
 4. @Vinith

  //idhil kandippaga nAn illai enbadhai perimaiyuda koorikolgiren.//

  நானும் இல்லை. ஹிஹி. எனக்கு இந்த உடல் ஊனமேதும் இல்லாத பிச்சைக்காரர்களைக் கண்டால் தான் ஆகாது.

  //adadE... idhu enakku romba piditha vishayam aache!

  vimarisanam muzhuvadhum padikkavillai... Enenil, nAn innum padam pArkkavillai.... kandippaga pArppEn enbadhal, vimarisanathai padikkavillai... pArththuvittu vandhu ezhudhugiren...

  idhu varayil enakku padathin karu theriyAdhu... thangaL padhivin mudhal paththiyai padithappin thaan therindhadhu... pagirvukku nandri naNbare...//

  கண்டிப்பாக பாருங்கள். தவிர்க்கக்கூடாத படம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.

  //surukkamAga solla pOnAl - ungaL mudhal paththi thaan en vAzhkai thathuvam...//

  ஓ... வாழ்க்கையில் 'பிரின்சிபல்' எல்லாம் இருக்கோ... ஹிஹிஹி

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக :)

  ReplyDelete
 5. @Mahen

  Sorry Mahen. Hope u can read Thamiz a little bit. AT is a good movie released so far this year but it didn't touch my soul as Vasanthabalan's previous work, Veyil did. This is what basically I say in my review. :)

  Do drop by whenever time permits. Thanks :)

  ReplyDelete
 6. அன்றாட வாழ்க்கையில் எத்தனைக் கூலிப் படையினரை சந்திக்கிறோம்? //

  கூலிப் படையினர்னு சொன்னால் வேற அர்த்தம் வரும். கொலைத் தொழிலுக்கும் அஞ்சாதவர் தான் கூலிப் படையினர். கூலித் தொழிலாளிகள் னு இருந்தா சரியாக இருக்கும். இன்னும் சிறப்பாக எடுக்கப் பட்டிருக்க வேண்டிய அழகான கதைக் களம் என்பது தான் என் கருத்தும்.

  ReplyDelete
 7. @jothsna2007

  சுட்டிக் காட்டி திருத்தியதற்கு நன்றிகள் நண்பரே. இனி தொடர்ந்து இங்கே எட்டிப் பார்ப்பீர்கள் என நம்புகின்றேன்.
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக :)

  ReplyDelete