Friday, December 31, 2010
பாட்டு கேட்கவா - தொடர் பதிவு
என்னைக் கவர்ந்த, நான் எப்போதும் முனுமுனுக்கும் பெண்கள் குரலில் வெளிவந்த பாடல்கள் பல. பட்டியலை மேலும் சுருக்கி அவற்றுள் பத்தை மட்டும் எல்லோரையும் போல தொகுப்பாக வழங்குகின்றேன். இந்த பத்து பாடல்களும் இதற பாடல்களிலிருந்து தணித்து நின்றதால் பட்டியலை சுருக்கும்போது எந்தவொறு கஷ்டமும் எனக்கு ஏற்படவில்லை. இதோ உங்களுக்காக...
1. பார்த்த ஞாபகம் இல்லையோ (sad version)
படம்: புதிய பறவை (1964)
இசை: எம்.எஸ் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி. சுசிலா
இதில் இரண்டு வகைகள் (version) உள்ளன. எனக்கு மிகவும் பிடித்தது சோக பிண்ணணி பாடல். 'பியானோவில்' (piano) ஆரம்பமாகி 'அ...ஆஆஆ' என்று பாட ஆரம்பிப்பார், அங்கேயே நான் அடிமை. என்னைப் பொருத்தமட்டிலும், இந்த பாடலை வீழ்த்த எந்த பாடலும் வந்ததில்லை, இனி வர போவதும் இல்லை. பி.சுசிலா அவர்களின் குரலில் வெளிவந்த என்னற்ற பாடல்களில், இப்பாடல் கண்டிப்பாக ஒரு மணிமகுடம். தமிழ் தெலுங்கு சினிமா இரண்டிலுமே கடந்த 40 ஆண்டுகளாக இவரது ஆட்சி தான்.
2. சினேகிதனே
படம்: அலைபாயுதே (2000)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சாதனா சர்கம்
அனைத்து பட்டி தொட்டிகளிலும் பட்டையைக் கிளப்பிய ஒரு பாடல். சில இடங்களில், சாதனா சர்கம் உச்சரிப்பில் சொதப்பியிருந்தாலும், இசை மற்றும் வரிகள் அந்த குறைத் தெரியாமல் பார்த்துக் கொண்டன. காதலன் அல்லது கணவன் மேல் உள்ள தன்னுடைய உரிமையை (possessiveness) பாடல் வரிகள் சித்தரிக்கும்.
3. கண்ணாளனே
படம்: பம்பாய் (1995)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா
ரோஜாவிற்கு அடுத்து, மக்கள் மனதில் ரகுமான் ஒரு இசையமைப்பாளராக மேலும் தன் முத்திரையை அழுத்தம் திருத்தமாக பதிக்க முக்கிய பங்காற்றியது 'பம்பாய்' ஆல்பம். அதில் இந்த ஒரு பாடல் மிக முக்கியமானது. இப்பாடலின் சாயலிலே, 'சொல்லாமலே யார் கேட்டது' எனும் பாடல் ஒன்று பிற்பாடு வெளிவந்தது. ஆனால், இந்த பாடல் போல பிரபலம் அடையவில்லை.
4. எவனோ ஒருவன்
படம்: அலைபாயுதே (2000)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சுவர்னலதா
தனிமையில் இருக்கும்போது கேட்க வேண்டிய பாடல். காதலர்கள் பிரிந்த வலியை சித்தரிக்க இப்பாடலுக்கு நிகர் வேறெந்த பாடலும் கிடையாது. பிரிந்த காதலர்களின் நெஞ்சை கணமாக்கி கண்டிப்பாக அவர்களின் கண்களில் கண்ணீரை மல்க வைக்கும் ஒரு அற்புத படைப்பு. துயரம், தேடல், ஏக்கம் போன்ற உள்ளுணர்வுகளை தன் குரலின் மூலம் சுவர்னலதா பரை சாற்றியிருப்பார். இப்போது இவர் உயிரோடு இல்லையென்றாலும் தனது பாடல்களின் வழி நம்மிடையே எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். இவர் இல்லாமை தமிழ் சினிமா இசைத் துறைக்கும் சரி நமக்கும் சரி ஈடுகட்ட முடியாத இழப்பு. இசையைப் பற்றி நான் சொல்லிதான் அறிய வேண்டும் என்றில்லை. எப்பேற்பட்ட உணர்சியையும் இசையால் வெளிகொண்டு பிரதிபலிக்க முடியும் என்பதற்கு இப்பாடலின் இசை ஒரு சான்று.
7. ஒரு தெய்வம் தந்த பூவே
படம்: கண்ணத்தில் முத்தமிட்டால் (2002)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சின்மயி
இப்பாடலில் வரும் அனைத்து அம்சங்களும் அபாரம். வளர்ப்பு மகளைப் பற்றி மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பாடுவது போல் காட்சி அமைந்திருக்கும். சோகம், பெருமை, இன்பம் போன்ற உணர்வுகளின் கலவைகளை இப்பாடலில் சின்மயி கனகட்சிதமாக வெளிபடுத்தியிருப்பார். ரகுமான் அறிமுகப்படுத்திய பல பாடகர்களில் சின்மயி நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
5. உன்னை நான் சந்தித்தேன்
படம்: ஆயிரத்தில் ஒருவன் (1965)
இசை: எம்.எஸ் விஸ்வநாதன்
வரிகள்: வாலி
பாடியவர்: பி.சுசிலா
ஒரு பக்க காதல் கொண்டு கதாநாயகி நாயகனை எண்ணி உறுகி பாடும் வண்ணமாக இப்பாடல் அமைந்திருக்கும். அதே சமயம், எம்.ஜி.ஆர் அவர்களை நிஜத்திலும் படத்திலும் பிரதிபலிக்கும் விதமாக வரிகள் எழுதப்பட்டிருக்கும். என்ன சொல்வது, அவர் உண்மையிலே ஆயிரத்தில் ஒருவன்(ர்) தான். பி.சுசிலா அவர்கள் இப்பாடலுக்கு குரல் கொடுத்தார் என்று சொல்வதைவிட உயிர் கொடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
5. செந்தூரப் பூவே
படம்: 16 வயதினிலே (1977)
இசை: இளையராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி
தமிழ் பாடல்கள் இருக்கும் வரை, எஸ்.ஜானகி அவர்களின் குரல் அவர் பாடல்களின் வழி நம்மிடையே வேரூன்றி நிற்கும். என்ன ஒரு குரல்வளம். இன்னும் நூராண்டிற்கு பிறகு கேட்டாலும் அதே பிரமிப்பைத் தரக் கூடிய குரல். இப்பாடல் இவருக்கு தன் முதல் தேசிய விருதைப் பெற்று தந்தது.
6. உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
படம்: இதய கமலம் (1965)
இசை: கே.வி மஹாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசிலா
பி.சுசிலா அவர்களிடமிருந்து மற்றுமொறு அரிய குரல் விருந்து. காதலன் அல்லது கணவனை நினைத்து உருகி, ஏங்கி பாடும் விதமாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கும். இசை, பாடல் வரிகள், பி.சுசிலா அவர்களின் குரல் அனைத்துமே காலத்தால் அழியாதவை.
8. நினைக்க தெரிந்த மனமே
படம்: ஆனந்த ஜோதி (1963)
இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசிலா
மீண்டும் பி.சுசிலா அவர்கள் பாடிய பாடல். என்ன சொல்வது, இவரது குரலில் உள்ள ஈர்ப்பு, தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, காட்சியுடன் ஒன்றி பாடும் விதம் அனைத்துமே இனிவரும் பாடகர்களுக்கு நிச்சயமாக ஒரு முன்னுதாரணம். என்ன தான் பாடல் கேட்க சோகமான தொணியில் இருந்தாலும், அதில் சம்பந்தபட்டவரை மறந்துவிடு என்று தன்னை தானே திட்டி ஆதங்கப்படும் விதமாக வரிகள் செதுக்கப்பட்டிருக்கும்.
10. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
படம்: அமர்களம் (1999)
இசை: பரத்வாஜ்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா
'தல' பாட்டு இல்லையென்றால் எப்படி. அதற்காக மட்டும் இப்பாடலை நான் பட்டியலில் சேர்க்கவில்லை. இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்களை தூக்கிவிட்ட அமர்களம் ஆல்பத்தில் அடங்கிய இப்பாடலை அடிக்கடி கேட்பேன்; எனக்குள்ளே பாடிக் கொள்வேன். காதலி தன் காதலனைப் பார்த்து பெருமைபட்டு, அவனோடு வாழப்போகும் தருணங்களை நினைத்து பாடும் விதம் அருமை. சித்ரா அவர்கள் மிக அழகாக ஆர்பாட்டமில்லாமல், பரவசமாகவும் உல்லாசமாகவும் பாடி கேட்பவர்களின் செவிகளுக்கு இனிமை சேர்த்துவிடுவார். அவருக்கு 'சின்ன குயில்' என்ற அடைமொழி கண்டிப்பாக பொருத்தமானதே.
இப்பாடலில் தல-ஷாலினி அன்னி 'கெமஸ்டிரி' அற்புதம். அஜித் இப்பாடலில் அத்தனை அழகாக இருப்பார்.
ஏற்கனவே சொன்னது போல, என்னைக் கவர்ந்த பாடல்கள் இன்னும் பல.
'Honorable mentions'-ஆக இவற்றையும் சேர்த்துள்ளேன். மன்னிக்கவும்.
11. எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
12. மார்கழி திங்கள் அல்லவா (சங்கமம்)
13. மார்கழி பூவே (மே மாதம்)
14. கண்ணாமூச்சி ஏனடா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
15. புல்வெலி புல்வெலி (ஆசை)
16. சின்ன சின்ன ஆசை (ரோஜா)
17. அன்று ஊமை பெண் அல்லோ (பார்த்தால் பசி தீரும்)
18. போறாலே பொண்ணு தாயி (கருத்தம்மா)
19. அக்கம் பக்கம் (கிரீடம்)
20. தூது செல்ல ஒரு தோழி (பச்சை விளக்கு)
நண்பர் ராஜா அவர்களுக்கு:-
தாமதத்திற்கு மன்னிக்கவும். கடந்த இரு மாதங்களாக பல பிரச்சனைகள். கடந்த வாரம் எனது பாட்டி சிவபாதம் அடைந்தார். வேலை பலு ஒரு பக்கம். எனெனில், நீங்கள் அழைத்த கனமே எழுத முடியவில்லை.
அனைவருக்கும் எனது 2011 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :)
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. __/\__
Thursday, November 18, 2010
மங்காத்தா - பில்லா 2
முதலில் சரவெடி :-
ஏகப்பட்ட பில்-டப்புகளுக்கு இடையே, மங்காத்தா பட ஸ்டில்கள்/போஸ்டர்கள் சில வெளியாக்கப்பட்டன. 'ஈஸ்ட்மெண்ட்' வண்ணம், பிண்ணனியில் தேர்வு செய்யப்பட்ட கட்டிடங்கள், தலைப்பை எழுதிய விதம், ஐம்பதாவது முத்திரை என எல்லாம் நன்றாகத் தான் உள்ளது. இருப்பினும், அவ்வளவாக எனக்கு திருப்தியாக இல்லை. அஜித் சற்று மெலிந்து இருப்பது ஒரே ஆறுதல். மற்றபடி, நரைத்த முடியுடனும் களைப்புற்ற முகத்துடனும் அஜித் தோற்றமளிப்பது மிகவும் வருத்ததை அளிக்கின்றது. George Cloony-ஆக வந்து போக நாம் ஒன்றும் Hollywood-இல் இல்லையே. அங்கே அது ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், இங்கே இது போன்ற விசயங்களை ஏற்க நம் மக்களுக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை என்றே சொல்லலாம். ரசிகர்களை விட்டு விடுவோம், தல எப்படி வந்தாலும் கைத்தட்டுவார்கள், விசில் அடிப்பார்கள். எனது கவலை எல்லாம் பொது மக்களே. நமது மக்களை ஈர்க்க தோற்றம் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது என்று அஜித் சீக்கிரம் உணருதல் அவசியம். 'வாலி' அஜித்தை மீண்டும் திரையில் காண்பிப்பேன் என்று வெங்கட் பிரபு சொன்னதாக ஞாபகம். இதற்கு தான் இப்படி ஒரு பில்-டப் செய்தீர்களா என்று வெங்கட் பிரபுவை கேட்க தோன்றுகிறது. இதோ:
இரண்டாம் சரவெடி :-
பில்லா இரண்டாம் பாகத்தின் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது. இதைத் துளியும் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கப் பட்டனர். மங்காத்தா படபிடிப்பு முடிந்தவுடனே, ஏப்ரலில் பில்லா இரண்டு துவங்குமாம். இதனை அமரர் திரு பாலாஜி அவர்களிண் மகனும் இன்னுமொறு நிறுவனமும் இணைந்து தயாரிக்கப் போகின்றனர். பில்லா முதல் பாகத்தில் பணியாற்றிய நான்கு ஜம்பவான்களான இயக்குணர் விஷ்னுவர்தன், இசையமைப்பாளார் யுவன், எடிட்டர் ஷிரீகர் பிரசாட் மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இதிலும் இடம்பெருவர். இது முதல் பாகத்தின் தழுவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, முதல் பாகத்திலிருந்து பின்னோக்கி கதை செல்லும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு சொல்வாரே, "அவன் எப்படி ஒரு டோன் ஆனான், எப்படி பில்லாவானாங்ரது தான் கதை. தல அஜித் தான் இதுக்கு பொருத்தமா இருப்பார்", அது போல. பில்லா இரண்டு வெற்றி படம் என்று இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம். வெங்கட் பிரபு இது நாள் வரை முகநூள், துவிட்டர் மற்றும் இதற இணைய தளங்களில் மெனக்கெட்டு மங்காத்தாவிற்கு கூட்டிய எதிர்பார்ப்பை விஷ்னுவர்தன் ஒரே அறிவிப்பில் செய்து விட்டார். இதோ:
ஐம்பதாவது படமென்பதால், மங்காத்தாவிற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடயே மட்டுமல்லாது பொது மக்களிடமும் இருக்கும். பில்லா முதல் பாகம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது நாடறிந்ததே. அதனால், இந்த இரண்டாம் பாகத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது, தல விழித்துக் கொண்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. சரியான பாதையில் பயணிக்கிறார் என்பேன். தோற்றத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் என்னைப் போன்ற ரசிகர்களுக்கு அளவில்லா இன்பம் தான்.
பி.கு மங்காத்தாவிற்கு பிறகு, 'கிரீடம்' விஜய்யின் படத்தை ஆவலாக எதிர்பார்த்தேன். அது ஒரு 'பீரியட்' படம். ஆக்ஷ்சன் (மங்காத்தா) படத்திற்கு பிறகு 'கிரீடம்' விஜய்யின் படம், அதற்கடுத்து பில்லா இரண்டு (மற்றுமொறு ஆக்ஷ்சன் படம்) என்றிருந்தால், ஒரு 'variety' இருந்திருக்கும்.
தங்களது கருத்து என்னுடன் வேறுபட்டால், பின்னூட்டத்தில் பிகிர்ந்து கொள்ளலாம்.
Friday, October 8, 2010
'தல'யின் புதிய தயாரிப்பாளர் அவதாரம்
நடிகராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்து, பின்னர் அசல் படத்தில் துணை இயக்குணராகவும் பணி புரிந்தார். அடுத்த கட்டமாக, 'தல' தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதனை 'ஸ்டாரஜித்' (Starajith) இணையதளமே உறுதி செய்தாகிவிட்டது. 'குட் வில்ஸ் என்டர்டைய்ன்மென்ட்' (Good Will Entertainment) என்று தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரும் சூட்டிவிட்டார். தயாரிப்பு பொறுப்புகள் அனைத்தும் மனைவி தான் பார்த்துக் கோள்ள போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இனி தன் சொந்த படபிடிப்பு போக, தான் தயாரிக்கும் படங்கள் படபிடிப்பிலும் மிகவும் 'பிசி' ஆகிவிடுவார்.
இது நல்லதா அல்லது கெட்டதா என்று சொல்லத் தெரியவில்லை. இவரின் இந்த முடிவை நல்லபடியான கண்ணோட்டத்திலே எடுத்துக் கொள்கிறேன். என்ன தான் இருந்தாலும் 'உடல் மண்ணுக்கு உயிர் தல அஜித்திற்கு' என்று வாழ்பவன் நான். இந்த முடிவிற்கும் எனது முழு ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.
நிறைய புதிய இயக்குணர்களிடமும் அறிமுக இயக்குணர்களிடமும் கதைகள் கேட்டு வருகிறார் போலும். தயாரிப்பாளர் அஜித் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். என்னைப் பொருத்தவரை வளர்ந்து வரும் புதிய இயக்குணர்களுடன் பணி புரியலாம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 'ஸ்கிரிப்டும்' கையுமாக கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களுக்காக தவம் கிடப்பது நாம் அறிந்ததே. பலருக்கு பல விதமாக வெளியில் தெரியாதவாறு உதவிகள் செய்த, செய்யும், செய்யப் போகும் அஜித் அவர்கள் இனி தன் நிறுவனத்தின் மூலம் இவர்களைப் போன்ற சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு உதவ முன் வரலாம். மேலும், நாளைய இயக்குணர் நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்திற்கு வரும், இனி வரப் போகும் துடிப்பான இளைஞர்களுக்கும் தாராளமாக வாய்ப்பு வழங்கலாம்.
மேலும் மிஸ்கின், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், சமுத்திரகனி, பாண்டிராஜ் போன்றோருடன் அவ்வப்போது படங்கள் பண்ணுவது சிறப்பு. இவர்களது கதைக்களம், சுவாரசியமான திரைக்கதைகள் அமைப்பு மற்றும் இயக்கம், மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இவர்கள் குறைந்த 'பட்ஜெட்டில்' ரசிக்கும்படியான படங்கள் எடுப்பதோடு, இவர்களது படைப்புகளும் விருதுகள் பெறும் தகுதிகள் உடையவை என்று சொன்னால் அது மிகையில்லை.
ஆக மொத்தத்தில், நல்ல படங்கள் பண்ணால் சந்தோஷம். இந்த நிறுவனம் சிறப்பான படங்கள் தர எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திகின்றேன்.
இது ஒரு நல்ல ஊக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விசயம், கண்டிப்பாக பண்ணலாம் என்றாலும் சரி, இவருக்கு எதற்கு இந்த வீணற்ற வேலை என்றாலும் சரி, நண்பர்களே, அஜித் தயாரிப்பாளராக உருவெடுப்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Thursday, September 30, 2010
மங்காத்தா - என்ன தான் நடக்குது?
இதுவரை நமக்கு தெரிந்த தகவல்களின் படி, வெங்கட் தனது ஆஸ்தான 'டெக்னிகல் டீமையே' இதிலும் பயன்படுத்துகிறார். இசைக்கு யுவன், ஒளிப்பதிவுக்கு சக்தி சரவணன் என்று தனது முந்தய படங்களான சென்னை 28, சரோஜா, கோவா போன்றவற்றில் பணிபுரிந்தவர்கள் தான் இதிலும். சந்தோசம் தான்.
இவ்வளவு 'டெக்னிகள்' விசயங்கள் தெரிந்தும், படத்தின் துணை நடிகர்கள் யார் யார் என்பது இன்னும் சரிவர தெரியாத நிலையில் அஜித் ரசிகர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனர். நாகர்ஜுனா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பிரேம்ஜியும் இன்னும் ஒரு புது முக நடிகரும் கூட நடிக்கவுள்ளனர் எனத் தெரிகிறது. இப்படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எடுக்கவுள்ளதால், அஜித்தும் நாகர்ஜுனாவும் தத்தம் பாத்திரங்களை மாற்றிக் கொள்ளப் போகிறார்களாம். அதாவது, அஜித்தின் ரோலை தெலுங்கில் நாகர்ஜுனாவும், தெலுங்கில் நாகர்ஜுனாவின் ரோலை தமிழில் அஜித்தும் பண்ணப் போவதாக கூறப்படுகிறது. நல்ல விசயம் தான். 'தல'-யை 'ஃபுள் & ஃபுள்' வில்லன் ரோலில் பார்த்து நீண்ட நாளாயிற்று. ரசிகர்களுக்கு விருந்து தான்.
அது கூட பரவாயில்லை. படத்தின் நாயகிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. முதலில் அனுஷ்கா என்றார்கள். பிறகு, லக்ஷ்மி ராயும் நீத்து சந்திராவும் என்றார்கள். நீத்துவின் பெயர் எதோ கிரிக்கெட் விளையாட்டின் சூதாட்டத்தில் அடிபட்டதால், படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்று செய்தி கசிந்தது. பின்னர், திரிஷாவை ஒப்பந்தம் செய்தாகிவிட்டது என்றனர். இதற்கிடையில், ஜெனெலியாவும் சினேகாவும் பரிசீலனையில் உள்ளனர் என்று இன்னொரு செய்தி. கடைசியாக, வெதிகாவும் பட்டியலில் சேர்ந்தாயிற்று.
கோவாவிற்கு பிறகு இவ்வளவு நாளாகியும், அதீத வேகத்தில் பட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வெங்கட் பிரபுவின் சுறுசுறுப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. ஏன் இப்படி? அஜித் தானே என்ற எலக்காரறமா? அல்லது நண்பன் தானே, அஜித் ஒன்றும் கேட்க மாட்டார் என்ற அலட்சியமா? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
இனி இவர்கள், 'photoshoot' தொடங்கி, படத்தை ஆரம்பித்து, படபிடிப்பை முடித்து, இசை வெளியீடு நடத்தி, படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வரும்வரை ரசிகர்களின் பாடு திண்டாட்டம் தான். நல்லபடியாக படத்தை முடித்தால் சரி...
Friday, August 27, 2010
மங்காத்தா - உள்ளே வெளியே... ஆட்டம் ஆரம்பம்
சுமார் ஒரு நிமிடம் ஒன்பது வினாடிகள் பயணிக்கும் இந்த 'டீசர்', கருப்பு வெள்ளை தொனியில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த துணை நடிகர்களும் இல்லை, அஜித் மட்டும் தான். கருப்பு கண்ணாடி அணிந்து, துப்பாக்கியை சரி செய்தவாறு, 'மங்காத்தா டா' என்று வசனம் பேசுகிறார். பின்னனி இசையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். யுவனின் உழைப்பு நன்கு தெரிகிறது. 'வெஸ்டர்ன் கிலாஸிக்கல்' (Western Classical) இசையைப் பயன்படுத்தியிருக்கிறார். சீரியசாக காண்பிக்கப் படும் 'டீசரை', தன் பின்னனி இசையின் மூலம் ஒரு ஜாலியான உணர்விறகு மாற்றியிருக்க்கிறார் எனலாம். படம் முழுக்க இவரின் பாடல்களும் பின்னனி இசையும் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.
'டீசர்' பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், அது மீண்டும் கண்ணாடி, துப்பாக்கி என்று முந்தைய மூன்று படங்களான பில்லா, ஏகன், அசலின் சாயலை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு கண்ணாடி, துப்பாக்கி, கோர்ட் உடை போன்றவற்றை அஜித் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களில் ஒரு பகுதியினர் சகித்துக் கொள்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன்.
இப்படி தான் படம் இருக்கப் போகிறது என்று ஒரு அறிமுகம் செய்யவே இது முனைகிறது. என்னால் இந்த டீசரை வைத்து எந்த ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை. டீசர் என்றாலே ஒரு கிண்டலுக்காக எடுக்கப்படும் குறும்படம் என்பார்கள். இயக்குணர் வெங்கட் பிரபுவும் இதையே சொல்லியிருக்கிறார். முந்தைய படங்களின் சாயல் கொண்டே அஜித்தைக் காண்பித்து ரசிகர்களைக் கிண்டலும் கேலியும் பண்ணியிருப்பதாகவும், கவலை வேண்டாம், படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் முகப்புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். பார்ப்போம்.
அஜித, வெங்கட் பிரபு, யுவன் மற்றும் மங்காத்தா படத்தில் பணி புரியும் அனைவருக்கும் 'ஆல் தி பெஸ்ட்'...
மங்காத்தா பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்... :)
Tuesday, August 3, 2010
அஜித் - பதினெட்டு வருட திரைப் பயணம்...
தமிழ் சினிமா என்னவென்று துளியும் அறிந்திறாத அந்த இளைஞர், தன் சொந்த கஷ்டங்களைப் போக்கும் வகையில் பணத்திற்க்காக சினிமா துறையைத் தேர்ந்தெடுக்கலானார்.
பொதுவாக அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். ஒரு வேளை, அரசியல் கலந்த இந்த தமிழ் சினிமாவும் ஒரு சாக்கடையே என்று தெரிந்திருந்தால் அந்த இளைஞர் தன் திசையை மாற்றியிருக்கலாம். என்ன செய்வது, அதனைப் பற்றி அவருக்கு பாடம் புகட்ட ஒரு ஆசிரியர் இல்லாமல் போனது அவரது துரதிஷ்டம்.
யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்திருக்கும். தல அஜித் தமிழ் சினிமாவிற்குள் புகுந்து பதினெட்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஒன்றா இரண்டா, பதினெட்டு வருடங்கள். ஒவ்வொறு கட்டங்களிலும் அவர் எதிர்நோக்கிய கஷ்டங்கள் எண்ணிலடங்காதது. எத்தனை இன்பம், எத்தனை துன்பம், சோதனைகள், தடைகள், கட்டுப்பாடுகள், அனாவசிய பிரச்சனைகள் என அவர் சந்தித்த விஷயங்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்ததே.
குழந்தைகளின் கைகளைப் பிடித்து நடை பழகிவிடுவார்களே, அது போல இவருக்கு பக்கபலமாக இருக்க யாரும் முன்வரவில்லை. தனியாக போராடினார். அதனால், வெற்றிகளோடு சேர்ந்து சறுக்கல்களையும் எதிர்நோக்கினார். இவரது வெற்றிகளைக் கொண்டாடிய பலர் இவரது கஷ்ட காலத்தில் துணை வராதது வேதணைக்குரியது. அதனால் என்ன, தனது சொந்த அனுபவத்தில் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.
யாரையும் மிக எளிதாக நம்பிவிடுவார். இவரது இந்த பலவீணத்தை பலர் பல வேளைகளில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இவருக்கு எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம் என்று புதிதாய் சினிமாவில் புகும் யாரும் சொல்லி விடுவர். தன் முதுகைக் குத்திக் கிழித்தவர்களின் மூலம் இவர் அடைந்த ஒரே பயன், இப்போது நாம் ஒரு பக்குவமான அஜித்தைப் பார்ப்பது தான்.
எந்தவொறு பிண்னனியும் இல்லாத இவர், தனக்கென்று ஒரு தனி சாம்ராஜியத்தையே உண்டு பண்ணினார். ரசிகர் மன்றங்கள் எண்ணிக்கையும் இவரது ஒவ்வொறு பட ரிலீசின் போது கிடைக்கும் வரவேற்பும் ('ஒபெனிங்') இதற்கு சான்றுகள். என்ன தான் இவருக்கு 'காட்ஃபாதர்' இல்லையென்றாலும் என்னைப் போன்ற பல ரசிகர்களுக்கு இன்று இவர் தான் 'காட்ஃபாதர்', முன்னோடி, 'ரோல்மாடல்' எல்லாம்.
தல, இந்த அகம்பாவம், ஆனவம், துரோகிகள் சூழ்ந்த தமிழ் சினிமாவில் பதினெட்டு வருடங்கள் பயணித்துவிட்டீர்கள். இன்னமும் பல ஆண்டுகள் கடக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.
கப்பல் இல்லாத துறைமுகமா, தல அஜித் இல்லாத தமிழ் திரையுலகமா...
Wednesday, July 14, 2010
அந்த ஒரு நிமிடம்...
இப்படி ஆகிட்டேன்...
அந்த சம்பவம் என் வாழ்க்கையின் திசையையே மாற்றிப் போட்டுவிட்டது...
அந்த ஒரு நிமிடம் நான் சற்று ஜாக்கிரதையாக இருந்திருந்தால்...
Wednesday, July 7, 2010
உலகக் கிண்ண வெற்றியாளர் - ஒரு கணித ஆராய்ச்சி
உலகக் கிண்ண காற்பந்து போட்டி அரையிருதி சுற்று வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது என்று பலரும் அறிவீர். இம்முறை உலகக் கிண்ணத்தை எந்த நாடு தட்டிச் செல்லும் என்ற ஒரு சிறிய ஆராய்ச்சியையே இந்த பதிவு எடுத்துறைக்கிறது, மன்னிக்கவும் கணிதம் மூலம் நிரூபணம் செய்ய் முயல்கிறது.
1. பிரசில் நாடு உலகக் கோப்பையை 1994-இல் வென்றது. அதற்கு முன்னர், 1970-இல் தட்டிச் சென்றது. ஆக இரண்டு வருடங்களையும் கூட்டினால், 1970 + 1994 = 3964.
2. அர்ஜெந்தினா கடைசியாக 1986-இல் வென்றது. அதற்கு முன், 1978-இல் தட்டிச் சென்றது. எனவே இரண்டு வருடங்களையும் கூட்டினால், 1978 + 1986 = 3964.
3. ஜெர்மனி 1990-இல் உலகக் கோப்பையை வென்றது. அதற்கு முன்னர், 1974. இரண்டு வருடங்களையும் கூட்டினால், 1974 + 1990 = 3964.
4. மீண்டும் பிரசிலை பார்த்தோமானால், அவர்கள் 2002-இலும் ஜெயித்தார்கள். 1962-இலும் வெற்றி அவர்களுக்கே. எனவே அவ்விரண்டு வருடங்களையும் கூட்டினால், 1962+ 2002 = 3964.
5. ஆதலால், 3964 என்ற மர்ம எண் தெரிய வருகிறது. இவ்வாண்டை (2010), அந்த 'மர்ம' எண்ணுடன் கழித்தால், இம்முறை யார் வெற்றி வாகை சூடுவார்கள் என்று தெரிந்துவிடும்.
3964 - 2010 = 1954... 1954-இல் உலகக் கிண்ணத்தை வென்றவர் வேறு யாருமில்லை, எனக்கு துளியும் பிடிக்காத ஜெர்மனி.
இன்று அதிகாலை நடந்த அரையிறுதி ஆட்டத்தில், உருகுவே அணி நெதெர்லாந்தைச் சந்தித்தது. அதில் நெதெர்லாந்து அணி மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் உருகுவேவைத் தோற்கடித்தது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில், ஜெர்மனி அணியும் ஸ்பேயின் அணியும் மற்றொறு அரையிறுதி சுற்றில் களமிறங்க உள்ளனர். நடக்கவிருக்கும் ஆட்டத்தில் ஜெயிக்கும் குழு நெதெர்லாந்துடன் இறுதிச் சுற்றில் மோத வேண்டும். இந்த ஆட்டத்தில் ஜெர்மனி ஸ்பேயினை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி, நெதெர்லாந்தையும் தோற்கடித்து, மேலே கணித்தது போல உலகக் கோப்பையைக் கைப்பற்றுமா? இந்த சிறிய ஆராய்ச்சி போட்டிக்கு முன்பே உண்மையை வெளிப்படுதியதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
பி.கு இப்படி ஆராய்ச்சி செய்யுமளவிற்கு உனக்கு இத்தனை அறிவா என்று வியக்க வேண்டாம். இது சத்தியமாக எனது ஆராய்ச்சியில்லை. இது போன்ற எண்ணங்கள் என் சிற்றறிவுக்கு எட்டாதவை. இந்த அளவுக்கு யோசிக்கும் திறமை இருந்திருந்தால், நான் சந்திர மண்டலத்திலேயே பிறந்திருப்பேன். இது என் நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். படிக்கும் போது, முன்பே குறிப்பிட்டது போல நண்பர் ராஜாவின் பதிவு தான் ஞாபகம் வந்தது. உடனே அதனை மொழிப் பெயர்த்து இங்கே பகிர்கிறேன், அவ்வளவே.:)
Tuesday, July 6, 2010
Diego Maradona - Argentina...
It has been four years for Diego Maradona and his fellow Argentinians since they lost to Germany (fondly called as Germs by it's haters) in 2006. That was yet another quarterfinal clash. July 3rd is a day where no Argentinians or fans of Argentina all over the globe will ever forget. These giants met again in yet another quarterfinal. Germany trashed Argentina 4 - 0. Infact the term 'trashed' can be read as 'humiliated'.
The Road to Quarterfinal
There's no doubt that Argentina played like champions in both Group Stages and Knock-out Stage. Their performances were excellent, consistent and looked dominant. They were the clear winner of the Group B with clear 9 points. In Group Stages, they won Nigeria 1 - 0, trashed South Korea 4 - 1 and crushed Greece 2 - 0. As far as Knock-Out stage concern, they beat Mexico 3 - 1. Perhaps, all these resulted them to be over confident or overlooked their opponent, not to mention Germany's slip against Serbia.
What Happened
The tie was just two minutes 40 seconds old when the Bayern Munich man was allowed to skim across defender Nicolas Otamendi and glance Schweinsteiger's terrific curling free-kick into the net. I'm sure our players hadn't seen it coming. The first half ended with Germs leads 1 - 0. I was quite confident that my favourite team will make a come back in the second half.
After the first goal, desperate Argentinians were focusing more on physical tactics. They lost their calm, focus and their agressiveness was clearly seen which gained them nothing till the very last minute.
For the first time in the tournament, the likes of Javier Mascherano, Lionel Messi and Carlos Tevez struggled to impose themselves as Germany kept the trio under lock and key.
Maradona desperately required a moment of inspiration from someone, anyone. They had bagged 10 goals in four games on their way to the last eight - more than any other team. But Argentina rarely looked like penetrating the Germs defence before half time and their frustration began to show as their World Cup dream began to evaporate.
The German System
On the other had, Germs did what they do best - score an early goal and concentrate on tenacious defense. As expected, they adapted their style to effectively counter their opponent. They relied on counter-attack and they suceeded by adding three more goals. Germs maintained their strategy throughout the match. No doubt, they were more focused, co-ordinated, disciplined and most importantly, played as a team.
The Missing Messi Factor
Lionel Messi has not scored a goal in the World Cup 2010. That is not to say he has not made a contribution, as he certainly has, including a beautiful cross to set up Carlos Tevez's laser-like second goal to make it 3-0 that pretty well put away Mexico in the round of 16. And Messi has made a solid contribution on defense as well, but soccer is a game of goals and if Messi comes alive Germany better bring their A-game, as there are few better than Messi when his head and body are in synch.
Diego Maradona
I have been worrying ever since I heard Maradona is thinking of resigning. News are coming stating Maradona and his team got a warm welcome when they landed in Argentina which clearly means one thing. Fans still got high hope and regards on him. So do I. We will never ever lost hope in him. There is always a second chance and interestingly, there is Copa America next year held in their homeground. So, Diego Maradona can use up the opportunity in proving himself as a successfull coach by helping the team lifting the Copa America title. The living legend can certainly do it.
In Maradona we trust. Jai Ho Argentina...
Thursday, July 1, 2010
அன்றே சொன்னேன்...
இது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். மின்னலே, காக்க காக்க, 49-ஆவது படம், இப்போது 50-ஆவது படம் என்று இந்த ஏமாற்றம் நான்கு முறை நடந்தேறியிருக்கின்றது. இனிமேல் பழகிக் கொள்ள வேண்டிய சக்தியைப் பெற்றுவிட்டேன். அஜித் கார் பந்தயத்திலிருந்து விலகியது, அதே சமயம் கௌதம் மேனன் தன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்கவிருப்பது போன்ற சம்பவங்கள் இவர்கள் இருவரையும் ஒன்று சேர விடாமல் தடுத்து வருகின்றன. ஒரு வேளை அஜித் கார் பந்தயத்திலிருந்து அக்டோபரில் திரும்பியிருந்தால், முன்பே அறிவிக்கப்பட்டபடி கௌதமுடன் சேர்ந்து படம் பண்ணியிருக்கலாமோ? அல்லது நான் முந்தய பதிவில் கணித்தது போல், அப்பொழுது கௌதம் வேறு படத்தில் மும்முரமாக இருந்து அஜித்தின் 50-ஆவது படத்தைக் கைக்கழுவியிருப்பாரோ? பல குழப்பங்கள். இதை விதி என்று எடுத்துக் கொள்ளலாமா?
சுவாரசியமாக, அஜித்தின் அடுத்த 51-ஆவது படத்தையும் தயாநிதி அழகிரி தயாரிக்கக்கூடும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே, 51-ஆவது படத்தை கண்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக கௌதம் இயக்குவார் என்று சில தரப்பினர் சொல்கிறார்கள். மாறாக, இதைப் பற்றி அஜித்தோ அல்லது கௌதமோ இன்னும் அதிகாரப்பூர்வமான பதில்கள் கூறாதது வருத்தத்தை அளிக்கின்றது. 51-ஆவது படத்திலும் இந்த கூட்டணி சேரவில்லையேல், ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே சொன்னது போல, இன்னுமொறு ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள சக்தி பிறந்துவிட்டது. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே...
51-ஆவது படத்தைப் பற்றி பேசினோம். 50-ஆவது படம் என்ன ஆயிற்று என்று கேட்கலாம். சமீபத்திய தகவல் படி, இதனை தயாநிதி அழகிரி தயாரிக்க வேறொரு இயக்குணர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர் தான் 'சென்னை 600028' புகழ், வெங்கட் பிரபு. இப்போதைக்கு படத்தின் பெயர் 'மங்காத்தா - உள்ளே வெளியே'. மங்காத்தாவின் களத்தில், இது மும்பையில் நடக்கும் தாதா கதை என்று தெரிகிறது. அஜித்திற்கு தாதா/ரௌடி பாத்திரம் தான் செய்ய வரும் என்று முடிவு பண்ணிவிட்டார்கள் போல. தலைப்பையும் ஒரு வரி கதையையும் கேட்டால், சுவாரசியமாகத் தான் இருக்கிறது.
உண்மையைச் சொல்லப் போனால், இந்த கூட்டணியில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. வெங்கட் பிரபு இதுவரை 'சின்ன' ஹீரோக்களை கும்பலாக வைத்து படங்கள் எடுத்தவர். அவருக்கு தனி ஒரு 'மாஸ்' ஹீரோ படம் பண்ணும் அளவுக்கு திறமை உள்ளதா என்று படம் வந்த பின்னரே தெரியும். வெங்கட் பிரபுவை அவமானப் படுத்துவதோ அல்லது அவரது திறமையை குறை சொல்வதோ, சந்தேகிப்பதோ என் நோக்கம் அல்ல.
இது நம் 50-ஆவது படம். எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படம். அப்பேற்பட்ட விஷயத்தில், இத்தனை 'ரிஸ்க்' வேண்டுமா என்பது தான் என் கேள்வி. இவர் ஒரு ஆஷ்தானமான அஜித் விசிறி. இவரும் சரணைப் போல படம் முழுவது தல புராணம் பாடி காரியத்தைக் கெடுத்து விடுவாரோ என்ற அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை. அதே சமயத்தில், ஒரு பக்கம் சிறிதளவு சந்தோஷம். இந்த இயக்குணர் ஓரளவு அனுபவம் மிகுந்தவர். ராஜு சுந்தரத்தையே தாங்கிக் கொண்டோம். எப்படி நம்ம 'தல'யை வெங்கட் பிரபு கையாளுகிறார் என்று பார்ப்போம். எல்லாம் இனிதே நடைப்பெற இறைவனைப் பிரார்த்திகிறேன்.
Friday, June 11, 2010
உலகக் கிண்ண காற்பந்து காய்ச்சல்...
ஒவ்வொறு குழுவிலும் அதிக புள்ளிகள் பெறும் முதலாம் மற்றும் இரண்டாம் குழுக்கள் அடுத்த பதினாரு சுற்றில் (Round of 16) மோத வேண்டும். அடுத்து கால் இறுதி சுற்று, அரை இறுதி சுற்று என முன்னேறி இறுதி ஆட்டத்திற்கு வர வேண்டும்.
பொதுவாகவே உலகமே இப்போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்க்கும். வேறு எந்த ஒரு விளையாட்டிற்கும் இந்த அளவு ஒரு 'இது' இருக்காது என ஆணித்தரமாக சொல்வேன். மலேசியாவில் உலகக் கிண்ண காற்பந்து என்றாலே திருவிழாக் கோலம் தான். ஜூன் பதினொன்று (இன்று) ஆரம்பிக்கும் இந்த காற்பந்து திருவிழா விமரிசையாக ஒரு மாதம் நீடிக்கும். இறுதி ஆட்டம் சரியாக ஜூலை பதினொன்றுக்கு நடைபெறும்.
எனது ஆர்வத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. உலகக் கிண்ன காற்பந்து என்றால் சும்மாவா? எத்தனை கொண்டாட்டம், எத்தனை ஆர்ப்பாட்டம், எத்தனை ஏமாற்றம், கண்ணீர், அழுகை என அடுத்த ஒரு மாதம் கடந்து போவதே தெரியாது.
நான் எந்த அணிக்கு ஆதரவு கொடுக்கிறேன் என கேட்பவர்களுக்கு, அன்றும் இன்றும் இனி என்றும் எனது ஆதரவு அர்ஜெந்தினாவிற்கே (Argentina). சின்ன வயதில் இருந்து உதித்த பற்று அது. ஒருகால், எனது விருப்ப அணி ஜெயிக்காவிட்டால், அடுத்து நான் வெற்றியடைய வேண்டுவது பிரசில் (Brazil) அணி தான். இவ்விரண்டு அணியும் மன்னைக் கவ்வினால், தொடர்ந்து போட்டியைக் கண்காணிக்கும் எனது நாட்டம் கனிசமாக குறைந்துவிடும்.
அலுவலகத்தில், உலக கிண்ன கணிப்பு 'World Cup Predictions' எனும் விளையாட்டில் பங்கெடுத்துள்ளேன். சூது தான். நூறு வெள்ளி கட்டனம். நானும் அர்ஜெந்தினாவும் வெற்றி பெற உங்கள் ஆசி தேவை.
எனக்கு உலக கிண்ன காற்பந்து காய்ச்சல் ஆம்பமாகிடிட்டது. உங்களுக்கு? அப்படியே, எந்த அணிக்கு உங்கள் ஆதரவு என்பதை பின்னூட்டமிடலாமே.
Wednesday, June 2, 2010
ஐபேட் - கனினியின் அழிவின் ஆரம்பமா?
சுருக்கமாக சொல்லப் போனால், "கனினி பாதி, ஐபோன் (iPhone) பாதி, கலந்து செய்த கலவை நான்", என்று ஐபேட் தன்னை புகழாரம் பாடிக் கொள்ளலாம். இருப்பினும், இதில் என்னென்ன வசதிகள் (தற்பொழுது) இல்லை என வரிசைப்படுத்தியுள்ளேன். இதோ:
இந்த வசதி இல்லாதது ஐபேட்டின் மிகப் பெரிய குறை என்றே சொல்ல வேண்டும். கனினியை எடுத்துக் கொண்டால், ஒரே சமயத்தில் பல நிரல்களை செயல் படுத்தலாம். ஆனால், ஐபேட்டில் இது சாத்தியம் இல்லை. உதாரணத்திற்கு, வானொலியோ அல்லது பாடல்களோ கேட்டுக் கொண்டு இனையத்தில் வளம் வர முடியாது.
இதனுள் ஒலிப்பெருக்கி (microphone/speaker) பொருத்தப்பட்டிருப்பது என்னமோ உண்மை தான். மேலும், தொலைப்பேசி நிறுவனங்கள் சேவைகளும் (cellular networks) இதில் அடங்கியுள்ளது. இருப்பினும், இக்கருவியின் மூலம் தொலைப்பேசி போல பேசவும் முடியாது; குறுஞ்செய்தி அனுப்பவும் இயலாது.
புகைப்படக் கருவி முன் புறம் பொருத்தப்பட்டிருந்தால் வீடியோ உரையாடல் (video conference) செய்ய வசதியாக இருந்திருக்கும். இக்கருவியின் பின் புறமாவது புகைப்பட வசதி செய்யப்பட்டிருந்தால், நினைத்த நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கலாம். புகைப்படக் கருவி பொருத்தாமல் விட்டது, புகைப்பட விரும்பிகளுக்கு ஏமாற்றமே.
இந்த HDMI Output இல்லாததால், ஐபேட்டை தொலைக்காட்சி, ஃப்ரோஜேக்டர் (projector) போன்ற சாதனங்களுடன் பொருத்த முடியாது. எனவே, போதனைகள், வீடியோ கலந்துரையாடல்கள் (presentations) போன்றவை செய்ய முடியாமல் போய்விடுகிறது.
இதில் USB port வசதி இல்லாத பட்சத்தில், thumb drive போன்ற தனிச்சைக் கருவிகளை பொருத்த முடியாது. நொடிகளில் thumb drive-இன் மூலம் கனினியில் செய்யும் தகவல் பரிமாறல்கள் வாழ்க்கையை எவ்வளவு எளிது படுத்துகின்றன. ஐபேட்டில் இந்த வசதி அமல் படுத்தாதது இன்னொரு பெரிய வருத்தம்.
Flash இல்லையேல், animations மற்றும் flash-இல் இயங்கும் வீடியோக்களை பார்க்க இயலாது. முகப்புத்தகத்தில் காணும் விளையாட்டுக்களை எல்லாம் மறந்து விட வேண்டியது தான்.
இத்தனை வசதிகள் இல்லையா? அப்படி என்ன தான் இந்த பாழாப் போன ஐபேட்டில் உள்ளது என அலுத்துக் கொள்ளக்கூடும். இணையத்தளத்தை உபயோகிப்பது, மின்னஞ்சல் வசதி, படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, flash பயன்படுத்தாத விளையாட்டுக்கள் விளையாடுவது மற்றும் தள புத்தகங்கள் (ebooks) வாசிப்பது போன்ற சேவைகளை பூர்த்தி செய்கிறது. இதன் முகப்பு கண்டிப்பாக பார்வையாளர்களையும் பயன்படுத்துபவர்களையும் வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்றால் அதில் மிகையில்லை.
இரண்டரை வயது சிறுமி தன் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஐபேட்டை துள்ளியமாய் உபயோகிக்கும் வீடியோவை இணத்துள்ளேன். "எங்களது கண்டுபிடிப்பைப் பயன்படுத்த வயது ஒரு தடையே இல்லை. எல்லா வயது பிரிவினரும் மிக எளிதில் உபயோகிக்கக் கற்றுக் கொள்ளலாம்", என ஆப்பிள் நிறுவனம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
உலகம் முழுவதும் முதல் போணி வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. எனக்கு இந்த ஐபேட் மீது ஒரு நாட்டமும் ஈர்ப்பும் இருந்தாலும், நான் இப்போது வாங்கப் போவது இல்லை. வெளியாகிவிட்ட முதல் போணியிலிருந்து, மக்களின் பலதரப்பட்ட விமர்சனம் எழுந்த வண்ணமாக உள்ளன. இதனை நினைவில் கருதி, ஆப்பிள் நிறுவனம் பல புதிய அம்சங்களை தன் அடுத்த வெளியீட்டில் இணைக்க அதிக வாய்ப்புள்ளது. அதில், மேலே குறிப்பிட்டுள்ள விடுபட்ட வசதிகள் இணைக்கப்பட்டாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.
இதன் விலை அமெரிக்க டாலர் $499-லிருந்து $829 வரை என்கின்றனர். எந்த பொருளுமே அறிமுகப்படுத்தப்படும் போது அதிக விலையில் விற்கப்படுவது உலக நியதி. போகப் போக இதன் விலையும் கனிசமாக குறையும் என நம்புகிறேன். ஆதலால், என்ன அவசரம். பொருத்திருந்து வாங்குவோம்.
பி.கு பொழிப் பெயர்ப்புகளில் பிழைகள் இருக்கலாம், மன்னிக்கவும். அப்படி உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் இருந்தால், பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டவும்.
Wednesday, May 26, 2010
சோதனை மேல் சோதனை... - 2
“ I have no news about it, for the last few months I have no contact with Ajith. At the moment my focus is on my Hindi VTV remake.”
அதாவது, தான் அஜித்தின் ஐம்பதாவது படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு சரி, அஜித்துடனோ அல்லது த்யாநிதி அழகிரியுடனோ (தயாரிப்பாளர்), அவருக்கு சில மாதங்களாக தொடர்பே இல்லை என்கிறார். அதுமட்டுமில்லாமல், தனது முழு கவனமும் இப்போது ஹிந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவில் திரும்பிவிட்டது என்று சொல்லி என்னைப் போன்ற பலர் 'தல'யில் பாறையைத் தூக்கிப் போட்டுள்ளார்.
தல, என்ன இது? இதனைக் கேள்விப் பட்டதும், பயங்கர கோபம் எனக்கு. இதற்கு பெயர் தான் அலட்சியம் என்பார்கள். உங்களைப் பொருத்தவரை நடிப்பு வெறும் தொழில் என்றீர்கள். சரி, அது என்னமோ உண்மை தான். ஆனால், உங்கள் தொழிலிலில் ஒரு அக்கறை வேண்டாமா?
என்ன நடக்கப் போகிறது என்று நான் சொல்லவா? எப்படியும் கார் பந்தயம் முடிந்து அக்டோபரில் மீண்டும் சினிமாவிற்கு திரும்பி விடுவீர்கள். அதற்கிடையில், கௌதம் தன் ஹிந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவில் மூழ்கி இருப்பார். ஒன்று உங்களை அவரது படம் முடியும் வரைக் காத்திருக்கச் சொல்வார், இல்லையேல் முடியாது என்று ஒதுங்கிக் கொள்வார். உங்களது 'கால்ஷீட்டை' விரயமடிக்க விரும்பாத தயாரிப்பாளர், வேறு இயக்குணருக்கு மன்றாடுவார். கடைசியில் ஒரு மொக்கை இயக்குணர் சிக்க, நீங்களும் பரிதாபப் பட்டு, ஒத்துக் கொள்வீர்கள். ஏகன், அசல் வரிசையில் இன்னொரு அமர காவியம். இது தானே உங்கள் விருப்பம்?
நீங்கள் கார் பந்தயத்திற்கு போனது எல்லாம் உங்கள் விருப்பம். எனக்கு அதில் துளியும் வருத்தமில்லை. ஆனால், அதே சமயம், உங்கள் 'தொழிலில்' சற்று கவனம் செலுத்த வேண்டாமா? ஏனென்றால், அது தான் நிரந்தரம். நீங்கள் அவ்வப்போது கிடைக்கும் சிறிய ஓய்வுகளில் சென்னை வருக்கிறீர்கள். அந்த சமயங்களில், இயக்குணருடனும் தயாரிப்பாளருடனும் கதை விவாதத்தில் ஈடுபடலாம்; படத்தின் இதற நிலவரங்களைப் பற்றி ஆலோசனை நடத்தி அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்போது தான் உங்கள் நாட்டம், அக்கறை, ஈடுபாடு அவர்களுக்கு புலப்படும். இல்லையேல், அவரவர் தத்தம் வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவார்கள். அதைத் தான் கௌதம் இப்போது செய்கிறர்ர். அவர் மேல் தவறு கூற மாட்டேன். கண்டிப்பாக தவறு உங்கள் மீது தான்...
பி.கு ஒரே ஒரு வேண்டுகோள். கௌதம் மேனன் உங்களது ஐம்பதாவது படத்தை இயக்கவில்லையேல், தயவு செய்து வேறு ஒரு நல்ல கைத்தேர்ந்த இயணரைத் தேர்வு செய்யுங்கள்...
Friday, May 21, 2010
சோதனை மேல் சோதனை... - 1
"மட்டமான படங்களில் நடிக்கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை. அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க.
என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக்கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!" என்றிருக்கிறார்.
தல, இருந்தாலும் நீங்கள் இவ்வளவு அப்பாவியாக இருத்தல் கூடாது. இன்றைய தேதியில் யார் தான் தோல்விப் படங்கள், மட்டமான படங்கள் கொடுக்கவில்லை? யாரும் இந்த விசயத்தில் விதிவிளக்கில்லை. நீங்கள் இப்படி எல்லாம் சாதாரனமாக, வெளிப்படையாக பேசுவது எனக்கு சரியாகப் படவில்லை.
இருப்பினும், நீங்கள் உங்கள் பதிலில் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கோ அல்லது உங்களின் ரசிகர்களுக்கோ அல்லது யோசிக்கும் திறன் உள்ள எவருக்கும் நன்கு புலப்படும். மட்டமான படங்கள் தருவது தவிர்க்கப் பட வேண்டிய விசயம் தான். இல்லை என்று சொல்லவில்லை. ரசிகர்களின் பணமும் நேரமும் விரயமாவது பற்றி நீங்கள் அக்கறையுடன் பேசும்போது இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நடிகரா என வியந்து போகிறேன். உங்களை சுற்றியுள்ள பிற நடிகர்களைப் பாருங்கள். அவர்கள் இது போன்ற கருத்துக்களை எதேனும் ஒப்பிப்பதுண்டா? தோல்வி படமோ மட்டமான படமோ, சற்றும் பொருட்படுத்தாமல் அடுத்த படத்திற்கு சென்றுவிடுவர். நீங்கள் மட்டும் ஏன் இப்படி?
அதே சமயம், உங்களது இந்த பதிலை பொது மக்கள் வேறு மாதிரி பார்க்கக் கூடும். அதாவது, உங்களுக்கு 'மார்கெட்' போய்விட்டது. படங்கள் சரியாக போகாத பட்சத்தில் தான் மீண்டும் கார் பந்தயங்களுக்கு திரும்பி விட்டீர்கள் என பல கருத்துகள் உங்களைச் சுற்றி வந்த வண்ணம் உள்ளன. அதனால், இது போன்ற சாக்குபோக்குகள் உங்களுக்கு தேவை படுகிறது என எண்ணக் கூடும்.
மேலும், நீங்கள் ஒன்றும் அறுபதாம் வயதில் உள்ளவர் இல்லையே. அந்த வயதில் உள்ளவர்களை சும்மா இருப்பதே மேல் எனலாம். கண்டிப்பாக நீங்கள் அல்ல. நீங்கள் அறுபது வயதைத் தாண்டும் போது அந்த கால கட்டம், சூழ்நிலை கண்டிப்பாக வேறுபட்டிருக்கும். நிறைய புதியவர்கள் வந்துவிடுவார்கள். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், உங்களின் இன்றைய படங்கள் தான் உங்கள் பேரையும் புகழையும் எதிர்காலத்தில் நிர்னயம் செய்யும். சும்மா இருந்தால் என்ன கிடைக்கும்?
அப்படியொன்றும் நடிப்பில் நீங்கள் சலைத்தவர் அல்ல. உங்களுல் ஒரு மாபெறும் நடிகன் இருக்கிறான். அந்த திறமையை வெளியே கொண்டு வாருங்கள். சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் பரவாயில்லை, தாராளமாக பணியாற்றலாம். ஓரளவு வெற்றிக் கனியை ருசித்த மிஷ்கின், வசந்தபாலன், ஜனநாதன் போன்ற இயக்குணர்களுடன் இணையளாம், தப்பே இல்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு நல்ல, சுவாரசியம் மிக்க கதை, திரைக்கதை தரக் கூடிய ஒரு இயக்குணர். அதற்கு முதலில் வழி தேடுங்கள். அதை விடுத்து தயவு செய்து, இது போன்ற கருத்துக்களைக் கூறி என்னைப் போன்ற ரசிகர்களை மன உலைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்...
Saturday, May 1, 2010
எனது காட்ஃபாதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
வெற்றியோ தோல்வியோ இரண்டையும் கையாளும் பக்குவம் இவரிடம் நிறைந்திருக்கிறது. தொடர்ந்து போராடும் குணம் உடைய இவரை, பொதுவாகவே தன்னம்பிக்கையின் சிகரம் என்பார்கள். எதற்காகவும் யாருக்காகவும் தனது தன்மானத்தையும் சுய மரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டார். தனக்கு சரி என்று பட்டால், நிச்சயம் அதனைச் செய்ய தயங்காதவர் இவர். போக விட்டு பின்புறம் பேசுவது இவருக்கு பழக்கமில்லை. எதையும் நேருக்கு நேராக எதிர் கொள்ளும் ஆற்றல் மிக்கவர். அதனாலோ என்னவோ, பொதுவாகவே சினிமா துறையில் இவரை எல்லாருக்கும் பிடிக்கும்.
எல்லாவற்றிற்கும் மேல், இவர் குணத்தில் தங்கம். வாழ்ந்தால் இவரைப் போல வாழ வேண்டும் என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். பிறருக்கு உதவும் செய்திகளைக் கூட வெளியில் கசிய விடாதவர். தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தாற் போல வாழ்ந்து காட்டுகிறார். ஒரு நடிகராக அப்பாற் பட்டு மோட்டார் சைக்கிள், கார் பந்தயம், புகைப்பட வள்ளுனர், மரங்கள் நடுதல் மற்றும் ஏரோ மோடலிங் போன்ற பல்வேறு விசயங்களில் இவரது ஈடுபாடே இதற்கு சான்று. அதனால் தான் என்னைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அஜித் அண்ணா. உங்களை வாழ்த்த வயதில்லை. நீங்கள் சினிமாத் துறையிலும் சரி, கார் பந்தயங்களிலும் சரி, தொட்டதெல்லாம் பொன்னாகி மென்மேலும் வளர இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். அன்பான மனைவி, அழகான குழந்தையோடு நீங்கள் வாழ்க்கையில் சீர் சிறப்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ கடவுள் ஆசிர்வதிப்பாராக...
அக்டோபர் மாதம் வரை கார் பந்தயத்தில் கவனம் செலுத்துங்கள். யாரைப் பற்றியும் எதை பற்றியும் கவலை வேண்டாம். ஐம்பதாவது படம் சரவெடியாய் வெடிக்க வேண்டும். தங்களின் ரசிகன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. உண்மையிலேயே நீங்கள் சாம்பலிலிருந்து எழுந்த ஒரு 'பீனிக்ஸ்' பறவை தான். "மாதா பிதா அஜித் தெய்வம்" என்ற எனக்கு அன்றும் இன்றும் இனி என்றும் நீங்கள் தான் 'தல', ரோல் மடல், காட்ஃபாதர் எல்லாம்... தல போல வருமா...
அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். :)
Tuesday, April 27, 2010
நடந்ததெல்லாம் நன்மைக்கே...
காட்சி 1:
காலையிலிருந்து முகம் தெரியாத நபரிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணமாகவே இருகின்றது. அவள் என்னை காதல் செய்கிறாளாம். இதில் என்ன வேடிக்கை என்றால் என்னை அவளுக்கு மிக நன்றாக தெரியும் என சொல்கிறாள். அதே சமயம், எனக்கும் அவளை நன்றாகத் தெரியும் என்கிறாள். சொன்னா நம்புங்க, எனக்கு பெண் நண்பர்கள் மிகக் குறைவு. சிறு வயதிலிருந்தே என் வகுப்பறையில் சேர்ந்து படித்த மாணவிகளுடன் கூட பேச மாட்டேன். மின்னலே 'மேடி' சொல்வது போல 'எனக்கு இந்த பொண்ணுகனாளே ஒரே அலர்ஜி. அவங்களுக்காக டைம் வேஸ்ட் பண்றது மணி வேஸ்ட் பண்றது எல்லாம் பிடிக்காது', நான் இந்த ரகம். அது மட்டும் இல்லாமல் my kind of girl-ஐ நான் இன்னும் பார்க்கவில்லை.
இந்த சதிகாரி என் பெயர், நான் வசிக்குமிடம் அத்தனையும் சரியாக சொல்கிறாள். நான் பல முறை கேட்டுப் பார்த்தும் அவளது அடையாளத்தை வெளிபடுத்த மறுத்தாள். உண்மையிலேயே, இதனால் எனக்கு இன்று வேலையே ஓடவில்லை (மனசாட்சி: இல்லைனாலும்). என்னையும் ஒரு பெண் விரும்புகிறாள் என்று நினைக்கையில் 'காலரைத்' தூக்கி பெருமிதம் கொள்கின்றேன். அதே வேளையில், இது உண்மை எனும் பட்சத்தில் இப்படியும் ஒரு பேண்ணா என கவலையாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அருவருப்பாக உள்ளது. காரணம், நீங்கள் அவளது குறுஞ்செய்திகளை வாசித்திருக்க வேண்டும். கௌதம் மேனன் படம் அதிகம் பார்ப்பாள் போலும். இதோ உங்களுக்காக சில:
நான் எவ்வளவோ கெஞ்சி கடைசியில் ஒரு வழியாய் அவள் பெயரை மட்டும் சொன்னாள், ராஜ் என. இது ஆண் பெயரல்லவா.
ஒரு வேளை இது ஒரு ஆணாக இருந்து, நான் ஒரு பெண் என எண்ணி இந்த கவலைக்கிடிமான சூழ்நிலைக்கு தள்ளப்படேனோ...
ஒரு வேளை நிஜமாலுமே எனக்கு இப்படி ஒரு 'secret admirer' இருப்பாளோ...
ஒரு வேளை எனது நண்பர்களில் யாரோ ஒருவர் இப்படி என்னிடம் விளையாடுகிறார்களோ...
ஒரு வேளை நான் 'gay' என்று இவன் நினைத்திருப்பானோ...
இப்படி பல 'ஒரு வேளைகள்'...
காட்சி 2:
அடுத்து, முகப்புத்தகத்தில் (Facebook) ஒருவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. சின்ன விசயம் தான். அவர் ஒரு சூர்யா ரசிகன். வழக்கம் போல சூர்யாவின் வீடியோ ஒன்றைப் பற்றிய விவாதம் ஏற்பட, அதற்கு நான் அண்ணன் காவுண்டமணியின் பாணியில் ஒரு கருத்து சொன்னேன். அதற்கு அந்த நபர் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறினார். ஆதலால், அவருக்கு பதில் கூறாமல் நான் புறக்கணித்தேன். என்ன நினைத்தார் என தெரியவில்லை. தனி மடலில் (chat) நான் ஏன் அவருக்கு பதில் சொல்லவில்லை என கேள்வி எழுப்பினார். அவருக்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என வற்புருத்தினார்; எச்சரிக்கைக் கூட செய்தார். நேரம் ஆக ஆக அவரது பேச்சு அனாவசியமாகத் தெரிந்தது. அந்த விசயத்திலிருந்து வெளிவந்து தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கினார் (personal attack). நம் பொருமைக்கும் ஒரு எல்லை இருக்கும் அல்லவா. கடும் சினம் எனக்கு. அவருடன் மேற்கொண்டு பேசாமல் அவரது ஃப்ரோபைளை துண்டித்தேன் (disconected his profile).
மீண்டும் அவர் எனக்கு நண்பராக அழைப்பிதழ் விடுத்தார். சற்று கோவம் தெளிந்த நான் அதனை எற்றுக் கொண்டேன். தன் செயலை எண்ணி பல முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தொலைப்பேசி எண்களைக் கூட பரிமாறிக் கொண்டோம். மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுசன், மன்னிகிறவன் அதை விட பெரிய மனுசன் என விருமாண்டி கமல் சொன்னது போல நான் பெரிய மனுசனாகி அவரை மன்னித்து விட்டேன்.
காட்சி 3:
நளை அதிகாலை எனக்கு பிடித்த Barcelona அணி Inter Milan அணியை அரை இறுதி இரண்டாம் சுற்றில் சந்திக்கவிருக்கிறது. முதல் சுற்றில் Inter Milan மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்றது. எனவே, நாளை விடியற்காலை நடக்கவிருக்கும் போட்டுயில் இரண்டுக்கு சூழியம் என்ற கோல் கணக்கில் Inter Milan-ஐ தோற்கடித்தால் இறுதிச் சுற்றுக்கு எனது அணி தகுதி பெறும். அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. எது எப்படியோ, இந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என நம்புகின்றேன். காலையிலிருந்து இதை நினைத்துக் கொள்ளுகையில் ஒரு அச்சம் மனதில் இருந்து தொலைக்கிறது. இதில் Barcelona அணி கண்டிப்பாக ஜெயித்து இறுதி சுற்றிலும் வெற்றி வாகை சூடி, தனது கடந்த ஆண்டின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள இறைவணை வேண்டுகிறேன். எனக்காக நீங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
ஒரே நாளில் எத்தனை எண்ணங்கள், சங்கடங்கள் மற்றும் புது புது அனுபவங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விசயங்களும் நன்மைகே என எண்ணி, அதில் நல்லதைப் பிழிந்து கெட்டதை அகற்றுவோமானால் சீருடன் வாழலாம். சில மாதங்கள் கழித்து, இதனை மீண்டும் படிக்கையில் கண்டிப்பாக சிரித்துக் கொள்வேன் என்பது உறுதி.
பி.கு நான் எழுதி சில நட்கள் ஆகிற்று. அதான் இந்த மொக்கை பதிவின் காரணம்.
Monday, April 19, 2010
'ரேனிகுண்டா' எனது பார்வையில்...
ஒரு சாதாரண 'மிடல் கிளாஸ்' குடும்பத்தில் பிறந்தவன் கதையின் நாயகன், சக்தி. இவனை எப்படியாவது ஒரு பொறியியல் வல்லுனராக ஆக்கிவிடுவது என்பது இவனது தந்தையின் கனவு. ஆனால், இவனுக்கோ படிப்பு வரவில்லை. அதட்டும் அப்பாவாக இல்லாமல், மகனால் என்ன முடியுமோ, அதைச் செய்யட்டும் என மனதைத் தேற்றிக் கொள்ளும் அன்பான அப்பா, கண்டிப்பான அம்மா என சக்தியின் குடும்பம் இன்பத்தில் மிதக்கின்றது.
ஒரு நாள், சக்தியின் கண் முன்னே, தனது பெற்றோர்கள் கொடூரமாகக் கொல்லப் படுகின்றனர். சக்தியின் அப்பா, தன் நண்பர் படுகொலைச் செய்யப் பட்டதைக் கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. கொலையாலி (கதிர்) பல முறை மிரட்டிப் பார்த்தும், இவர் மசியவில்லை. ஊரே வேடிக்கைப் பார்க்க சக்தியின் தாய் தந்தையினர் அழிக்கப் படுகின்றனர்.
ஒரே நாளில், தன் வாழ்க்கை இருண்டு போய்விட்டதே என துவண்டு கிடந்த கதையின் நாயகன், தன் பழியைத் தீர்க்க முற்படுகிறான். ஆத்திரமும் பழி வாங்கும் எண்ணமும் மட்டும் இருந்தால் போதுமா? தைரியம் இல்லாமல், கத்தியைத் தூக்கிக் கொண்டு கதிர் முன் நிற்க, அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் படுகிறான். பதினான்கு நாட்கள் சிறையில் அடைக்க தீர்ப்பு வழங்கப் படுகிறது.
கூட்ச சுபாவம் நிறைந்த சக்திக்கு, ஜெயிலர்கள் மூலம் பல அவதூறுகள். அடி, உதை என பத்தொண்பது வயதில் தாங்கிக் கொள்ள முடியாத கொடுமைகளை எதிர் நோக்க வேண்டிய கட்டாயம். அங்கு தான் அந்த நான்கு பேரையும் முதன் முதலாக சந்திக்கிறான். அவர்களுக்கு வயது பத்தோண்பதிலிருந்து இருபத்து நான்கு வரை தான், ஆனால் ஒவ்வொருவர் மேலும் பல வழக்குகள். சிறையினுள்ளே இவர்கள் வைத்தது தான் சட்டம். ஜெயிலர்களுக்கு கூட இவர்களின் மேல் ஒரு அச்சம் இருக்கும். அடி, மிதிபடும் சக்தியின் மேல் ஒரு கருனை பிறக்கிறது இவர்களுக்கு, தங்கள் வசம் வைத்து அடைக்கலம் கொடுக்கின்றனர். சக்தியும் வேரு வழியில்லாமல், ஜெயிலர்களின் கொடுமையிலிருந்து தப்பிக்க அந்த கூட்டத்தில் ஒருவனாக சேர்கிறான். சிறையிலிருந்து தப்பிக்கும் போது, அவர்கள் சக்தியையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.
சக்தியின் பெற்றோரின் படுகொலையை அறிந்து கொண்ட அவர்கள், அந்த கொலையாலி கதிரைத் தீர்த்துக் கட்ட உதவுகின்றனர். அதன் பிறகு, காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவும் விதத்தில், மும்பைக்கு ஒரு இரயிலின் மூலம் பயணம். சந்தர்ப்ப சூழ்நிலை, ரேனிகுண்டாவில் இறங்கி அங்கு ஒரு குண்டர் கும்பலின் சகவாசம் இவர்களுக்கு ஏற்படுகிறது. ரேனிகுண்டாவில் சக்தி ஒரு பெண்ணைப் பார்க்கையில் இருவருக்கும் காதல் மலர்கிறது. கதானாயகிக்கு பேச்சும் வராது, காதும் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது. தன் நண்பர்களின் தூண்டுதலுகினங்க சக்தி தன் காதலியுடன் எங்கேயாவது சென்று ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடிவெடுக்கிறான்.
இதற்கிடையே, ஒரு பெரும்புள்ளியைப் போட்டுத் தள்ள அந்த குண்டர் கும்பலால் இவர்கள் துண்டப் படுகிறார்கள். அந்த முயற்சி தோல்வியடைய, நண்பர்களில் ஒருவன் (பெயர் பாண்டு, இவன் தான் தலைவன் போலும்) அந்த இடத்திலேயே அடித்துக் கொல்லப் படுகிறான். பல நாட்களாக இவர்களைத் தேடிக் கொண்டிருக்கும் காவல் துறையினரோ எப்படியோ ரேனிகுண்டாவை வந்தடைகின்றனர். என்னதான் இவர்கள் பல சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டவர்கள் என்றாலும், ஒவ்வொருத்தராக காவல் துறையின் துப்பாக்கிக்கு பலியாகும் போது ஒரு பரிதாபம் ஏற்படுவது உண்மை. இறுதியில் அனைவரும் சுட்டுத் தள்ளப் படுகின்றனர், சக்தியைத் தவிர. காவல் துறையினர் ஒரு புறம் தீவிரமாகத் தேட, சக்தி அவர்களிடமிருந்து தப்பித்தானா, தன் காதலியுடன் ஒன்று சேர்ந்தானா என்பது மீதி கதை, அதாவது 'க்லைமாக்ஸ்'.
மிகவும் விருவிருப்பான திரைக்கதை படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றது. நகைச்சுவை, காதல், நட்பு, பாசம் என எல்லா அம்சங்களும் போதுமான சம அளயில் தெலிக்கப்பட்டுள்ளது. வசனகர்த்தாவை பாராட்டியே தீர வேண்டும். என்ன ஒரு இயல்பான வசனங்கள். நண்பர்கள் ஜெயிலர்களிடம் பேசும் கிண்டல் கலந்த வசனங்கள் மற்றும் மது அருந்தும் போது தங்களுக்கிடையே பேசும் பேச்சுகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன; வசனகர்த்தா தணித்து நிற்கிறார்.
நண்பர்களில் ஒருவன் ஜெயிலரிடம், "போய், சாம்பாருக்கு உப்பு இருக்கா பாருங்க", என்பதாகட்டும், மற்றொரு (வயதான) ஜெயிலரைப் பார்த்து பயந்த சக்தியிடம், 'இந்த ஆளுக்கா பயந்தே, இந்தாளுக்கெல்லாம் பயப்படாத' என்ற காட்சியாகட்டும், அதே ஜெயிலர் அறிவுரைக் கூறும்போது தெனாவட்டாக பதில் சொல்லும் காட்சியாகட்டும், திரையில் மிக துள்ளியமாக வளம் வந்து மனதில் நிற்கும் காட்சிகள் அவை. இயக்குணர் பண்ணீர்செல்வத்தின் முதல் படம் என நினைக்கிறேன். அசத்தியிருக்கார், இவருக்கு ஒரு சல்யூட். பிண்ணனி இசையும் பாடல்களும் படத்தோடு ஒன்றி வருகின்றன. நாயகனுக்கும் நாயகிக்கும் ஏற்படும் காதல் கனங்கள் மழையின் பிண்ணனியில் அழகாக ஒரு பாடலில் மூலம் காண்பிக்கப்படுகின்றது. அப்பாடலும் சரி, ஒளிப்பதிவும் சரி நினைவில் நிற்கின்றது.
அவர்கள் நால்வரும் குற்றவாளிகள் தான். ஆனால், அவர்களுக்கும் ஒரு கருணை குணம் உள்ளதை கதை மிக அழகாக சொல்கிறது. தாங்கள் தான் சீரழிந்து விட்டார்கள், நண்பனாவது (சக்தி) தன் காதலில் ஜெயித்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படும்போது இவர்களது நட்புணர்வு மெய்சிலிர்க்க வைக்கின்றது. இன்றைய தேதியில் இப்படி பட்ட நண்பர்கள் (அதாவது குற்றவாளிகளாக இருந்து) தங்கள் நண்பர்களும் தங்களோடு சீரழிந்து போக வேண்டும் என தான் விரும்புவர். சக்தியின் காதலுக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் மெனக்கெடும் அந்த நால்வரின் நல்லெண்ணமும் நட்பும் என்னை வெகுவாக கவர்ந்தது; பாராட்டக்கூடியது.
இது போன்ற படங்களின் அதிகரிப்பு நமது சமுதாயம் இன்னும் சீர்குலைய வழி வகுக்கின்றது. முன்பே சொன்னது போல, ஜெயிலர் ஒருவர் இவர்களுக்கு புத்திமதி சொல்லப் போய், அதற்கு இவர்களில் ஒருவனின் எகத்தாளம், தெனாவட்டு கலந்த பதில்களை நீங்கள் கேட்க வேண்டும். நல்லவனைக் கூட பணத்திற்க்காக குறுக்கு வழியில் இட்டுச் செல்லும் கூர்மையான சொற்கள் அவை. இதோ உங்களுக்காக:
ஜெயிலர்: ஏண்டா, இந்த வயசுல தலைக்கு பத்து பத்து கேசு வச்சுருக்கீங்கலே. உங்க வாழ்க்கை எல்லாம் என்னடா ஆகுறது? ஒரு வேலை வெட்டி பார்த்து பிழைக்கக் கூடாதா?
ஒருவன்: வேலை வெட்டிக்கு போயி, இன்னா சம்பாரிக்க போறோம்? உனக்கென்ன சம்பலம்? மாசம் ஃபுள்ளா உள்ள சுத்துனா ஒரு ஏழாயிரம் ருவா தருவாய்ங்களா? நாங்க ஒன்னு பண்ணா போதும் பத்தாயிரம் ரூவாய்க்கு மேலலாம் வாங்கிருக்கோம். தெரியும்ல...
ஜெயிலர்: எண்டா, காசு பணத்துக்காக ஒரு உயிரை பதபதைக்க கொல்லுறீங்களே... பாவம் இல்லையாடா?
ஒருவன்: ஞாயித்துக் கெழமையானா, கறி தின்னுறதுக்கு நீ ஆடு கோழி அருக்குறது இல்லையா, அந்த மாதிரி தான். பணத்த விடு ஏட்டைய்யா, ஆளை பார்த்தா ஒரு பயம் வர வேண்டாமா...
நேத்து அந்த பயல போட்டு (சக்தியை) அந்த அடி அடிச்சாங்களே, யாராவது கேட்டீங்களா? என்ன அடிக்க சொல்லுங்க பார்க்கலாம். சும்மா ஒரு அடி அடிக்க சொல்லுங்களேன் பார்க்கலாம். நீ பீ.சி தானே, கைல லத்தி வச்சுருகேல்லே... எங்க ஒரு அடி அடி பார்க்கலாம். சும்மா ஒரு அடி அடி பார்க்கலாம். எங்க போனாலும் சரி, எத்தன வருஷம் ஆனாலும் சரி, தேடி வந்து சங்க அறுப்போம்ல... சும்மா வருமா பயம்... நாலஞ்சு பண்ணா தான்னுய்யா பயப்படுறீங்க. கெளம்பு கெளம்பு. டெண்சன கெளப்பாதீங்கய்யா போய்யா... போ போ கெளம்பு...
ஜெயிலர்: தலை எழுத்து டா...
அதற்காக, இன்றைய சமுதாயத்தாய இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என சொல்லவில்லை. இது போன்ற வசனங்கள் கலந்த படங்கள் இவர்களுக்கு குண்டர் கும்பல், அயோக்கியத்தணம் போன்ற சட்ட விரோத செயல்களில் இறங்க ஒரு ஊக்குவிப்பாக அமைகிறது என்பதே எனது ஆதங்கம்.
Tuesday, April 13, 2010
மற்றுமொரு ஆண்டு இனிதே துவங்குகிறது...
நான் சம்பாதித்த அன்பான ஃபோளோவர்களே...
எனது பதிவுகளுக்கு தமிலிஷில் வாக்களிக்கும் துறவிகளே...
தொடர்ந்து ஆதரவை அள்ளித் தெளிக்கும் நல்ல உள்ளங்களே...
எல்லா பதிவுகளையும் படித்து மனம் நொந்து போகும் ஜீவன்களே...
ஒவ்வொரு பதிவிற்கும் மறவாமல் காமேண்ட் போடும் வாசகர்களே...
மொக்கையாக இருந்தாலும் நல்ல பதிவு என வாழ்த்தும் மகான்களே...
பதிவுகளை படித்துவிட்டு காமெண்ட் போடாமல் எஸ்கேப் ஆபவர்களே...
மற்றும் எனது நலம் விரும்பிகளே, நண்பர்களே, எதிரிகளே, துரோகிகளே, குழந்தைகளே, சிறுவர்களே, முதியோர்களே, தாய்மார்களே, இளஞ் சிட்டுகளே, ஆண் சிங்கங்களே, மாணவ மணிகளே...
உங்கள் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு நம் எல்லோருக்கும் சிறப்பான வெற்றிகரமான செழிப்பான வண்ணங்கள் நிறைந்த ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.
எதிர்வரும் ஆண்டை இருகரம் நீட்டி வரவேற்போமாக. அடுத்த வருடம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
நன்றி வணக்கம்.
__/\__ இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க __/\__
"தமிழன் என்று சொல்லடா 'தல' நிமிர்ந்து நில்லடா..."
என்றென்றும் உங்கள் நல்லாசியை நாடும்,
நா.யோகநாதன் AKA தலபேன்ஸ் :)
Saturday, April 10, 2010
'அங்காடித்தெரு' எனது பார்வையில்...
துணிகள், சீலைகள் போன்றவை விற்க்கப்படும் அங்காடிகளில் வேலைப் பார்க்கும் பணியாளர்களின் அன்றாட வாழ்க்கையை திறம்படச் சொல்லியிருக்கின்றது இப்படம். வருமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்ட இளைஞர்கள் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து கொண்டு வரப்படுகின்றனர். இவர்கள் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை கொத்தடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள். இவர்களுக்குள் ஏற்படும் காதல், விருப்பு வெறுப்பு, சகிப்புத்தன்மை என எல்லாவற்றையும் காண்பித்திருக்கிறார்கள். அகதிக்குச் சமமான வாழ்க்கையை சகித்துக் கொண்டு எப்படி எல்லாம் இந்த இளைஞர்கள் காலத்தைப் போக்க வேண்டியிருக்கிறது என படம் நகர்கிறது.
காதல், நட்பு, வேலை, பணிபுரியுமிடம், முதலாலிகள் கொடுமை என வழக்கமாக தமிழில் காட்டப்படும் சமாச்சாரம் தான். ஆயினும், அதனைக் கையாண்ட விதமும் அதை கண்முண்ணே கொண்டு வந்த திரைக்கதையும் அருமை. தங்க இடம், உன்ன உணவு என அடிப்படைத் தேவைகளை அளித்து வேலையும் கொடுப்பதாக மார்தட்டிச் சொல்லும் பல முதலாலிகள், மன்னிக்கவும் முதலைகள், வேலை எனும் பெயரில் தொழிலாலர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சும் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இப்படம்.
நடித்த அத்தனை நடிகர்களும் பாத்திரங்களுக்கு கட்சிதமாக பொருந்தியுள்ளனர். கதாநாயகியான அஞ்சலி தன் நடிப்பால் பிரமிக்க வைத்துள்ளார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கதாநாயகன், கதாநாயகனின் உயிர் நண்பன், கதாநாயகியின் தோழிகள் என அத்தனைப் பேரும் தத்தம் பாத்திரங்களை நன்கு செய்துள்ளனர். இத்தனைக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்றால் நம்ப முடிகிறாதா?
இயக்குணர் வசந்தபாலன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இவரது உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சென்று தெரிகிறது. தனக்கே உரிய பாணியில் கதையை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். வெயில் படம் தந்த அதே வடு இதிலும் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற என்னை இவர் ஏமாற்றவில்லை. நித்தமும் தமிழ் படங்களில் காண்பிக்கப்படும் அம்சங்களை அப்புறப்படுத்தி அவர்களது வாழ்க்கையின் மறுப்பக்கத்தை நெஞ்சை வருடும் திரைக்கதையில் காண்பித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குணர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைச் செதுக்கிவிட்டார் வசந்தபாலன். வசனகர்த்தா ஜெகமோகன் படமுழுவதும் ஜொலிக்கிறார். 'அப்பன் ஆத்தா இல்லாதவன், சோத்துக்கு வழி இல்லாதவனா பாத்து எடு, அவன் தான் ஒழுங்கா வேலை பார்ப்பான்', 'தீட்டு எல்லாம் மனுஷங்களுக்கு தான் கடவுளுக்கு இல்ல' போன்ற வசனங்கள் மிக இயல்பாக படத்தில் உளா வருகின்றன. ஒளிப்பதிவு, கலை போன்ற இதற விசயங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளன, குறை ஒன்றும் சொல்வதற்கில்லை.
இப்படத்தில் குறை ஏதும் இல்லையோ என்பவர்களிடம், எனது பதில், ஆம் உள்ளது. கதாநாயகனும் கதாநாயகியும் பறிமாறிக் கொள்ளும் தத்தம் முந்தைய காதல் கதைகள் அவ்வளவாக சுவாரசியமாக இல்லை. இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். முற்பாதியில் பல இடங்களில் விழும் தொய்வுகள் சொல்லும் படியாக மனதில் ஒட்டாத பின்னனி இசையோடு நம் பொருமையைச் சோதிக்கின்றன. பாடல்கள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சரியாக படமாக்கப் படவில்லை, குறிப்பாக 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடல். 'எலே' என படமுழுதும் வரும் துணைச் சொற்கள் எரிச்சல் மூட்டுவது என்னமோ உண்மை தான். முழுக்க முழுக்க வட்டார மொழிப் படங்கள் இனி வருவதை தவர்க்க முடியாது. ஆகவே, பழகிக் கொண்டு தான் ஆகவேண்டும். வட்டார வழக்கிற்கே உள்ள அழகை ரசிக்க பழகிக் கொள்ள இதுபோன்ற படங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
எது எப்படியோ, 'கிலைமாக்ஸ்' படத்தை தூக்கி நிருத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எல்லாவற்றையும் தாண்டி, படம் முடிந்து வெளிவரும்போது மனதில் ஒரு கனம் இருக்கவே செய்கிறது. இனி பணக்காரர்களோ, முதலாளிகளோ அல்லது பொது மக்களோ கூலி வேலை செய்து கஷ்டப்படும் பணியாளர்கள் மீது வைக்கும் பார்வையில் கடுகளவாவது கருணைக் கலந்திருந்தால் அதுவே இப்படத்தின் மிகப் பெறிய வெற்றி.
பி.கு உண்மையைச் சொல்லப் போனால் இந்த படம் என் மனதில் அவ்வளவாக ஒட்ட வில்லை. இதனைக் காட்டிலும் எனக்கு வெயில் பிடித்துள்ளது. அதற்க்காக அங்காடித்தெரு ஒரு சுமாரான படம் என்று சொன்னால், என்னைக் கடவுள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார். அனைவரும் பார்க்க வேண்டிய படம். இது போன்ற வித்தியாசமான படப்புகளைத் தமிழ் சினிமாவில் வரவேற்கத் தவறினால் நமக்கு மோட்சமே கிடையாது.
Tuesday, April 6, 2010
'ஃபார்முலா' 2-வில் அஜித் - வேறுபட்ட கருத்துக்கள்
அஜித் அவர்கள் இந்த முறை இக்கார் பந்தயத்தில் கலந்து கொள்வது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர். இவரது பங்கேற்பு பற்றி ரசிகர்கள் மத்தியிலும் சரி, பொது மக்களிடமிருந்தும் சரி, கலவையான கருத்துக்கள் உலா வந்த வண்ணமாக உள்ளன. இதுவரை நான் பார்த்த, கேட்ட, அறிந்த அனைத்து கருத்துக்களையும் தொகுத்துள்ளேன். இதனை மூன்று பிரிவினராக வகைப்படுத்தி, அதிலும் ரசிகர் கருத்து, மக்கள் கருத்து என மேலும் பிரித்துள்ளேன்.
முதல் பிரிவினர் - இந்த பிரிவினர் முழு ஆதரவு தருகின்றனர்
"கார் பந்தயம் என்றால் சும்மாவா... எத்தனை 'ரிஸ்க்க்'. இந்த மனுஷன் நம் நாட்டிற்கு பெருமை தேடித் தர முயன்றுக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத் தக்கச் செயலே. அஜித் ரசிகனாக இருப்பதில் பெருமைப் படுவது மட்டுமில்லாமல், இவரது வெற்றிக்குக் கடவுளை பிரார்த்திக்கிறோம். இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வந்தாலும் பரவாயில்லை. யாரைப் பற்றியும் எதனைப் பற்றியும் கவலை வேண்டாம். இப்போதைக்கு கார் பந்தயத்தில் கவனம் செலுத்துங்கள். நீ ஆடு தல... உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்", என்கின்றனர்.
"மிகவும் ஆபத்தான விளையாட்டு. இவரது மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் வெற்றி பெருவாரானால், நமக்கெல்லாம் அது பெருமைச் சேர்க்கும் சாதனை அல்லவா... இதில் வெற்றியடைவதும் தோல்வியடைவதும் அப்பாற்பட்ட விசயம். தமிழ் நாட்டு பிரதிநிதியாக இவர் கலந்து கொள்கிறாரே, அதுவே போதும். அஜித்திற்கு ஒரு 'சல்யூட்'. ஜெயிப்பார் என நம்புவோம். வாழ்த்துகள். ஆல் தி பெஸ்ட்...", என்று ஊக்கமும் உருதுணையும் அளிக்கின்றனர்.
இரண்டாம் பிரிவினர் - இவர்கள் சற்று நடுநிலை பார்வையுடையவர்கள்
"இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இவரது படங்களுக்கு மட்டுமே நாங்கள் ரசிகர்கள். தல, கடைசி படம் சரியா போகல... இந்த நேரத்தில் ஏன் இந்த திடீர் முடிவு? வருடத்திற்கு இரண்டு படங்கள் பண்ணுங்க... பந்தயத்தில் ஏதாவது ஆகிவிட்டால், நாங்கள் எல்லாம் என்ன பண்ணுவோம்... எங்கே போவோம்... கப்பல் இல்லாத துறைமுகமா, தல அஜித் இல்லாத திரையுலகமா... நீங்கள் இல்லாத திரைத் துறையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.", என்று புலம்புகின்றனர்.
"பேசாம இவர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தலாம். நமக்கு வேண்டியது இவரிடமிருந்து சுவாரிசியமான, ஜனரஞ்சக படங்கள் மட்டுமே. குடும்பம், குழந்தை என்றாகிவிட்டது. இந்த தருனத்தில், இப்பேற்பட்ட 'சீரியஷான" போட்டிகள் எல்லாம் அவசியம் இல்லை. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் மாதிரி ஆகிவிட்டது இவரது நிலை...", என்கின்றனர்.
மூன்றாம் பிரிவினர் - வெறும் வாய்ச் செவடால் ஆசாமிகள்
எனக்கு தெரிந்து ரசிகர்கள் இந்த பிரிவில் வரவில்லை. முதலாம் அல்லது இரண்டாம் பிரிவுகளில் மட்டுமே இவர்கள் அடங்குவர்.
"ஜெயிச்சிட்டாலும்... எதற்கு இவருக்கு இந்த வீர விளையாட்டு? இப்போ இவரை கலந்துக்கச் சொல்லி யார் அடிச்சா? இவர் ஜெயிப்பது சாத்தியமே இல்லை. கடைசி இரு படங்கள் சரியாக போகவில்லை. அதனால், கார் பந்தயங்களில் கலந்து கொள்கிறார். பணம் நிறைய இருக்கு போலும். அதான் இப்படி செலவு செய்கிறார். சில வருடங்களுக்கு முன்னால் இதையே தான் செய்தார். படங்கள் சரியாக போகவில்லை, கார் பந்தயங்களில் நாட்டம் செலுத்தினார். மீண்டும் நடிக்க வந்தார். இவர் ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன...", என கேலியும் கிண்டலுமாக பேசுகிறார்கள்.
கடைசி பிரிவினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு மனிதன் ஒரு முயற்சியில் இறங்கும்போது, நீங்கள் ஆக்கமும் ஊக்கமும் தராவிட்டாலும், அவர்களது மனம் நோகும் அளவிற்கு முட்டுக்கட்டையாக பேசுவது சரியல்ல. உங்களது அபசகுணமான பேச்சு அவர்களை மன உளச்சளுக்கும் வீழ்ச்சியிலும் ஆளாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. தட்டிக் கொடுக்காவிட்டாலும் எட்டி மிதிக்காமல் இருப்பதே சிறந்தது.
குறிப்பாக பிற நடிகர்களின் ரசிகர்கள் இந்த பிரிவில் அடங்குவர். எத்தனை விஜய், விக்ரம் அல்லது சூர்யா ரசிகர்கள் இப்போட்டியில் அஜித்தின் பங்கேற்பிற்கு ஆதரவு தருகின்றனர் என்பது கேள்விக்குறியே. இவர்களது பார்வையில், அஜித் ஒரு நடிகராக பார்க்கப்படுகிறாரே தவிர 'ஃபார்முலா' 2-வில் பங்கேற்க்கும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக அல்ல; இந்திய பிரஜையாக அல்ல. இவர்களது எண்ணம் முழுதாக மாற வேண்டும். அனைவரது ஆசியும் பிரார்த்தனையும் வெற்றி பெற அஜித் அவர்களுக்கு தேவை.
நான் எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக முதலாம் ரசிகர் பிரிவே. அஜித் ரசிகனாக எனக்கு இது பெருமை படக்கூடிய விசயம். ஒரு தமிழன் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகின்றது. அஜித் கண்டிப்பாக வெற்றி வாகை சூடுவார் என நம்பிக்கை இருக்கிறது. அதே சமயத்தில், அக்டோபர் முதல் நல்லதோர் கூட்டணியுடன் படம் பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு இருக்கிறது. அவரது பாதுகாப்பிற்கும் வெற்றிக்கும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 'குட் லக்' தல...
இதில் நீங்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்? பின்னூட்டத்தில் போடலாமே...
பி.கு படங்களுக்கு starajith.com தளத்திற்க்கு நன்றிகள்
Wednesday, March 24, 2010
இவர்களையெல்லாம் ஓங்கி அரைய வேண்டும்
1. திடீர் ஆங்கில மேதாவிகள்
உடன் படித்த நண்பனைச் சந்திக்கிறோம் (சில/பல ஆண்டுகளுக்குப் பிறகு). இத்தனைக்கும், இருவரும் தமிழ் தெரிந்தவர்கள், படித்தவர்கள். நாம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் (தமிழில்), ஆங்கிலத்தில் பதில் வரும். என்னமோ 'யூ.கே'யில் பிறந்து, 'கேம்ப்ரிட்ச்' பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற மாதிரி அளட்டிக் கொள்வார்கள். தமிழ் பேசுவது கௌரவக் குறைச்சல் என்றும் ஆங்கிலம் பேசுவதனால் தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் இந்த அறிவுஜீவிகள் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த மாதிரி நண்பர்களை ஓங்கி அரைந்து விடலாம் போலிருக்கும்.
2. தியேட்டர் கவுண்டரில் நேரத்தை வீணடிப்பவர்கள்
ஜோடியாக வந்திருப்பார்கள். 'கவுண்டரின்' முன்னின்று கொஞ்சிப் பேசி படத் தேர்வு, உட்காருமிடத் தேர்வு எல்லாம் முடிந்து, அதற்கப்புறம் பணத்தை சட்டைப் பைக்குள் தேடியெடுப்பார்கள். அதற்கு யார் பணம் கொடுப்பது என 'செல்ல' சண்டைகள் எல்லாம் ந்டக்கும். பலர் இப்படி கவுண்டரில் செய்வதனால், சிலர் படம் பார்க்க முடியாமலே போய் விடுகிறது. முன்னதாகவே, என்ன படம், போதுமான பணம் என எல்லாத் தேவைகளையும் தயார் செய்து வைப்பார்களேயானால் இதற்கு ஒரு தீர்வு காண முடியும். இந்த கூட்டத்தையும் ஓங்கி அரைய என் மனம் துடிக்கும்.
3. திரையரங்கினுள்ளே
பொதுவாக தியேட்டர்களினுள்ளே இரு பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். முதலாவதாக, படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குப் பிறகு அரங்கின் உள்ளே நுழைபவர்கள். ஆரவாரம் செய்து, இடத்தைத் தேடி பிடித்து உட்காருவதற்குள், நமக்கு படம் பார்க்கும் ஆசையே போய்விடும். அதுவும் திரையை மறைத்தவாரு நின்று கொண்டு 'டிக்கட்டை' பார்த்து இடம் தேடுவது நமக்கு எரிச்சலாக இருக்கும். படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் வந்தால், யாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வராது.
இரண்டாவதாக, தீவிரமாக படம் பார்த்துக் கொண்டிருப்போம். திடீரென தொலைப்பேசி ஒலிக்கும். மிகவும் தொந்தரவாக இருக்கும். மனதில் கடிந்துக் கொண்டே படத்தைப் பார்ப்போம். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தியேட்டரினுள் கைபேசியின் ஒலியை அமுக்கி வைப்பது அனைவரும் அறிந்த ஒரு உலக பண்பாடு/நியதி. பலர் இதனை விளங்கிக் கொள்ளாதவரை இது நீடிக்கும். அதுவரை எனது அரை வாங்கும் பட்டியலில் இவர்கள் இடம் பெருவர்.
4. பிச்சை கேட்டு வருபவர்கள் (உடல் ஊனம் இல்லை)
உடல் ஊனம் எதுவும் இருக்காது. அசுத்தம், கந்தலான உடை, பல நாட்கள் கோரப்படாத தலை முடி என பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் எல்லா குணாதிசயங்களும் இவர்களிடம் தெரியும். பிச்சை எடுப்பார்கள். இவர்களில் சிலர் ஒரு படி மேல் சென்று, நாம் உதவ மறுத்தால் நமக்கே உபதேசம் செய்வார்கள், திட்ட கூட செய்வார்கள். 'தம்பி, எங்கள மாதிரி ஆளுங்களுக்கு காசு கொடுக்கனும், அப்போ தான் நல்லா இருப்ப' என சொல்பவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி சோம்பேறிளை கண்ணம் சிவக்குமளவு அரைந்து, 'போய் உழச்சி சாப்பிடு யா' என சொல்லத் தோன்றும்.
5. எரிந்து விழும் பஸ் ஓட்டுனர்கள்
இதை பலர் அனுபவத்திருப்போம். எல்லாருக்கும் 'டென்ஷன்' இருக்கும். ஆனால், இந்த பஸ் ஓட்டுனர்களின் போக்கு மிக கொடியது. தன் சொந்த பிரச்சனையில் உள்ள கோபத்தைப் பயணிகள் மீது காட்டுவது சரியல்ல. அதோடு நிருத்திக் கொள்ளாமல், பேருந்தை ஆபத்தான போக்கில் செலுத்துபவர்களும் உண்டு. வேகமாக ஓட்டுவார்கள்; திடீரென 'ப்ரேக்' போடுவார்கள்; சரியான 'ஸ்டாப்பில்' நிருத்த மாட்டார்கள். ஒவ்வொரு பயணிகளிடமிருந்தும் ஒரு அரைக்குப் பிறகு, இது போன்ற பஸ் ஓட்டுனர்களின் 'லைசன்சை' முதலில் பரிமுதல் செய்ய வேண்டும்.
6. ஊனமுற்றோர் அல்லது முதியவர்களுக்கு முன்னுரிமை
பேருந்து, விரைவு ரயில் போன்றவற்றில் பயணித்திருப்போம். ஊனமுற்றோர்களோ அல்லது வயதானவர்களோ தள்ளாடி நின்று கொண்டிருக்கையில், வாலிபர்கள் உட்கார்ந்து வருவது வேதனைக்குள்ளாக்கும் காட்சி. அதிலும், நின்று கொண்டிருக்கும் முதியோர்களையும் உடல் ஊனமுற்றவர்களையும் பார்த்தும் பார்க்காதவாறு முகத்தை திருப்பிக் கொண்டு வெட்கமே இல்லால் தனக்கென்ன என்று உட்கார்ந்து வரும் மக்களை என்ன செய்ய? கண்டிப்பாக அரையத் தான் வேண்டும்.
7. உறக்க பேசும் ஆசாமிகள்
பொதுவாகவே ஆசியர்கள் உறக்க பேசுபவர்கள் எனும் அபிப்பிராயம் ஐரோப்பியர்களிடம் பரவலாக இருந்து வருகிறது. நான் பார்த்த வரையில் இது உண்மை தான். பொது இடங்களில், குறிப்பாக பேருந்தில் உறக்க பேசுபவர்களை நாம் பார்த்திருக்கக் கூடும். அதுவும் கையில் தொலைப்பேசி ஒன்றிருந்தால், உலகத்தையே மறந்து விடுவார்கள். பிற பிரயாணிகளுக்கு அவதூறு உண்டு பண்ணும் வகையில் நடந்து கொள்ளும் இந்த மாதிரி ஆசாமிகள் கண்டிப்பாக அரை வாங்கத் தகுதியானவர்களே.
8. தலையாட்டி பொம்மைகளாக நடத்தும் நண்பர்கள்
சில நண்பர்களுக்கு நாம் அவர்களுடைய தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உதாரணத்திற்கு, அவர்கள் எங்கு அழைத்தாலும், நாம் உடனே போக வேண்டும், மறுப்பு ஏதும் சொல்லக் கூடாது. ஏன், எங்கே, எதற்கு என்ற பேச்சிற்கே இடம் இருக்கக் கூடாது என அவர்கள் விரும்புவர். நமக்கென எந்தவொரு விருப்பு வெருப்பு ஏதும் இருக்கக் கூடாதா? இப்படிப் பட்டவர்கள் நண்பர்கள் அல்ல. ஒரே அரையில் உனக்கும் எனக்கும் இனி எந்த பொடலங்காய் நட்பும் கிடையாது என்று சொல்ல வேண்டும் போலிருக்கும்.
9. அலட்சியமான அரசாங்க ஊழியர்கள்
வரி, 'பென்ஷன்' என அரசாங்க கொடுத்தல் வாங்கலிடமிருந்து யாரும் தப்ப முடியாது. இது போன்ற விசயங்களில் அரசாங்க ஊழியர்களின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், அவர்களது அலட்சியப் போக்கினால் நமக்கு ஆக வேண்டிய வேலைகள் தள்ளிப் போகின்றன. தனக்கென்ன என்ற ஆனவமும், அரசாங்க ஊழியர்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாதென்றும் இவர்களிடம் ஒரு எண்ணம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் விடும் அரையில் இவர்களது கர்வம், ஆனவம், அகம்பாவம் எல்லாம் கரைந்து போய், தங்கள் பணிகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.
10. தொலைக்காட்சியில் விருப்ப பாடல்
இதைப் படித்தவுடன் நீங்கள் சிரிக்கலாம். ஆனால், எனக்கு இது ஒரு 'சீரியசான' விசயம், குறிப்பாக நான் அஜித் ரசிகன் என்பதனால். பல முறை பார்த்திருக்கிறேன். அஜித் ரசிகர்கள் அஜித் பாடல் வேண்டுமென கேட்டால், உடனே உரையாடல் துண்டிக்கப் பட்டுவிடும். இல்லையேல், நீங்கள் என்ன சொன்னீர்கள் என சரியாக விளங்கவில்லை என்று தொகுப்பாளர்கள் வாய்க் கூசாமல் பொய் சொல்லிவிட்டு, வேரு நடிகர்களின் பாடலை ஒளிபரப்புவார்கள். அந்த தொகுப்பாளர்களுக்கு அரை எல்லாம் பற்றாது. மாறாக, அவர்களை நிக்க வைத்து சுட வேண்டும் என்பதே எனது தீர்ப்பு...