Wednesday, June 2, 2010

ஐபேட் - கனினியின் அழிவின் ஆரம்பமா?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பு தான் இந்த ஐபேட் (iPad). தட்டையான 9.7 inch-இல் நீள் சதுர வடிவில் உள்ள இந்த கருவிக்கு தனிப்பட்ட தட்டச்சு இல்லை. தட்டச்சு வசதி அதன் முகப்பிலேயே (screen) கொடுக்கப்பட்டுள்ளது. விரல்களாலே வினவி பயன்படுத்தலாம். 0.5 inches தடித்த இக்கருவி 1.5 pounds இடையுடையது.


சுருக்கமாக சொல்லப் போனால், "கனினி பாதி, ஐபோன் (iPhone) பாதி, கலந்து செய்த கலவை நான்", என்று ஐபேட் தன்னை புகழாரம் பாடிக் கொள்ளலாம். இருப்பினும், இதில் என்னென்ன வசதிகள் (தற்பொழுது) இல்லை என வரிசைப்படுத்தியுள்ளேன். இதோ:

 • ஒரே நேரத்தில் பல நிரல்கள் (applications/programs)

  இந்த வசதி இல்லாதது ஐபேட்டின் மிகப் பெரிய குறை என்றே சொல்ல வேண்டும். கனினியை எடுத்துக் கொண்டால், ஒரே சமயத்தில் பல நிரல்களை செயல் படுத்தலாம். ஆனால், ஐபேட்டில் இது சாத்தியம் இல்லை. உதாரணத்திற்கு, வானொலியோ அல்லது பாடல்களோ கேட்டுக் கொண்டு இனையத்தில் வளம் வர முடியாது.

 • தொலைப்பேசி வசதி


 • இதனுள் ஒலிப்பெருக்கி (microphone/speaker) பொருத்தப்பட்டிருப்பது என்னமோ உண்மை தான். மேலும், தொலைப்பேசி நிறுவனங்கள் சேவைகளும் (cellular networks) இதில் அடங்கியுள்ளது. இருப்பினும், இக்கருவியின் மூலம் தொலைப்பேசி போல பேசவும் முடியாது; குறுஞ்செய்தி அனுப்பவும் இயலாது.

 • புகைப்பட வசதி


 • புகைப்படக் கருவி முன் புறம் பொருத்தப்பட்டிருந்தால் வீடியோ உரையாடல் (video conference) செய்ய வசதியாக இருந்திருக்கும். இக்கருவியின் பின் புறமாவது புகைப்பட வசதி செய்யப்பட்டிருந்தால், நினைத்த நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கலாம். புகைப்படக் கருவி பொருத்தாமல் விட்டது, புகைப்பட விரும்பிகளுக்கு ஏமாற்றமே.

 • HDMI வசதி


 • இந்த HDMI Output இல்லாததால், ஐபேட்டை தொலைக்காட்சி, ஃப்ரோஜேக்டர் (projector) போன்ற சாதனங்களுடன் பொருத்த முடியாது. எனவே, போதனைகள், வீடியோ கலந்துரையாடல்கள் (presentations) போன்றவை செய்ய முடியாமல் போய்விடுகிறது.

 • USB வசதி


 • இதில் USB port வசதி இல்லாத பட்சத்தில், thumb drive போன்ற தனிச்சைக் கருவிகளை பொருத்த முடியாது. நொடிகளில் thumb drive-இன் மூலம் கனினியில் செய்யும் தகவல் பரிமாறல்கள் வாழ்க்கையை எவ்வளவு எளிது படுத்துகின்றன. ஐபேட்டில் இந்த வசதி அமல் படுத்தாதது இன்னொரு பெரிய வருத்தம்.

 • Flash வசதி


 • Flash இல்லையேல், animations மற்றும் flash-இல் இயங்கும் வீடியோக்களை பார்க்க இயலாது. முகப்புத்தகத்தில் காணும் விளையாட்டுக்களை எல்லாம் மறந்து விட வேண்டியது தான்.

  இத்தனை வசதிகள் இல்லையா? அப்படி என்ன தான் இந்த பாழாப் போன ஐபேட்டில் உள்ளது என அலுத்துக் கொள்ளக்கூடும். இணையத்தளத்தை உபயோகிப்பது, மின்னஞ்சல் வசதி, படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, flash பயன்படுத்தாத விளையாட்டுக்கள் விளையாடுவது மற்றும் தள புத்தகங்கள் (ebooks) வாசிப்பது போன்ற சேவைகளை பூர்த்தி செய்கிறது. இதன் முகப்பு கண்டிப்பாக பார்வையாளர்களையும் பயன்படுத்துபவர்களையும் வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்றால் அதில் மிகையில்லை.

  இரண்டரை வயது சிறுமி தன் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஐபேட்டை துள்ளியமாய் உபயோகிக்கும் வீடியோவை இணத்துள்ளேன். "எங்களது கண்டுபிடிப்பைப் பயன்படுத்த வயது ஒரு தடையே இல்லை. எல்லா வயது பிரிவினரும் மிக எளிதில் உபயோகிக்கக் கற்றுக் கொள்ளலாம்", என ஆப்பிள் நிறுவனம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.  உலகம் முழுவதும் முதல் போணி வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. எனக்கு இந்த ஐபேட் மீது ஒரு நாட்டமும் ஈர்ப்பும் இருந்தாலும், நான் இப்போது வாங்கப் போவது இல்லை. வெளியாகிவிட்ட முதல் போணியிலிருந்து, மக்களின் பலதரப்பட்ட விமர்சனம் எழுந்த வண்ணமாக உள்ளன. இதனை நினைவில் கருதி, ஆப்பிள் நிறுவனம் பல புதிய அம்சங்களை தன் அடுத்த வெளியீட்டில் இணைக்க அதிக வாய்ப்புள்ளது. அதில், மேலே குறிப்பிட்டுள்ள விடுபட்ட வசதிகள் இணைக்கப்பட்டாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

  இதன் விலை அமெரிக்க டாலர் $499-லிருந்து $829 வரை என்கின்றனர். எந்த பொருளுமே அறிமுகப்படுத்தப்படும் போது அதிக விலையில் விற்கப்படுவது உலக நியதி. போகப் போக இதன் விலையும் கனிசமாக குறையும் என நம்புகிறேன். ஆதலால், என்ன அவசரம். பொருத்திருந்து வாங்குவோம்.

  பி.கு பொழிப் பெயர்ப்புகளில் பிழைகள் இருக்கலாம், மன்னிக்கவும். அப்படி உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் இருந்தால், பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டவும்.

  2 comments :

  1. //பொழிப் பெயர்ப்புகளில் பிழைகள் இருக்கலாம், மன்னிக்கவும். அப்படி உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் இருந்தால், பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டவும்

   அப்படி எதுவும் என் கண்ணுக்கு தெரியலையே தல...

   //உலகம் முழுவதும் முதல் போணி வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. எனக்கு இந்த ஐபேட் மீது ஒரு நாட்டமும் ஈர்ப்பும் இருந்தாலும், நான் இப்போது வாங்கப் போவது இல்லை. வெளியாகிவிட்ட முதல் போணியிலிருந்து, மக்களின் பலதரப்பட்ட விமர்சனம் எழுந்த வண்ணமாக உள்ளன. இதனை நினைவில் கருதி, ஆப்பிள் நிறுவனம் பல புதிய அம்சங்களை தன் அடுத்த வெளியீட்டில் இணைக்க அதிக வாய்ப்புள்ளது.

   நானும்தான் தல ... மெதுவா வாங்கிக்கலாம்

   ReplyDelete
  2. //இதன் விலை அமெரிக்க டாலர் $499-லிருந்து $829 வரை என்கின்றனர். எந்த பொருளுமே அறிமுகப்படுத்தப்படும் போது அதிக விலையில் விற்கப்படுவது உலக நியதி. போகப் போக இதன் விலையும் கனிசமாக குறையும் என நம்புகிறேன். ஆதலால், என்ன அவசரம். பொருத்திருந்து வாங்குவோம்.

   நான் நினைத்தேன், நீங்க சொல்லிட்டீங்க

   ReplyDelete