Wednesday, July 7, 2010

உலகக் கிண்ண வெற்றியாளர் - ஒரு கணித ஆராய்ச்சி

சமீபத்தில் நண்பர் ராஜா அவர்கள் ஒரு சுவாரசியமான கதையை வழக்கம் போல தனக்கே உரிய பாணியில் சொல்லியிருந்தார். அவர் சொன்ன விசயம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது, எந்த ஒரு ஆராய்ச்சியாயினும் அதனை கணிதம் மூலம் நிரூபணம் செய்தால் உலகம் ஏற்றுக் கொள்ளும். இல்லையேல், 'யாருக்கு காது குத்துற' என்ற எதிர் பதிலோடு நிராகரித்து விடுவார்கள் என்று அழகாக எழுதியிருந்தார். அதைப் படிக்க விரும்பினால் இங்கே செல்லவும்.


உலகக் கிண்ண காற்பந்து போட்டி அரையிருதி சுற்று வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது என்று பலரும் அறிவீர். இம்முறை உலகக் கிண்ணத்தை எந்த நாடு தட்டிச் செல்லும் என்ற ஒரு சிறிய ஆராய்ச்சியையே இந்த பதிவு எடுத்துறைக்கிறது, மன்னிக்கவும் கணிதம் மூலம் நிரூபணம் செய்ய் முயல்கிறது.

1. பிரசில் நாடு உலகக் கோப்பையை 1994-இல் வென்றது. அதற்கு முன்னர், 1970-இல் தட்டிச் சென்றது. ஆக இரண்டு வருடங்களையும் கூட்டினால், 1970 + 1994 = 3964.

2. அர்ஜெந்தினா கடைசியாக 1986-இல் வென்றது. அதற்கு முன், 1978-இல் தட்டிச் சென்றது. எனவே இரண்டு வருடங்களையும் கூட்டினால், 1978 + 1986 = 3964.

3. ஜெர்மனி 1990-இல் உலகக் கோப்பையை வென்றது. அதற்கு முன்னர், 1974. இரண்டு வருடங்களையும் கூட்டினால், 1974 + 1990 = 3964.

4. மீண்டும் பிரசிலை பார்த்தோமானால், அவர்கள் 2002-இலும் ஜெயித்தார்கள். 1962-இலும் வெற்றி அவர்களுக்கே. எனவே அவ்விரண்டு வருடங்களையும் கூட்டினால், 1962+ 2002 = 3964.

5. ஆதலால், 3964 என்ற மர்ம எண் தெரிய வருகிறது. இவ்வாண்டை (2010), அந்த 'மர்ம' எண்ணுடன் கழித்தால், இம்முறை யார் வெற்றி வாகை சூடுவார்கள் என்று தெரிந்துவிடும்.

3964 - 2010 = 1954... 1954-இல் உலகக் கிண்ணத்தை வென்றவர் வேறு யாருமில்லை, எனக்கு துளியும் பிடிக்காத ஜெர்மனி.


இன்று அதிகாலை நடந்த அரையிறுதி ஆட்டத்தில், உருகுவே அணி நெதெர்லாந்தைச் சந்தித்தது. அதில் நெதெர்லாந்து அணி மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் உருகுவேவைத் தோற்கடித்தது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில், ஜெர்மனி அணியும் ஸ்பேயின் அணியும் மற்றொறு அரையிறுதி சுற்றில் களமிறங்க உள்ளனர். நடக்கவிருக்கும் ஆட்டத்தில் ஜெயிக்கும் குழு நெதெர்லாந்துடன் இறுதிச் சுற்றில் மோத வேண்டும். இந்த ஆட்டத்தில் ஜெர்மனி ஸ்பேயினை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி, நெதெர்லாந்தையும் தோற்கடித்து, மேலே கணித்தது போல உலகக் கோப்பையைக் கைப்பற்றுமா? இந்த சிறிய ஆராய்ச்சி போட்டிக்கு முன்பே உண்மையை வெளிப்படுதியதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

பி.கு இப்படி ஆராய்ச்சி செய்யுமளவிற்கு உனக்கு இத்தனை அறிவா என்று வியக்க வேண்டாம். இது சத்தியமாக எனது ஆராய்ச்சியில்லை. இது போன்ற எண்ணங்கள் என் சிற்றறிவுக்கு எட்டாதவை. இந்த அளவுக்கு யோசிக்கும் திறமை இருந்திருந்தால், நான் சந்திர மண்டலத்திலேயே பிறந்திருப்பேன். இது என் நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். படிக்கும் போது, முன்பே குறிப்பிட்டது போல நண்பர் ராஜாவின் பதிவு தான் ஞாபகம் வந்தது. உடனே அதனை மொழிப் பெயர்த்து இங்கே பகிர்கிறேன், அவ்வளவே.:)

5 comments :

 1. I have received forwards about this. Note how conveniently Brazil's winning year was calculated separatedly, why not 1962+1970 or 1994+2002?. What about Uruguay 1930+1950? As Rajini says in Sivaji, "It's coincidence, dammit". Intha dagalti veelaiya kaatithan intha astrologers, numerologist ellam padaiyedukkurangga. Selected thinking, selected reading. Ayiram periyaar vanthalum....

  ....now have to deal with that pesky Octopus

  ReplyDelete
 2. @ Rakesh bro,
  Haha yes, as Vivek always say, 'unggaLa ellAm thiruthavE mudiyAthu daa'...
  It's a sheer coincidence and I loved this morning's match where Spain dominated the whole game and won by 1 - 0.
  InnumA 'Octopus'-a ulagam nambuthu? Antha Octopus-a innEram soup vachuruppAngga. Hehe

  ReplyDelete
 3. தல உங்களுக்கு நான் ஒரு விருது தந்திருக்கேன் ... என்னோட கடையில .. தயவு செய்து வந்து பெற்று கொள்ளுங்கள்

  ReplyDelete
 4. தல என்ன தல உங்க கணக்கு பொய்த்து விட்டதே ...

  ReplyDelete
 5. @ ராஜா
  //தல உங்களுக்கு நான் ஒரு விருது தந்திருக்கேன் ... என்னோட கடையில .. தயவு செய்து வந்து பெற்று கொள்ளுங்கள் //

  நன்றி நன்றி. பார்த்தேன். இன்று மதியம் வருகிறேன். :)

  //தல என்ன தல உங்க கணக்கு பொய்த்து விட்டதே ... //

  என்னுடையது அல்ல. :) யாரோ ஒருவர் இப்படி கணித்திருக்கிறார். நீங்கள் கூறியது போல், கணிதம் எல்லாம் போட்டு நிரூபணம் செய்ய முயன்றிருக்கிறார். அது பொய்த்துவிட்டது. அதுவே பலித்திருந்தால், அந்த மகானை கையில் பிடித்திருக்க முடியாது. ஹிஹி

  ReplyDelete