Tuesday, March 2, 2010

தவறு என் மீது, அஜித் நல்லவர் - இயக்குனர் பாலா

அஜித்திற்கும் இயக்குனர் பாலாவிற்கும் நடந்த யுத்தம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, அஜித் ரசிகர்கள் இதை அவ்வளவு இலகுவாக மறந்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் நக்கீரனில் 'கொஞ்சநேர வருத்தம்' எனும் தலைப்பில் இயக்குனர் பாலாவின் குமுறல் ஒன்று வெளியானது. அது பின்வருமாறு:



தனக்கும் அஜித்திற்கும் நிகழ்ந்த மனக் கசப்பில் தவறு தன் மீது தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அஜித் தன்னை விட நல்லவர், அப்படி சொல்லவதை விட, அஜித் அளவிற்கு அவர் நல்லவர் இல்லை என்று கூறியிருப்பாதாக அந்த செய்தி கூறுகிறது.

இது உண்மை ஆயினும், அஜித் ரசிகனான எனக்கு, என் சந்தோஷத்தை வார்த்தையால் சித்தரிக்க இயலவில்லை. உண்மையை நீண்ட நாட்களாக மறைத்து வைக்க முடியாது என்பது புலப்படுகிறது. 'Better late than never' என்று சொல்வார்களே, அது போல இப்போதாவது உண்மையை தன் வாயாலே ஒப்புக் கொண்டாரே, பாலாவிற்கு முதலில் எனது நன்றிகள்.

இனி வரும் காலங்களில், இவர் அஜித்துடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புகள் வரலாம். இந்தக் கூட்டணியை அஜித் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என கேள்விகள் எழலாம், எழும். மற்றவர்களைப் பற்றித் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை, இதில் நான் 'neutral' தான். இருவரும் சேர்ந்து படம் பண்ணினால், வரவேற்பேன். இல்லையேல், யாருக்கும் நட்டம் இல்லை என்பேன்.

ஒரு சில ரசிகர்கள், அண்ணன் கவுண்டமணி சொன்னது போல "கோழி குருடா இருந்தா என்ன, குழம்பு ருசியா இருக்கணும்..." எனும் கொள்கையை இதில் புகுத்துகிறார்கள். அதாவது, இருவரும் சமரச நிலை அடைந்து ஒரு படத்தில் பணி புரிந்தால் நன்றாகத் தான் இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும் எனக்கு, இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் பனி மூட்டமாகவே உள்ளது. எதற்காக இந்த திடீர் அறிக்கை? ஏன் இந்த திடீர் மன மாற்றம் பாலாவிற்கு? இப்படி பல கேள்விகள் விடையின்றி தவிக்கின்றன. இன்னொன்று, இந்த செய்தி நக்கீரனில் வெளிவந்தது மேலும் இதன் நம்பகத்தன்மையை குறைக்கிறது.

எது எப்படியோ, நமது கையில் என்ன இருக்கிறது? சினிமாத் துறையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.

பி.கு இந்த கூட்டணி சேரக் கூடுமா? சேர வேண்டுமா? சேரக் கூடாதா? பின்னூட்டத்தில் உங்களது கருத்துக்களைப் பகிரலாமே...

11 comments :

  1. Thalafanz,

    It is good to see Bala's statement about that episode. He sorted things out to a certain extent. But movie-making is a painful process and financial matters play crucial role in it, so I don't want to form opinion about this incident.

    About both of them working together: I don't know. I always thought Ajith is a misfit for Bala kind of films. Not sure how the outcome will be.

    :)

    ReplyDelete
  2. இந்த சைகோ கூட திரும்பவும் தல சேர்ந்து அசிங்கப்படணுமா. இவனுக்கு பெர்சனலா உதவி பண்ண போய் தல இழந்தது போது. உனக்கு இருந்தாலும் லொல்லு ஜாஸ்திபா.. அது எப்படி திரும்பவும் சைகோவோட ஒரு படம் பண்ணனுமான்னு கேள்வி கேட்கிறீயோ? நம்ம கப்புல நிறைய புனிதர்கள் எல்லாம் அப்போ கேள்வி கேட்டாங்களே.. இன்னுமா திருந்தல.. Don't care about this naathaari. He is enough to drive us mad by putting thala on line.

    ReplyDelete
  3. யோகா,
    வலைப்பதிவுலகத்துக்கு நல்வரவு!
    சிறப்பாக ஆரம்பித்திருக்கிறீர்கள் ..தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
  4. @Selvakumar,

    It has been long time, how are you? I heard you are in London now. Anyway I think still you are mixing the personalities with their creative products, I don't think it is a good idea. Bala may be a psycho personally but as a creator he stands apart and is way above.

    thirumbavum mothallA irunthAnnu thONuthu..take it easy.:)

    ReplyDelete
  5. பாலாவுடன் தல படம் பண்ண வேண்டாம் என்றுதான் நான் நினைக்கிறன்... தல மன்னிக்கும் குணம் கொண்டவர்தானே எது வேண்டுமானாலும் நடக்கலாம்.... அப்படி படம் பண்ணினால் அதை அஜித் ரசிகர்கள் கண்டிப்பாய் ஆதரிக்க மாட்டார்கள்

    ReplyDelete
  6. தல சத்தியம் தான் எப்பவும் ஜெயிக்கும்.

    தன்னம்பிக்கை தனிவழி இதனோட பெருந்தன்மையும் சேர்ந்து கொண்டது நம்ம 'தலைக்கு'

    பாலோயர் ஆகிட்டேன் தல

    ReplyDelete
  7. நேரமிருந்தா படிச்சு பாருங்க
    balapakkangal.blogspot.com

    ReplyDelete
  8. Hi Judge, I'm fine & yes am in UK (not in london). I don't care about this creative psycho outputs since I don't find them great. But Mistakes serve as good lessons. One shouldn't repeat them. right? so, I think ajit shouldn't repeat the mistake again. that is what even bala fans like as well since they find ajit a bad actor for bala films :)

    Here we are bashing a psycho who put us through lot of hardships and remained silent during crucial times. Again, outside his movies. We have this right since this fellow took this much time to accept it. I am not referring to his movies here :P :)

    ReplyDelete
  9. This is definitely a surprise. What I would call as "vashishtar vaayal brahmarishi".

    Bala is well known for the arrogance.

    Bala is certainly an overrated director. He is trying to bring some new chapters in tamil cinema. But he himself is spoiling it by inserting unwanted commercial elements in it. However, I would like Ajit to work with Bala for a sensitive, offbeat movie like Nan kadavul etc. I do not want Ajit to do a masala/commercial flick with Bala. Not eagerly looking forward to Bala-Ajit combo. But I would be interested to watch if it happens.

    ReplyDelete
  10. @MrJudge

    Misfit??? I'm just puzzeled on why Bala had to go after Ajith for Sethu and Nandha...
    Anyway, freeA viduvOm... Thanks for dropping by and comments. Appreciate it :)

    @Selvakumar

    There were so many occasions where people had to eat their own words when it come to Ajith.
    இப்பொழுது போய் அவர்களைக் கேட்டால், நான் அப்படி சொல்லவே இல்லை என்றாலும் ஆச்சரியமில்லை. (That too in hub, anything is possible :P )
    Regarding Thala working with Bala, no comments from my side. We always have Ameer I say. அமீருடன் ஒரு படம் பண்ணினால் நன்றாக இருக்கும். அவரே ஒரு பேட்டியில் அஜித்துடன் பணி புரிய ஆசை என்று சொன்னார், அதுவும் 'பலே பாண்டியா' ரீமேக் செய்து பட்டய கிளப்பலாம் என்று சொன்னதாக ஞாபகம்.
    Thanks for dropping by bro :)

    @ஜோ/Joe

    நன்றி ஜோ அண்ணா. தங்கள் ஆதரவும் வழிகாட்டலும் எப்போதும் தேவை. வருகைக்கு நன்றி. மீண்டும் வருக :)

    @"ராஜா" from புலியூரான்

    கருத்துக்கு நன்றி நண்பரே... ம்ம்ம் என்ன நடக்குமென்று பொருத்திருந்து பார்ப்போம். வருகைக்கு நன்றி. மீண்டும் வருக :)

    @பாலா

    வாங்க நண்பர் பாலா... தங்களது வலைப்பூவையும் தொடர்கிறேன். வருகைக்கு நன்றி. மீண்டும் வருக :)

    @Vinith

    என்ன புரியாத பாஷை எல்லாம் பேசுகிறீர்கள்... :P

    //Bala is certainly an overrated director. He is trying to bring some new chapters in tamil cinema. But he himself is spoiling it by inserting unwanted commercial elements in it.//

    உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. :shock:

    //Not eagerly looking forward to Bala-Ajit combo. But I would be interested to watch if it happens.//

    ஏறக்குறைய நானும் இதே நிலையில் தான் உள்ளேன்...
    கருத்துக்கு நன்றி. மீண்டும் வருக :)

    ReplyDelete
  11. Selva & Judge - உங்கள் இருவரையும் இங்கு பார்த்தவுடன் அண்ணனின் காமடி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது...

    கவுண்டர்: நீயா???

    செந்தில்: நீங்களா???

    வடிவேலு: ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேரு வேரு பாதையில் போய் விட்டன... இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே...

    கவுண்டர்: ஆடு எப்படி டா பேசும்??? ஆடு இதுக்கு முன்னாடி பேசி நீ கேட்டுருக்கியா டா??? lol

    இங்கே: @2.11 - 2.30

    http://www.youtube.com/watch?v=Qd1g8ssZzpw

    ReplyDelete