Monday, March 8, 2010

அஜித் + கௌதம் கூட்டணி = சாத்தியமா?

இதுவரை நாம் அறிந்தவை:

1. தயானிதி தயாரிப்பில், கௌதம் அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்கவுள்ளார்.

2. இப்படத்தின் ஏனைய முன் ஏற்பாடுகளை கௌதம் செய்து வருவதாக அவரே தனது அன்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

3. இதற்கிடையில், அஜித் திடீரென கார் பந்தயத்தில் (இந்த முறை F2)கலந்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளார்.

4. இந்த கார் பந்தயம் வரும் ஏப்ரலில் துவங்கி அக்டோபரில் முடிவடையும் போல தெரிகிறது.

சரி, இப்போது விசயத்திற்கு வருவோம்.

இப்போது தான் அசல் கொடுத்த 'துன்ப' அதிர்ச்சியிலிருந்து ஒரு வழியாக எழுந்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் இடி போன்ற ஒரு செய்தி. என்ன அது? அதாவது, கௌதம் சிம்புவை வைத்து அடுத்து ஒரு ஆக்க்ஷன் படம் எடுக்கப் போகிறாராம்.


ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தனக்கு வசப்படும் கால அவகாசத்தை, நீண்ட நாட்களாக கெடப்பில் கிடக்கும் சமீராவின் 'த்ரில்லர்' படம் ஒன்றுக்கு செலவிடுவார் என்று செய்திகள் உளாவின. அதுமட்டுமின்றி, அந்த படம் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், சுமார் ஓரிரு மாதங்களில் முழுமை அடையக் கூடும் என்பதையும் அறிந்தேன். நன்று.

ஆகவே, எப்படியும் அக்டோபர் மாதத்தில் இந்த கூட்டணி சேருமென்று கனவுலகில் மிதந்தேன். யார் கண் பட்டதோ தெரியவில்லை, அடுத்து கௌதம் சிம்புவுடன் சேர்ந்து இன்னொரு படம் பண்ணுவதாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதற்கு என்ன, என்கிறீர்களா?

இது முழுக்க முழுக்க புதிய 'ப்ராஜெக்ட்' என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் அதிக பட்சம் நான்கே மாதங்களில் படத்தை முடித்து வெளியிடும் பேரரசு அல்ல என்பதை நினைவில் கொள்க. எப்படியும் ஆரு மாதங்களாவது வேண்டும் இவருக்கு. அதற்கப்புறம், 'post production' வேலைகள், பட ரிலீஸ் என சுமார் இரு மாதங்கள் தேவைப்படும் (எனது குறைந்த பட்ச கணிப்பு). ஆக, இந்த ப்ராஜெக்ட் எப்படியும் முடிய இந்த ஆண்டு இருதியாகிவிடும்.

இதற்கிடையே, கார் பந்தயம் முடிந்து திரும்பிவிடுவார் அஜித். கால்ஸீட்டை விரயமடிக்க விரும்பாத தயாரிப்பாளர் ஏதாவது சில மொக்கை இயக்குனர்களை அஜித்திற்கு பரிந்துரைச் செய்வார். அஜித்தான் கருணையின் மரு உருவம் ஆயிற்றே. உடனே, அந்த பட்டியலில் இருந்து, ஏதாவது ஒரு 'கைத்தேர்ந்த' இயக்குனரை தேர்வு செய்யக்கூடும். மீண்டும் தன் 'நண்பன்' சரணுடனே சேர்ந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

இறுதி பத்தியில் நான் சொன்னவை ஏற்கனவே நடந்தவை தானே. ஆம், அசலைத் தான் சொல்கிறேன். போட்ட தழும்பு இன்னும் ஆறவில்லை. அதற்குள் இன்னொன்றா?
இப்போழுது, நீங்கள் சொல்லுங்கள். அஜித் + கௌதம் கூட்டணி = சாத்தியமா?

வருத்தம், பயம் & கலக்கத்துடன்,
ஒரு ரசிகன்...

3 comments :

 1. don't worry thala.... goutham and ajith will surely paired for their next project...

  ReplyDelete
 2. கண்டிப்பா ரெண்டு பெரும் இணைவார்கள். நல்ல ஒரு திரைப்படத்தை எதிர்பார்ப்போம் நண்பா...

  ReplyDelete
 3. @"ராஜா"

  அதே நம்பிக்கையில் தான் நானும் இருக்கிறேன் நண்பரே :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  @பாலா

  இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு உள்ளது. ஒருவர் மேல் இன்னொருவர் நல்ல மரியாதை வைத்துள்ளார்கள். கண்டிப்பாக இருவரும் சேர்ந்து படம் பண்ணுவார்கள். அது அடுத்த படமாக இருக்குமா என்பதே கேள்விக் குறி... Hope for the best. :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete