Thursday, November 18, 2010

மங்காத்தா - பில்லா 2

'தல' படம் வரவில்லை, இருப்பினும் இந்த வருட தீபாவளி அஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளியாக அமைந்து விட்டது. இரண்டு சரவெடி செய்திகள் விகிதம் அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் இரட்டிப்பு கொண்டாட்டம்.

முதலில் சரவெடி :-

ஏகப்பட்ட பில்-டப்புகளுக்கு இடையே, மங்காத்தா பட ஸ்டில்கள்/போஸ்டர்கள் சில வெளியாக்கப்பட்டன. 'ஈஸ்ட்மெண்ட்' வண்ணம், பிண்ணனியில் தேர்வு செய்யப்பட்ட கட்டிடங்கள், தலைப்பை எழுதிய விதம், ஐம்பதாவது முத்திரை என எல்லாம் நன்றாகத் தான் உள்ளது. இருப்பினும், அவ்வளவாக எனக்கு திருப்தியாக இல்லை. அஜித் சற்று மெலிந்து இருப்பது ஒரே ஆறுதல். மற்றபடி, நரைத்த முடியுடனும் களைப்புற்ற முகத்துடனும் அஜித் தோற்றமளிப்பது மிகவும் வருத்ததை அளிக்கின்றது. George Cloony-ஆக வந்து போக நாம் ஒன்றும் Hollywood-இல் இல்லையே. அங்கே அது ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், இங்கே இது போன்ற விசயங்களை ஏற்க நம் மக்களுக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை என்றே சொல்லலாம். ரசிகர்களை விட்டு விடுவோம், தல எப்படி வந்தாலும் கைத்தட்டுவார்கள், விசில் அடிப்பார்கள். எனது கவலை எல்லாம் பொது மக்களே. நமது மக்களை ஈர்க்க தோற்றம் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது என்று அஜித் சீக்கிரம் உணருதல் அவசியம். 'வாலி' அஜித்தை மீண்டும் திரையில் காண்பிப்பேன் என்று வெங்கட் பிரபு சொன்னதாக ஞாபகம். இதற்கு தான் இப்படி ஒரு பில்-டப் செய்தீர்களா என்று வெங்கட் பிரபுவை கேட்க தோன்றுகிறது. இதோ:


இரண்டாம் சரவெடி :-

பில்லா இரண்டாம் பாகத்தின் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது. இதைத் துளியும் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கப் பட்டனர். மங்காத்தா படபிடிப்பு முடிந்தவுடனே, ஏப்ரலில் பில்லா இரண்டு துவங்குமாம். இதனை அமரர் திரு பாலாஜி அவர்களிண் மகனும் இன்னுமொறு நிறுவனமும் இணைந்து தயாரிக்கப் போகின்றனர். பில்லா முதல் பாகத்தில் பணியாற்றிய நான்கு ஜம்பவான்களான இயக்குணர் விஷ்னுவர்தன், இசையமைப்பாளார் யுவன், எடிட்டர் ஷிரீகர் பிரசாட் மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இதிலும் இடம்பெருவர். இது முதல் பாகத்தின் தழுவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, முதல் பாகத்திலிருந்து பின்னோக்கி கதை செல்லும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு சொல்வாரே, "அவன் எப்படி ஒரு டோன் ஆனான், எப்படி பில்லாவானாங்ரது தான் கதை. தல அஜித் தான் இதுக்கு பொருத்தமா இருப்பார்", அது போல. பில்லா இரண்டு வெற்றி படம் என்று இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம். வெங்கட் பிரபு இது நாள் வரை முகநூள், துவிட்டர் மற்றும் இதற இணைய தளங்களில் மெனக்கெட்டு மங்காத்தாவிற்கு கூட்டிய எதிர்பார்ப்பை விஷ்னுவர்தன் ஒரே அறிவிப்பில் செய்து விட்டார். இதோ:



ஐம்பதாவது படமென்பதால், மங்காத்தாவிற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடயே மட்டுமல்லாது பொது மக்களிடமும் இருக்கும். பில்லா முதல் பாகம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது நாடறிந்ததே. அதனால், இந்த இரண்டாம் பாகத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது, தல விழித்துக் கொண்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. சரியான பாதையில் பயணிக்கிறார் என்பேன். தோற்றத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் என்னைப் போன்ற ரசிகர்களுக்கு அளவில்லா இன்பம் தான்.

பி.கு மங்காத்தாவிற்கு பிறகு, 'கிரீடம்' விஜய்யின் படத்தை ஆவலாக எதிர்பார்த்தேன். அது ஒரு 'பீரியட்' படம். ஆக்ஷ்சன் (மங்காத்தா) படத்திற்கு பிறகு 'கிரீடம்' விஜய்யின் படம், அதற்கடுத்து பில்லா இரண்டு (மற்றுமொறு ஆக்ஷ்சன் படம்) என்றிருந்தால், ஒரு 'variety' இருந்திருக்கும்.

தங்களது கருத்து என்னுடன் வேறுபட்டால், பின்னூட்டத்தில் பிகிர்ந்து கொள்ளலாம்.

7 comments :

  1. என்னை பொறுத்தவரை அஜித்தின் நிஜ தோற்றம் இனிவரும் காலங்களுக்கு அஜித்திற்கு பலமே, அதை மறைக்க வெளிக்கிட்டால் அதற்காகவே அதிக நேரத்தை செலவிட நேரிடும், இப்போது அஜித் ரிலாக்சாக இருக்கலாம்.

    அதேபோல எதிர்பார்ப்பு அளவுக்கதிகமாக அதிகரிப்பது அவளவு நல்லதல்ல, அஜித் படமென்றில்லை எந்த பெரிய ஹீரோவினுடைய படமானாலும் எதிர்பார்ப்பு அதிகரித்தால் அது 90 % எதிர்பார்ப்பை பூர்த்தியடயாவிட்டால் படம் தப்பிப்பது சிரமம். அதே எதிர்பார்ப்பு குறைவான படம் 50 % எதிர்பார்ப்பை நிறைவு செய்தாலே ஓடக்கூடிய சாத்தியம் உண்டு.

    ReplyDelete
  2. thala i can't accept your oppinion about thl's getup in mangatha... i thibk it's not a poster from the real movie , just a teaser ... still now venkat doesn't release any original stills... don't think negativly boss...

    ReplyDelete
  3. @ எப்பூடி..

    //என்னை பொறுத்தவரை அஜித்தின் நிஜ தோற்றம் இனிவரும் காலங்களுக்கு அஜித்திற்கு பலமே, அதை மறைக்க வெளிக்கிட்டால் அதற்காகவே அதிக நேரத்தை செலவிட நேரிடும், இப்போது அஜித் ரிலாக்சாக இருக்கலாம்.//

    நான் நிஜ தோற்றத்தை மறைக்க சொல்லவில்லை நண்பரே. படங்களில் மட்டும் மறைத்து இளமையாக வர வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறேன். ரஜினி சார் போல.

    //அதேபோல எதிர்பார்ப்பு அளவுக்கதிகமாக அதிகரிப்பது அவளவு நல்லதல்ல, அஜித் படமென்றில்லை எந்த பெரிய ஹீரோவினுடைய படமானாலும் எதிர்பார்ப்பு அதிகரித்தால் அது 90 % எதிர்பார்ப்பை பூர்த்தியடயாவிட்டால் படம் தப்பிப்பது சிரமம். அதே எதிர்பார்ப்பு குறைவான படம் 50 % எதிர்பார்ப்பை நிறைவு செய்தாலே ஓடக்கூடிய சாத்தியம் உண்டு. //
    உண்மை, உடன்படுகிறேன்.

    வருகைக்கு நன்றி, மீண்டும் வருக. :)

    ReplyDelete
  4. @"ராஜா"...

    //thala i can't accept your oppinion about thl's getup in mangatha... i thibk it's not a poster from the real movie , just a teaser ... still now venkat doesn't release any original stills... don't think negativly boss... //

    I'm not thinking negatively. IT's all frustrations. Waiting for first official stills. Let's see how Venkat showcases our Thala.

    Thanks for dropping by. :)

    ReplyDelete
  5. தல உங்களை ஒரு தொடர் பதிவிர்க்கு அழைத்துள்ளேன் .. மறக்காமல் எழுதுங்கள்

    http://apkraja.blogspot.com/2010/11/blog-post_3840.html

    ReplyDelete
  6. நண்பரே, உண்மையைச் சொல்லப் போனால், பாதி பதிவை முடித்துவிட்டேன்.
    தற்போது, என்னை பல பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன.
    மீண்டு வந்து விரைவில் பதிவைப் போட்டுவிடுகிறேன்.
    அழைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். :)

    ReplyDelete
  7. தல பொறுமையா உங்களுக்கு டைம் கெடைக்கும் போது எழுதுங்க போதும் ...

    ReplyDelete