Tuesday, August 3, 2010

அஜித் - பதினெட்டு வருட திரைப் பயணம்...

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு, இதே நாள் (ஆகஸ்டு 3, 1992), ஒரு இளம் வாலிபர் 'பிரேம புஷ்த‌கம்' எனும் ஒரு தெலுங்கு படத்தின் படபிடிப்பில் தன் சினிமா வாழ்க்கையைத் துவங்கினார்.

தமிழ் சினிமா என்னவென்று துளியும் அறிந்திறாத‌ அந்த இளைஞர், தன் சொந்த கஷ்டங்களைப் போக்கும் வகையில் பணத்திற்க்காக சினிமா துறையைத் தேர்ந்தெடுக்கலானார்.

பொதுவாக அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். ஒரு வேளை, அரசியல் கலந்த இந்த தமிழ் சினிமாவும் ஒரு சாக்கடையே என்று தெரிந்திருந்தால் அந்த இளைஞர் தன் திசையை மாற்றியிருக்கலாம். என்ன செய்வது, அதனைப் பற்றி அவருக்கு பாடம் புகட்ட ஒரு ஆசிரியர் இல்லாமல் போனது அவ‌ரது துரதிஷ்டம்.


யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்திருக்கும். தல அஜித் தமிழ் சினிமாவிற்குள் புகுந்து பதினெட்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஒன்றா இரண்டா, பதினெட்டு வருடங்கள். ஒவ்வொறு கட்டங்களிலும் அவர் எதிர்நோக்கிய கஷ்டங்கள் எண்ணிலடங்காதது. எத்தனை இன்பம், எத்தனை துன்பம், சோதனைகள், தடைகள், கட்டுப்பாடுகள், அனாவசிய பிரச்சனைகள் என அவர் சந்தித்த விஷயங்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்ததே.

குழந்தைகளின் கைகளைப் பிடித்து நடை பழகிவிடுவார்களே, அது போல இவருக்கு பக்கபலமாக இருக்க யாரும் முன்வரவில்லை. தனியாக போராடினார். அதனால், வெற்றிகளோடு சேர்ந்து சறுக்கல்களையும் எதிர்நோக்கினார். இவரது வெற்றிகளைக் கொண்டாடிய பலர் இவரது கஷ்ட காலத்தில் துணை வராதது வேதணைக்குரியது. அதனால் என்ன, தனது சொந்த அனுபவத்தில் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.

யாரையும் மிக எளிதாக நம்பிவிடுவார். இவரது இந்த பலவீணத்தை பலர் பல வேளைகளில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இவருக்கு எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம் என்று புதிதாய் சினிமாவில் புகும் யாரும் சொல்லி விடுவர். தன் முதுகைக் குத்திக் கிழித்தவர்களின் மூலம் இவர் அடைந்த ஒரே பயன், இப்போது நாம் ஒரு பக்குவமான அஜித்தைப் பார்ப்பது தான்.


எந்த‌வொறு பிண்ன‌னியும் இல்லாத‌ இவ‌ர், த‌ன‌க்கென்று ஒரு த‌னி சாம்ராஜிய‌த்தையே உண்டு ப‌ண்ணினார். ர‌சிக‌ர் ம‌ன்றங்கள் எண்ணிக்கையும் இவர‌து ஒவ்வொறு பட ரிலீசின் போது கிடைக்கும் வரவேற்பும் ('ஒபெனிங்') இதற்கு சான்றுகள். என்ன தான் இவருக்கு 'காட்ஃபாதர்' இல்லையென்றாலும் என்னைப் போன்ற‌ பல ரசிகர்களுக்கு இன்று இவர் தான் 'காட்ஃபாதர்', முன்னோடி, 'ரோல்மாடல்' எல்லாம்.

தல, இந்த அகம்பாவம், ஆனவம், துரோகிகள் சூழ்ந்த தமிழ் சினிமாவில் பதினெட்டு வருடங்கள் பயணித்துவிட்டீர்கள். இன்னமும் பல ஆண்டுகள் கடக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கப்பல் இல்லாத துறைமுகமா, தல அஜித் இல்லாத தமிழ் திரையுலகமா...

9 comments :

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Nice tribute. When was the first pix you featured taken?

    ReplyDelete
  3. தலைக்கு வாழ்த்துக்கள்... முதல் படம் அருமை ....

    ReplyDelete
  4. விரைவிலேயே தமிழ் சினிமா தலையும் தலை சார்ந்த இடமுமாக மாற போவது உறுதி.....

    ReplyDelete
  5. நன்றி சித்ராஜி. எந்திரனுக்கு எனது வாழ்த்துகள் :)

    ReplyDelete
  6. @ Rakesh bro
    Thanks. It was taken 18 years ago. It seems this still was used when Ajith was scouting for directors. Hehe
    Ajith looks so dashing, this is how I look right now right enbathu kuRippidaththakkathu. :P

    ReplyDelete
  7. "ராஜா"
    இப்போதைக்கு நல்ல கதைகளைத் தேர்ந்துடுத்து நடித்தால், நீங்கள் சொல்வது சாத்தியமாலாம். :)

    ReplyDelete
  8. @ Bala
    பதினெட்டு வருடங்களுக்கு முன்னெடுத்த பொக்கிஷம் அது. :)

    ReplyDelete
  9. பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
    உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
    www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
    எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

    ReplyDelete