Saturday, May 1, 2010

எனது காட்ஃபாதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

மே 1 என்றாலே அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது தொழிலாளர் தினம் தான். ஆனால், என்னைப் போன்றவர்களுக்கு இத்தினம் தொழிலாளர் தினமோடு நின்றுவிடவில்லை. இன்று ஒரு முக்கியமான நாள். எங்கள் 'தல' அஜித்தின் பிறந்த நாள். இன்று அவர் தனது 39-ஆவது பிறந்த நாளை எட்டி இருக்கின்றார்.


வெற்றியோ தோல்வியோ இரண்டையும் கையாளும் பக்குவம் இவரிடம் நிறைந்திருக்கிறது. தொடர்ந்து போராடும் குணம் உடைய இவரை, பொதுவாகவே தன்னம்பிக்கையின் சிகரம் என்பார்கள். எதற்காகவும் யாருக்காகவும் தனது தன்மானத்தையும் சுய மரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டார். தனக்கு சரி என்று பட்டால், நிச்சயம் அதனைச் செய்ய தயங்காதவர் இவர். போக விட்டு பின்புறம் பேசுவது இவருக்கு பழக்கமில்லை. எதையும் நேருக்கு நேராக எதிர் கொள்ளும் ஆற்றல் மிக்கவர். அதனாலோ என்னவோ, பொதுவாகவே சினிமா துறையில் இவரை எல்லாருக்கும் பிடிக்கும்.

எல்லாவற்றிற்கும் மேல், இவர் குணத்தில் தங்கம். வாழ்ந்தால் இவரைப் போல வாழ வேண்டும் என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். பிறருக்கு உதவும் செய்திகளைக் கூட வெளியில் கசிய விடாதவர். தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தாற் போல வாழ்ந்து காட்டுகிறார். ஒரு நடிகராக அப்பாற் பட்டு மோட்டார் சைக்கிள், கார் பந்தயம், புகைப்பட வள்ளுனர், மரங்கள் நடுதல் மற்றும் ஏரோ மோடலிங் போன்ற பல்வேறு விசயங்களில் இவரது ஈடுபாடே இதற்கு சான்று. அதனால் தான் என்னைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அஜித் அண்ணா. உங்களை வாழ்த்த வயதில்லை. நீங்கள் சினிமாத் துறையிலும் சரி, கார் பந்தயங்களிலும் சரி, தொட்டதெல்லாம் பொன்னாகி மென்மேலும் வளர இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். அன்பான மனைவி, அழகான குழந்தையோடு நீங்கள் வாழ்க்கையில் சீர் சிறப்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ கடவுள் ஆசிர்வதிப்பாராக...

அக்டோபர் மாதம் வரை கார் பந்தயத்தில் கவனம் செலுத்துங்கள். யாரைப் பற்றியும் எதை பற்றியும் கவலை வேண்டாம். ஐம்பதாவது படம் சரவெடியாய் வெடிக்க வேண்டும். தங்களின் ரசிகன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. உண்மையிலேயே நீங்கள் சாம்பலிலிருந்து எழுந்த ஒரு 'பீனிக்ஸ்' பறவை தான். "மாதா பிதா அஜித் தெய்வம்" என்ற எனக்கு அன்றும் இன்றும் இனி என்றும் நீங்கள் தான் 'தல', ரோல் மடல், காட்ஃபாதர் எல்லாம்... தல போல வருமா...

அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். :)

8 comments :

  1. //மாதா பிதா அஜித் தெய்வம்"

    repeattu
    happy birthday thala

    ReplyDelete
  2. அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  3. A very happy birthday thala and a very happy workers/labors day!

    ReplyDelete
  4. ஜெய் பேட்டி கேட்டு கலங்கிட்டேன். பையன் நம்மள மாதிரி சினிமாத்துறையில் நுழைந்து கஷ்டப்படுறார். கலைஞர் விழாவில் தல பேசுனதுக்கு திரைத்துறையில் தைரியமா இந்த சின்ன வயசிலும் ஆதரவு தெரிவித்திருக்கான். பையன் நல்லா வரணும்.

    ReplyDelete
  5. ஆயிரம் இருந்தாலும் எங்க தல போல வருமா. தல எது செஞ்சாலும் நம்மை உற்சாகப்படுத்துகிறார். தல 50 வது படம் எப்படியும் ஒரு வருடம் ஆகும். சூப்பரா வந்து ஒரு வருடம் கட்டி வைக்கப்போறதை தியேட்டர்ல கொட்டனும். வெங்கட் பிரபு படம் பண்ண ரொம்ப ஆசைப்படுறார். தல அவருக்கு ஒரு சான்ஸ் கொடுக்கணும்பா..

    ReplyDelete
  6. @ ராஜா, Chitra, வினோத்கெளதம், Vinith,

    அனைவரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. :)

    ReplyDelete
  7. @ செல்வா அண்ணா,

    அடுத்த படத்திற்கு இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்கனுமோ... ஆம், வெங்கட் பிரபுவுடன் ஒரு படம் பண்ணா நல்லா தான் இருக்கும். :)

    ஜெய்யின் மேல் எனக்கும் ஒரு 'soft corner' உள்ளது. பையன் நல்லா வரனும். :)

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வருக. :)

    ReplyDelete