1) மங்காத்தாவின் அசூர 'ஓபனிங்'
இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஓபனிங்கை மங்காத்தா பெற்றது அனைவரும் அறிந்ததே. திரும்பிய தியேட்டர்களில் எல்லாம் மங்காத்தாதான். சில தியேட்டர்களில் அறிவிக்கப்படவேயில்லை. அவ்வளவு ஏன், இன்னும் சில தியேட்டர்களில் போஸ்டர்கள் கூட ஓட்டாமல் மங்காத்தா திரையிடப்பட்டது. கேஸினோ போன்ற தியேட்டர்களில் அறிவிக்கப்படாமலே மூன்று நாட்கள் திரையரங்கு நிறைந்த காட்சிகள். பல மல்ட்டி ப்ளெகஸில் யுவன் யுவதி படக்காட்சியை ரத்து செய்துவிட்டு மங்காத்தாவை ஓட்டினார்கள். தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு மலயாள தேசத்திலும் கூட பெரிய ஓபனிங் பெற்றதை, கண்டிப்பாக தயாரிப்பாளர் முதற்கொண்டு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே, 'கிங் ஆப் ஓபனிங்' அஜித் அவர்களின் படங்கள் பெரிய ஓபனிங்கை பெரும் என்பதை அனைவரும் அறிவீர். இதற்கு மேலும் வளு சேர்க்க, முன்னோட்டம் ('டிரைலர்') ரசிகர்கள் மட்டுமல்லாது பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. இவ்வேளையில், எடிட்டர் பிரவின் மற்றும் ஷ்ரிகாந்த் அவர்களுக்கு தங்களது அசத்தலான டிரைலருக்காக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டார், இனி எப்படி இவருக்கு ஓபனிங் கிடைக்கும் என்று வாய் சவடால் பேசிய 'சிலர்' வாயை ஒரேடியாக அடைத்தார். இதை பிற நடிகர்களும் சரி அவர்களது ரசிகர்களும் சரி, நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ரசிகர் மன்றங்களை வைத்தே பெரிய ஓபனிங் பெறலாம், படத்தை வெற்றி பெற செய்திடலாம் என்ற தமிழ் சினிமாவில் எழுதப் படாத கூற்றை தவறென்று நிரூபித்தார். உண்மையைச் சொல்லப் போனால், 'கிங் ஆப் ஓபனிங்' மங்காத்தாவின் மூலம் 'எம்பெரர் ஆப் ஓபனிங்' ஆனார்.
2) மங்காத்தாவின் வெற்றி
இப்படத்திற்கு எத்திசையிலும் வெற்றி முழக்கம், பட்டி தொட்டியெல்லாம் பட்டயைக் கிளப்பியது. தமிழ் நாடு மட்டுமல்லாது மலேசியா, சிங்கை, துபாய், இன்னும் திரையிட்ட இடத்திலெல்லாம் அமோக வரவேற்பு. தல அஜித்தின் 'சால்ட் அன்ட் பெப்பர் லுக்' பரவலாக பேசப்பட்டது. கடைசிவரை பணத்தின் மேல் கொண்ட வெறி, உடல் மொழி, 'நெகடிவ்' கதாபாத்திரம், நடனம், 'ச்க்ரீன் பிரசன்ஸ்' என ஓவ்வொரு விஷயமும் வெகுஜன மக்களுக்கு பிடித்துப்போனது. ரசிகர்ககளைப் பற்றி சொல்லவே வேண்டாம். சால்ட் அன்ட் பெப்பர் லுக்கோடு கல்லூரி விழா மற்றும் பொது நிகழ்சிகளில் வளம் வந்து மங்காத்தா பாடல்களுக்கு ஆடிப் பாடினர். மங்காத்தா இவ்வாண்டில் வெளிவந்த அனைத்து படங்களையும் வசூலில் முறியடித்து புதியதோர் சாதனை படைத்துவிட்டது. சென்னயில் மட்டும் இதனது வசூல் கிட்டதட்ட 9 கோடியைத் தொட்டுள்ளது. தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் முதல் சைக்கிள் 'டோக்கன்' விற்பவன் வரை அனைவரும் பணம்(லாபம்) பார்த்தனர். வெங்கட் பிரபுவிற்கும் அவரது ஒட்டுமொத்த பட குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் கலந்த பாராட்டுகள். படத்தை வெளியிட்ட சன் நிறுவனம் மங்காத்தா மொத்தத்தில் 130 கோடிகள் வரை வசூலித்திருப்பதாக அன்மையில் தகவல் வெளியிட்டுள்ளது. இது உண்மை எனும் பட்சத்தில், முதலீடை விட இந்த தொகை மூன்று மடங்காகும். அதன் இணைப்பை கீழே காண்க.
அன்மையில் மக்களை கவரும் படங்கள் இல்லாத காரணத்தினாலும், சில பல பெரிய நடிகர்களின் படங்கள் மண்ணைக் கௌவியதனாலும், மங்காத்தா சென்ற வாரத்திலிருந்து மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான படங்களை ஓரங்கட்டிவிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் மங்காத்தாவை மேண்டும் ரிலீஸ் செய்துள்ளனர். இது பொங்கல் வரை நீடிக்கும். இதற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
3) கூகில் தேடலில் (படங்கள் பிரிவு) மங்காத்தா
சமீபத்தில் கூகிளில், படங்கள் பிரிவில் 2011 ஆம் ஆண்டில் மிக விமரிசியான அல்லது அதிக அளவில் தேடப்பட்ட படங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இது இந்திய அளவில் எடுக்கப்பட்ட 'டாப் டென்' பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது. 'பாடிகார்ட்', 'ரா ஒன்', 'டெல்லி பெள்ளி' என இந்தி படங்கள் ஆக்கிரமித்திருக்கும் இப்பட்டியலில், தமிழ் சினிமாவிலிருந்து மங்காத்தா மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. இதில் மங்காத்தாவிற்கு 7 ஆவது இடம். தல அஜித்திற்கும் மங்காத்தா படகுழுவினருக்கும் மீண்டும் ஒரு சபாஷ். முழு பட்டியல் விவரமும் இதனது சன் தொலைக்காட்சி கானொலி இணைப்பும் கீழே.
4) 2010 இல் மக்களைக் கவர்ந்த 50 ஆண்களில் அஜித்
இந்திய அளவில், மக்களுக்கு பிடித்துப்போன 50 ஆண்களில் அஜித் இடம் பெற்றுள்ளார். அழகு, கவர்ச்சி, வசீகரம், பிரசித்தி, சிறப்பு, சாதனை, வெற்றி சதவிகிதம் போன்ற பல்வேறு கூறுகளை கருத்தில் கொண்டு இணயத்தின்வழி வாக்களிப்பு நடத்தப்பட்டது. 31 டிசம்பர் மாதம் 2010 வரை நீடித்த இந்த வாக்களிப்பில் ரசிகர்களும் பொது மக்களும் தங்களைக் கவர்ந்தவர்களுக்கு வாக்களித்தனர். நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இயக்குணர்கள் அடங்கிய அந்த 50 ஆண்களில் தமிழ் சினிமா பிரபலங்களை விரல் விட்டு என்னலாம். அஜித் 18 ஆவது இடத்தைப் பிடித்தார். என்னைப் பொருத்தவரை இது கண்டிப்பாக ஒரு சாதனை தான். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். போட்டியின் முழு விவரம் அறிய இங்கே செல்லவும். வாக்குகளின் வழி தெரிவு செய்யப்பட்ட அந்த 50 ஆண்கள் பட்டியலை கீழே காணலாம்.
இணையதள ஆய்வாளரான சிரில் அலெக்ஸ் என்பவர் சமீபத்தில் நீயா நானா எனும் நிகழ்ச்சியில், கூகிலில் அஜித் அதிகம் தேடப்படுபவர் என்றுள்ளார். இக்கூற்று 2011ஆம் ஆண்டு மட்டுமல்லாது, பொதுவாக கூறப்பட்டதென்பதோ உண்மை தான். இருப்பினும், 2011ஆம் ஆண்டும் நிச்சயம் இதில் அடங்கும் பட்சத்தில் இதனை தாராளமாக சென்ற வருட சாதனைகளில் சேர்க்கலாம். அதன் கானொலி இதோ.
ஆக, 2011-ஆம் ஆண்டு கண்டிப்பாக அஜித் அவர்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. அதேசமயத்தில், அவரது ரசிகர்களுக்கு 2011 ஒரு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
2011 ஆண்டில் நம் தல அஜித் அவர்களுக்கு 40 வயது பூர்த்தியாகிவிட்டது. வாழ்த்த வயதில்லை, அவர் தொழிலிலும் வாழ்விலும் மென்மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஆக, 2011-ஆம் ஆண்டு கண்டிப்பாக அஜித் அவர்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. அதேசமயத்தில், அவரது ரசிகர்களுக்கு 2011 ஒரு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
2011 ஆண்டில் நம் தல அஜித் அவர்களுக்கு 40 வயது பூர்த்தியாகிவிட்டது. வாழ்த்த வயதில்லை, அவர் தொழிலிலும் வாழ்விலும் மென்மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பி.கு இது முழுக்க முழுக்க கமல்-ரஜினி இருவரையும் சேர்க்காமல் எழுதியது.