வழக்கம் போல, இணைய தளங்கள் மங்காத்தாவைப் பற்றிய பல்வேறு செய்திகளைப் பரப்பி வருகின்றன. ஒரு வழியாக படப்பிடிப்பு வரும் அக்டோபர் இருபதாம் தேதியிலிருந்து ஆரம்பம் என்று படத்தின் இயக்குணர் வெங்கட் பிரபு அறிவித்துவிட்டார். அடுத்த வருடம் 'சம்மர்' ரிலீசாம், குறிப்பாக மே ஒன்றாம் தேதியில் படம் வெளிவரும் என்று இயக்குணர் உறுதிமொழி அளித்துள்ளார். சொன்ன தேதியில் வருகின்றதா என்று பார்ப்போம்.
இதுவரை நமக்கு தெரிந்த தகவல்களின் படி, வெங்கட் தனது ஆஸ்தான 'டெக்னிகல் டீமையே' இதிலும் பயன்படுத்துகிறார். இசைக்கு யுவன், ஒளிப்பதிவுக்கு சக்தி சரவணன் என்று தனது முந்தய படங்களான சென்னை 28, சரோஜா, கோவா போன்றவற்றில் பணிபுரிந்தவர்கள் தான் இதிலும். சந்தோசம் தான்.
இவ்வளவு 'டெக்னிகள்' விசயங்கள் தெரிந்தும், படத்தின் துணை நடிகர்கள் யார் யார் என்பது இன்னும் சரிவர தெரியாத நிலையில் அஜித் ரசிகர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனர். நாகர்ஜுனா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பிரேம்ஜியும் இன்னும் ஒரு புது முக நடிகரும் கூட நடிக்கவுள்ளனர் எனத் தெரிகிறது. இப்படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எடுக்கவுள்ளதால், அஜித்தும் நாகர்ஜுனாவும் தத்தம் பாத்திரங்களை மாற்றிக் கொள்ளப் போகிறார்களாம். அதாவது, அஜித்தின் ரோலை தெலுங்கில் நாகர்ஜுனாவும், தெலுங்கில் நாகர்ஜுனாவின் ரோலை தமிழில் அஜித்தும் பண்ணப் போவதாக கூறப்படுகிறது. நல்ல விசயம் தான். 'தல'-யை 'ஃபுள் & ஃபுள்' வில்லன் ரோலில் பார்த்து நீண்ட நாளாயிற்று. ரசிகர்களுக்கு விருந்து தான்.
அது கூட பரவாயில்லை. படத்தின் நாயகிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. முதலில் அனுஷ்கா என்றார்கள். பிறகு, லக்ஷ்மி ராயும் நீத்து சந்திராவும் என்றார்கள். நீத்துவின் பெயர் எதோ கிரிக்கெட் விளையாட்டின் சூதாட்டத்தில் அடிபட்டதால், படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்று செய்தி கசிந்தது. பின்னர், திரிஷாவை ஒப்பந்தம் செய்தாகிவிட்டது என்றனர். இதற்கிடையில், ஜெனெலியாவும் சினேகாவும் பரிசீலனையில் உள்ளனர் என்று இன்னொரு செய்தி. கடைசியாக, வெதிகாவும் பட்டியலில் சேர்ந்தாயிற்று.
கோவாவிற்கு பிறகு இவ்வளவு நாளாகியும், அதீத வேகத்தில் பட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வெங்கட் பிரபுவின் சுறுசுறுப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. ஏன் இப்படி? அஜித் தானே என்ற எலக்காரறமா? அல்லது நண்பன் தானே, அஜித் ஒன்றும் கேட்க மாட்டார் என்ற அலட்சியமா? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
இனி இவர்கள், 'photoshoot' தொடங்கி, படத்தை ஆரம்பித்து, படபிடிப்பை முடித்து, இசை வெளியீடு நடத்தி, படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வரும்வரை ரசிகர்களின் பாடு திண்டாட்டம் தான். நல்லபடியாக படத்தை முடித்தால் சரி...
Thursday, September 30, 2010
Subscribe to:
Posts
(
Atom
)