Thursday, January 31, 2013

அரசியல் வேறு சினிமா வேறு. அரசியலையும் சினிமாவும் கலக்காதீர்




மேற்கண்ட‌ காட்சியை தமிழ் சினிமா பார்க்கும் யாராலும் மறந்திருக்க‌ முடியாது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த சம்பவம் என்றும் காலத்தால் அழியாத ஒன்று.

ஒரு பாராட்டு விழாவில், அரசியலும் சினிமாவும் வேறு, இரண்டையும் ஒன்றாக கலக்காதீர் என்று அனைவரது முன்னிலையிலும் எடுத்துரைத்தார்.
அதன் பின் அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

அப்போது தனக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல் ந‌டந்து கொண்ட கமலுக்கு தற்போது தன்னை சுற்றி நிகழும் அனைத்து நிகழ்வுகளும் மேற்கண்ட சம்பவத்தை கண்டிப்பாக நினைவுகூற வழிவகுத்திருக்கும்.
பல் வலியும் வயிறு வலியும் அவரவருக்கு வந்தால் தான் புலப்படும் என்று அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்தது மிகச் சரியே.

அது போகட்டும், தேனி, மதுரை இன்னும் பிற‌ மாவட்டங்களில் ரஜினி ரசிகர்களோடு சேர்ந்து அஜித் ரசிகர்களும் கமலுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதை கேள்வியுரும் போது மிக சந்தோஷமாக உள்ளது, பெருமையாக இருக்கிறது.

ஒரு படத்தை எடுத்து அதனை வெளியிடுவதென்பது, ஒரு தாய் பத்து மாதம் தன் குழந்தையை ஈன்று, பெற்றெடுப்பதற்கு சமம் என்ற வடிவேலுவின் வசனம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. உண்மை.

தமிழக அரசு, தன் அரசியல் 'லீலைகளை' உடனே நிறுத்தி, இந்த முற்றுகைக்கு கூடிய விரைவில் ஒரு முற்றுபுள்ளி வைத்து, விஸ்வரூபம் அனைத்து திரையரங்கிளும் வெற்றிரூபமாக நடை போட கடவுளை பிரார்த்திகிறேன்.

No comments :

Post a Comment