கடந்த 20-ஆம் தேதியில், நான் மகான் அல்ல படம் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாட்களுக்குப் பின், அஜித் ரசிகர்கள் அன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர். இப்படத்துடன் தல அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா பட 'டீசரும்' வெளியிடப்பட்டதே அதற்கு காரணம். ஒரே தயாரிப்பாளர் இவ்விரு படங்களையும் தயாரித்ததால்/தயாரிப்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. என்ன தான் சிலர் ஏற்க மறுத்தாலும், நான் மகான் அல்ல படத்தின் பெரிய 'ஒபெனிங்கிற்கு' மங்கத்தா 'டீசரும்' ஒரு முக்கியக் காரணம் என்பது அசைக்க முடியாத உண்மை. பல இணைய தளங்கள் இதனைப் பற்றி குறிப்பிட்டிருந்தாலும், ஒரு சிலர் அதனை நம்பாத மாதிரி நாடகம் ஆடுவதைக் கண்டால் சிரிப்பாக வருகிறது. சரி, வழக்கம் போல அந்த மகான்களை 'சீரியஸாக' எடுக்காமல் 'டீசருக்கு' வருவோம்.
சுமார் ஒரு நிமிடம் ஒன்பது வினாடிகள் பயணிக்கும் இந்த 'டீசர்', கருப்பு வெள்ளை தொனியில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த துணை நடிகர்களும் இல்லை, அஜித் மட்டும் தான். கருப்பு கண்ணாடி அணிந்து, துப்பாக்கியை சரி செய்தவாறு, 'மங்காத்தா டா' என்று வசனம் பேசுகிறார். பின்னனி இசையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். யுவனின் உழைப்பு நன்கு தெரிகிறது. 'வெஸ்டர்ன் கிலாஸிக்கல்' (Western Classical) இசையைப் பயன்படுத்தியிருக்கிறார். சீரியசாக காண்பிக்கப் படும் 'டீசரை', தன் பின்னனி இசையின் மூலம் ஒரு ஜாலியான உணர்விறகு மாற்றியிருக்க்கிறார் எனலாம். படம் முழுக்க இவரின் பாடல்களும் பின்னனி இசையும் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.
'டீசர்' பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், அது மீண்டும் கண்ணாடி, துப்பாக்கி என்று முந்தைய மூன்று படங்களான பில்லா, ஏகன், அசலின் சாயலை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு கண்ணாடி, துப்பாக்கி, கோர்ட் உடை போன்றவற்றை அஜித் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களில் ஒரு பகுதியினர் சகித்துக் கொள்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன்.
இப்படி தான் படம் இருக்கப் போகிறது என்று ஒரு அறிமுகம் செய்யவே இது முனைகிறது. என்னால் இந்த டீசரை வைத்து எந்த ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை. டீசர் என்றாலே ஒரு கிண்டலுக்காக எடுக்கப்படும் குறும்படம் என்பார்கள். இயக்குணர் வெங்கட் பிரபுவும் இதையே சொல்லியிருக்கிறார். முந்தைய படங்களின் சாயல் கொண்டே அஜித்தைக் காண்பித்து ரசிகர்களைக் கிண்டலும் கேலியும் பண்ணியிருப்பதாகவும், கவலை வேண்டாம், படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் முகப்புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். பார்ப்போம்.
அஜித, வெங்கட் பிரபு, யுவன் மற்றும் மங்காத்தா படத்தில் பணி புரியும் அனைவருக்கும் 'ஆல் தி பெஸ்ட்'...
மங்காத்தா பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்... :)
Best wishes!
ReplyDelete:)
ReplyDeleteநண்பரே அவர் உச்சரிக்கும் அந்த வார்த்தை என்ன என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை. தியேட்டரில் அவ்வளவு ஆர்ப்பாட்டம். நீங்கள் சொல்லித்தான் தெரியும் அது "மங்காத்தாடா" அப்படின்னு...
ReplyDeleteதல நிச்சயம் இதுல கோட் கண்ணாடி போட்டு நடிக்க மாட்டார்...
ReplyDeleteதல-க்கு கோர்ட், கூலிங்க் கிளாஸ், போட்டு துப்பாக்கி குடுத்தா சும்மா டக்கரா தான் இருக்கும். விடுங்க ஜி படம் வரட்டும் பாப்போம்.
ReplyDelete@Chitra Ji - Thanks. Thanks for dropping by. :)
ReplyDelete@Vinoth Goutham - Thanks for dropping by. :)
@பாலா
ReplyDeleteநண்பரே, ஆல்பர் தியேட்டரில் நம்ம பசங்க பண்ண ஆர்பாட்டத்தை 'Starajith'-இல் பார்த்தேன். உதிரிபூக்கள் எல்லாம் கொண்டு சென்று அமர்களப் படுத்தி விட்டனர். வியந்து போனேன்... :)
@"ராஜா"
ReplyDeleteஅது தான் எனக்கும் வேண்டும். பார்ப்போம். :)
@ராஜா
ReplyDeleteநல்லா தான் இருக்கும். வேர எந்த பய புள்ளைக்கு (இன்றைய நடிகர்கள் வரிசையில்) அந்த screen presence இருக்கு? படம் வரட்டும், பார்ப்போம். :)