
நடிகராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்து, பின்னர் அசல் படத்தில் துணை இயக்குணராகவும் பணி புரிந்தார். அடுத்த கட்டமாக, 'தல' தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதனை 'ஸ்டாரஜித்' (Starajith) இணையதளமே உறுதி செய்தாகிவிட்டது. 'குட் வில்ஸ் என்டர்டைய்ன்மென்ட்' (Good Will Entertainment) என்று தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரும் சூட்டிவிட்டார். தயாரிப்பு பொறுப்புகள் அனைத்தும் மனைவி தான் பார்த்துக் கோள்ள போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இனி தன் சொந்த படபிடிப்பு போக, தான் தயாரிக்கும் படங்கள் படபிடிப்பிலும் மிகவும் 'பிசி' ஆகிவிடுவார்.
இது நல்லதா அல்லது கெட்டதா என்று சொல்லத் தெரியவில்லை. இவரின் இந்த முடிவை நல்லபடியான கண்ணோட்டத்திலே எடுத்துக் கொள்கிறேன். என்ன தான் இருந்தாலும் 'உடல் மண்ணுக்கு உயிர் தல அஜித்திற்கு' என்று வாழ்பவன் நான். இந்த முடிவிற்கும் எனது முழு ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.
நிறைய புதிய இயக்குணர்களிடமும் அறிமுக இயக்குணர்களிடமும் கதைகள் கேட்டு வருகிறார் போலும். தயாரிப்பாளர் அஜித் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். என்னைப் பொருத்தவரை வளர்ந்து வரும் புதிய இயக்குணர்களுடன் பணி புரியலாம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 'ஸ்கிரிப்டும்' கையுமாக கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களுக்காக தவம் கிடப்பது நாம் அறிந்ததே. பலருக்கு பல விதமாக வெளியில் தெரியாதவாறு உதவிகள் செய்த, செய்யும், செய்யப் போகும் அஜித் அவர்கள் இனி தன் நிறுவனத்தின் மூலம் இவர்களைப் போன்ற சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு உதவ முன் வரலாம். மேலும், நாளைய இயக்குணர் நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்திற்கு வரும், இனி வரப் போகும் துடிப்பான இளைஞர்களுக்கும் தாராளமாக வாய்ப்பு வழங்கலாம்.
மேலும் மிஸ்கின், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், சமுத்திரகனி, பாண்டிராஜ் போன்றோருடன் அவ்வப்போது படங்கள் பண்ணுவது சிறப்பு. இவர்களது கதைக்களம், சுவாரசியமான திரைக்கதைகள் அமைப்பு மற்றும் இயக்கம், மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இவர்கள் குறைந்த 'பட்ஜெட்டில்' ரசிக்கும்படியான படங்கள் எடுப்பதோடு, இவர்களது படைப்புகளும் விருதுகள் பெறும் தகுதிகள் உடையவை என்று சொன்னால் அது மிகையில்லை.
ஆக மொத்தத்தில், நல்ல படங்கள் பண்ணால் சந்தோஷம். இந்த நிறுவனம் சிறப்பான படங்கள் தர எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திகின்றேன்.

இது ஒரு நல்ல ஊக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விசயம், கண்டிப்பாக பண்ணலாம் என்றாலும் சரி, இவருக்கு எதற்கு இந்த வீணற்ற வேலை என்றாலும் சரி, நண்பர்களே, அஜித் தயாரிப்பாளராக உருவெடுப்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.