“ I have no news about it, for the last few months I have no contact with Ajith. At the moment my focus is on my Hindi VTV remake.”

அதாவது, தான் அஜித்தின் ஐம்பதாவது படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு சரி, அஜித்துடனோ அல்லது த்யாநிதி அழகிரியுடனோ (தயாரிப்பாளர்), அவருக்கு சில மாதங்களாக தொடர்பே இல்லை என்கிறார். அதுமட்டுமில்லாமல், தனது முழு கவனமும் இப்போது ஹிந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவில் திரும்பிவிட்டது என்று சொல்லி என்னைப் போன்ற பலர் 'தல'யில் பாறையைத் தூக்கிப் போட்டுள்ளார்.
தல, என்ன இது? இதனைக் கேள்விப் பட்டதும், பயங்கர கோபம் எனக்கு. இதற்கு பெயர் தான் அலட்சியம் என்பார்கள். உங்களைப் பொருத்தவரை நடிப்பு வெறும் தொழில் என்றீர்கள். சரி, அது என்னமோ உண்மை தான். ஆனால், உங்கள் தொழிலிலில் ஒரு அக்கறை வேண்டாமா?
என்ன நடக்கப் போகிறது என்று நான் சொல்லவா? எப்படியும் கார் பந்தயம் முடிந்து அக்டோபரில் மீண்டும் சினிமாவிற்கு திரும்பி விடுவீர்கள். அதற்கிடையில், கௌதம் தன் ஹிந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவில் மூழ்கி இருப்பார். ஒன்று உங்களை அவரது படம் முடியும் வரைக் காத்திருக்கச் சொல்வார், இல்லையேல் முடியாது என்று ஒதுங்கிக் கொள்வார். உங்களது 'கால்ஷீட்டை' விரயமடிக்க விரும்பாத தயாரிப்பாளர், வேறு இயக்குணருக்கு மன்றாடுவார். கடைசியில் ஒரு மொக்கை இயக்குணர் சிக்க, நீங்களும் பரிதாபப் பட்டு, ஒத்துக் கொள்வீர்கள். ஏகன், அசல் வரிசையில் இன்னொரு அமர காவியம். இது தானே உங்கள் விருப்பம்?

நீங்கள் கார் பந்தயத்திற்கு போனது எல்லாம் உங்கள் விருப்பம். எனக்கு அதில் துளியும் வருத்தமில்லை. ஆனால், அதே சமயம், உங்கள் 'தொழிலில்' சற்று கவனம் செலுத்த வேண்டாமா? ஏனென்றால், அது தான் நிரந்தரம். நீங்கள் அவ்வப்போது கிடைக்கும் சிறிய ஓய்வுகளில் சென்னை வருக்கிறீர்கள். அந்த சமயங்களில், இயக்குணருடனும் தயாரிப்பாளருடனும் கதை விவாதத்தில் ஈடுபடலாம்; படத்தின் இதற நிலவரங்களைப் பற்றி ஆலோசனை நடத்தி அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்போது தான் உங்கள் நாட்டம், அக்கறை, ஈடுபாடு அவர்களுக்கு புலப்படும். இல்லையேல், அவரவர் தத்தம் வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவார்கள். அதைத் தான் கௌதம் இப்போது செய்கிறர்ர். அவர் மேல் தவறு கூற மாட்டேன். கண்டிப்பாக தவறு உங்கள் மீது தான்...
பி.கு ஒரே ஒரு வேண்டுகோள். கௌதம் மேனன் உங்களது ஐம்பதாவது படத்தை இயக்கவில்லையேல், தயவு செய்து வேறு ஒரு நல்ல கைத்தேர்ந்த இயணரைத் தேர்வு செய்யுங்கள்...